ஆவணச் சான்றுகள் :
அயல்நாடுகளில் இருந்து வந்த தூதுவர் சமயத் தொண்டாற்ற வந்தவர், வாணிகத் தொடர்பாளர். சுற்றுலாப பயணி என இந்தியாவைக் காணவந்த அயல் நாட்டவர் பலர். அவர்கள் எழுதிய பயணக் குறிப்புகளும் நூல்களும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பற்றியும் சில செய்திகளை அறியத் துணை புரிகின்றன.
அயல்நாட்டினர் குறிப்புக்கள்
சந்திரகுப்த மௌரியனின் அரசவையில் இருந்த கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் ‘இண்டிகா’ என்ற நூலை எழுதினார். அதில் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பாண்டிய அரசு சிறப்புடன் விளங்கிய செய்தி காணப்படுகிறது.
உரோமானியராகிய ஸ்திராபோவின் வரலாற்றுக் குறிப்பு, தமிழக அரசுகளுக்கும் உரோமப் பேரரசுக்கும் இருந்த அரசியல் வாணிகத் தொடர்பினை விளக்குகிறது.
அகஸ்டஸ் மன்னரிடம் பாண்டிய நாட்டினர் தூதராகச் சென்றதும், பாண்டியர் தலைநகரம் கொற்கையிலிருந்து மதுரைக்கு மாறியதும் ஸ்திராபோவின் குறிப்புகளால் தெரிய வருகின்றன.
பிளீனி எழுதிய ‘இயற்கை வரலாறு’ என்ற நூலில் தமிழகத்தின் மேலைக் கடற்கரையில் இருந்த துறைமுகங்கள் பல குறிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் பெயர் தெரியாத ‘தென்கடல் வாணியச் செலவு’ என்ற நூல் தமிழகத்தை ”பிரிகே’ என்று குறிப்பிட்டு விளக்குகிறது.
எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் என்ற கிரேக்க நூல் தமிழகத்திற்கும் உரோமாபுரிக்கும் இடையே இருந்த வாணிகத் தொடர்பு பற்றிய செய்திகளை அறிவிக்கிறது.
கி.மு. முதல் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய தென்னிந்தியத் துறைமுகங்கள், வாணிக நகரங்கள் அங்கு வாழ்ந்த மக்கள் ஆகியவை பற்றியும் விளக்குகிறது.
தாலமி எழுதிய ‘உலக வரைபடம்” என்ற நூலில் தென்னிந்தி யாவைப் பற்றிய செய்திகள் உள்ளன.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவமிசத்தில் சிலப்பதிகாரச் செங்குட்டுவன் கால அரசன் கயவாகு பற்றிக் குறிப்பிடுகிறது.
கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முள்ளர் வாழ்ந்த பான்சு காஞ்சியை ஹாங்செ என்று குறிப்பிடுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டினரான ஆன யுவான் சுவாங் மூலம் காஞ்சிபுரம் பற்றிய செய்திகளை அறிகிறோம். சீன நாட்டுக்குத் தூது சென்ற சோழ நூதர்கள் பற்றிய குறிப்பு சீன நாட்டு சுங் வரலாற்றில் உள்ளதை சீனப் பயணி சா.ஜுகுபா குறிப்பிடுகிறார்.
அரேபிய எழுத்தாளர்களான இபுனே ஹாக்கால், ஈஸ்டாக்கி, அப்துல் ரசாக் முதலியோர் மூலமும், வெனிஸ் பயணியான மார்க்கோ போலோ, இபின் பதாதா என்ற முஸ்லிம் பயணி ஆகியோர் எழுதிய குறிப்புகள் மூலமும் தமிழர்களின் வாணிகச் சிறப்பு மற்றும் வாழ்க்கைச் ‘சூழல் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
அயல்நாட்டுத் தூதுவர்களும், பயணிகளும், தம்நாட்டில் ஆட்சி செய்த வெளிநாட்டு ஆட்சியாளர்களும், நம் நாட்டினரும் எழுதி வைத்த குறிப்புகள், அறிக்கைகள், கடிதங்கள் போன்றவை ஆவணப் பதிவுகளாக வரலாற்றை அறிய உதவுகின்றன.
வெளிநாட்டு ஆட்சியாளர் ஆவணங்கள் :
இங்கிலாந்து, பிரான்சு போர்ச்சுகல் ஹாலந்து முதலிய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வாணிகத்திற்காகவும் சமயத்தைப் பரப்பவும் வெளிநாட்டினர் பலர் இந்தியாவிற்கு வந்துள்ளனர்; நீண்ட காலம் தங்கியுள்ளனர்.
அவர்களில் பாதிரிமார்கள் பலர், அவர்களது அறிக்கைகள், கடிதங்கள், நாட் குறிப்புகள் வரலாற்றை ஆய்வு செய்ய உதவுகின்றன.
ராபர்ட் ஆர்மியின் இராணுவ நடவடிக்கைகள் என்ற நூலும் மெக்கன்சியின் கையேடும் 19-ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் அரசியல், சமூக நடவடிக்கைகளை விவரிக்கின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழக அரசியலில் கிழக்கிந்தியக் கம்பெனி இடம் பெறத் தொடங்கியது.
தமிழகத்தை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான பாளையக்காரர்களை வென்று பதினெட்டாம் நூற்றாண்டில் அவர்கள் ஆளத் தொடங்கினர்.
அவர்களின் கடிதங்கள், ஒப்பந்தங்கள், அரசு ஆணைகள், அறிக்கைகள் ஆகியவை, அக்காலத் தமிழக வரலாற்றை உணர்த்தும் சான்றுகளாய்) உள்ளன.
நாட்குறிப்பு :
பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கம்பெளியின் அலுவலராகப் பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பு 16-ம் நூற்றாண்டின் தமிழகம் பற்றிய விரிவானதும் ஆழமானதுமான பல செய்திகளைப் பதிவு செய்துள்ளது.
இலக்கியச் சான்றுகள் :
இலக்கியங்களைக் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று குறிப்பிடுவர். அவ்வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவதற்கு இலக்கியங்கள் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன.
சங்க இலக்கியங்கள் :
தமிழக வரலாற்றை அறியச் சங்க இலக்கியங்கள் உதவிபுரிகின்றன.
பழந்தமிழ் நூலான தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களான நற்றினை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு முதலியனவும் பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் முதலியனவும் தமிழரின வாழ்க்கையினையும் மன்னர் வரலாறுகளையும் விவரிக்கின்றன.
எனப்படும் நிருமுகுகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய பெருங்காப்பியங்களில் தமிழ் மன்னர்களின் ஆடசி முறை, தலைநகர்கள், நீதிமுறை, வாணிகச்சிறப்பு, கலை வளர்ச்சி, பண்பாடு ஆகியன குறித்த விரிவான பதிவுகளைக் காணலாம்.
இலக்கியங்கள் அது படைக்கப்பட்ட காலத்தையும், அக்காலச் சமுதாயத்தையும் வெளிப்படுத்து கின்றன. எனவே இலக்கியங்களும் வரலாற்றை அறிய உதவுகின்றன.
இலக்கியங்கள் கூறும் செய்திகளை அப்படியே வரலாற்று உண்மைகளாக ஏற்று, அவற்றின் அடிப்படையில் வரலாற்றை முழுமையாகத் தொகுக்க இயலாது.
எனினும் ஆழ்ந்த ஆய்வின் பிறகு அந்த இலக்கியங்களில் வரலாற்று உண்மைகளை அகழ்ந்து எடுக்குமளவு.
அவை அக்காலத்தின் கண்ணாடிகளாக விளங்குகின்றன என்பது உறுதி.
எட்டுத்தொகை :
பற்பல காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பலர் பாடிய பாடல்களைப் பொருள் குறிந்தும் பாடல் அடிகளின் அளவு குறித்தும் பாவகை குறித்தும் ஒரு முறை
வைத்துத் தொகுந்தவை எட்டுத்தொகை நூல்கள் எனப்பட்டன அவை நற்றினைா; குறுந்தொகை, ஐங்குறுநூறு. பதிற்றுப்பத்து, பரிபாடல் கவித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாகும்.
இவை அகப்பொருளின் உயர்நத தன்மைகளை விலகி நின்றபோதிலும் மக்களின் அறவாழ்வு. மன்னர்களின் வீரம், கொடைத்திறம், பழந்தமிழர் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் ஈட்டுகின்றன.
கடையெழு வள்ளல்களைப் பற்றிய செய்திகள் அவர்களின் கொடைப் பண்பு. நாட்டுவளம், புலவர் வாழ்க்கை. வறுமையிற் சொமை, முடியுடை மன்னர்கள். குறுநில மன்னர்கள், வேளிர்கள் பற்றிய செய்தி, தமிழகத்தில் நடந்த போர்கள் ஆகிய செய்திகளைப் புறநானூறு விளக்குகிறது.
தித்தன், நள்ளன், பீட்டன், பண்ணன், கோசர், மோரியர், பாரி, கொடித்தேர்ச் செழியன், அந்தி, கங்கள், கட்டி, புல்லி, நத்தர் ஆகியவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை நாம் அகநானூற்றின் மூலம் அறிகிறோம்.
பதிற்றுப் பத்து சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர் பதின்மரைப் பற்றி கூறுகிறது. சேர மன்னரின் போர், கொடை, ஆட்சி நிலை ஆகியவற்றை இந்நூல் புலப்படுத்தியுள்ளது.
பத்துப்பாட்டு
சங்காலத்துப் புலவர் எட்டு பேரால் இயற்றப்பட்ட பத்து நீண்ட தெடிய பாடல்களால் ஆனது அவை திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன இவை அரசர் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை, வீரம், கொடை, நகர அமைப்பு, பாசறை அமைப்பு ஆகியவற்றை விளக்குகின்றன
பிற மொழி இலக்கியங்கள்
வால்மீகி ராமாயணம், மகாபாரதம் போன்ற வடமொழி இதிகாசங்களில் மதுரையை ஆண்ட பழைய மன்ளர்கள் பற்றியும் கபாடபுரம் பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. மேலும் அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யரும தம் தூலில் பாண்டிய நாட்டின் முத்து வாணிகம் பற்றிக் கூறுகிறார்.
வாய்மொழிப் பாடல்கள்
இவை தவிர்த்து மக்களிடையே காலங்காலமாக வழங்கி வரும் வாய்மொழிப் பாடல்கள், கதைகள், பழமொழிகள், தாலாட்டு, ஒப்பாரி, வீரம், போட்டி, நகைச்சுவை பற்றிய பாடல்களிலும் வரலாற்றுச் செய்திகள் மணியிடை நூலாக ஊடுருவியுள்ளதைக் காணலாம்.
குறிப்பாக தேசிங்குராஜன் கதை, நல்லதங்காள் கதை, கட்டபொம்மன் கதை, ஐவர் ராஜாக்கள் கதை, வெள்ளைக்காரன் கதை போன்ற நாட்டுப்புறப்பாடல்களில் குறுநில மன்னர்களாலும் பாளையக்காரர் களாலு ஜமீந்தார்களாலும் ஆளப்பட்ட 18, மற்றும் 19-ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றுச் செய்திகளை அறிய முடிகிறது.