கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர் :
கற்பித்தல் அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்பு வெறுப்பற்ற முறையில் கற்பித்தல் நிகழ்தல் வேண்டும். மாணவனுக்குள் தகவல்களைத் திணிப்பதாகக் கல்வி இருத்தல் கூடாது:
அது அவனது ஊக்கத்தைத் தூண்டுவதுடன் தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருத்தல் வேண்டும் என்றும் சுற்றல், கற்பித்தலின் உயர்ந்த குறிக்கோள் பற்றி அண்ணல் அம்பேதகர் குறிப்பிடுவார்.
அம்பேத்கர் 1946-ஆம் ஆண்டு மக்கள் சுல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார். இவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
முதல் உரிமைப் போர் :
மூடநம்பிக்கைகளும் தீய பழக்கங்களும் சமுதாயத்தை அழித்துக் கொண்டிருந்தபோது சமுதாயத்தை சமப்படுத்துவதற்காக சிந்தனையாளர்கள் பெரிதும் போராட வேண்டியிருந்தது.
ஆண்டு மார்ச்சுத் திங்கள் 20ஆம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் மனி, உரிமைக்காக முதலில் நடத்தப்பெற்ற போராட்டம் ஆகும்.
விடுதலை உணர்வு :
இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும் என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி எடுத்துரைத்தார். முழுமையான விடுதலையைக் கண்டிப்பாக வழங்க வேண்டும்; அதற்கு முன்னர்த் தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.
வட்டமேஜை மாநாடும், உரிமைக்குரலும் :
வட்டமேஜை மாநாடு 1930-ஆம் ஆண்டு நடைபெற்றது. அம்மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் கலந்து கலந்து கொண்டார்.
அம்மாநாட்டில், “அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று, தனது கருத்தைத் தொடங்கினார். மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியையே நாங்கள் விரும்புகிறோம் வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை.
எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தாலொழிய, எங்கள் குறைகள் நீங்காது என மொழிந்தார். ஒடுக்கப்பட்டோரின் இவ்வுரிமைக் குரல் வட்டமேஜை மாநாட்டின் வழியே உலக அரங்கில் எதிரொலித்தது.
சட்டமேதை :
விடுதலைக்குப் பிறகு சட்ட அமைச்சராக அம்பேத்கர் பொறுப்பேற்றார். அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பலரும் செயல்படாமல் விலகினர். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார்.
பொருளாதார வல்லுளர் :
பொருளியலில் பெரும் புலமை பெற்று விளங்கியதால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை அணுகியும், நுணுகியும் ஆராய்ந்து பார்க்க இவரால் முடிந்தது. தொழில் துறையில் பொருளாதார வளர்ச்சி அடைவதற்குப் புதிய புதிய கருத்துகளை வெளிப்படுத்தினார்.
மக்கள் கல்விக் கழகம் :
அம்பேத்கர், 1946ஆம் ஆண்டு, மக்கள் கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்.
மும்பையில் இவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.