அறிமுகம்:
சங்க இலக்கியம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு.
இதனைப் பாடியவர் கபிலர். இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது. இஃது அகம் பற்றிய நூலாகும். அகம் என்பது காதல் வாழ்க்கையாகும்.
குறிஞ்சிப்பாட்டின் சிறப்பு ஆசிய மன்னன் பிரகதத்தனுக்கு அகத்தினைவழித் தமிழ்க் காதலின் மேன்மையினை அறிவுறுத்துவதற்காகக் கபிலர் இதனை இயற்றினார் என்ற குறிப்பு இந்நூல் தோன்றிய காரணத்தை விளக்கும்.
இந்நூல் அகத்துறைகளுக்கு ஒன்றான ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் ஒருதுறை பற்றியது. சிறந்த துறையான அறத்தொடு நிற்றலை நுட்பமாகக் காட்டும் உயிரோவியம் இது. நாடகம் காண்பது போன்றே இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சித்திணைப் பாடல்கள் சிறந்த நயங்களைக் கொண்டிருப்பதால் ‘பெருங்குறிஞ்சி’ என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது இந்நூல்.
அறத்தொடு நிற்றல் :
தமிழில் உள்ள அகத்திணை இலக்கணத்தில் நுட்பமானதும் ஏனைய மொழிகளில் அறிதற்கு அளிதானதுமான ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் துறை இந்நூலுக்குத் தனிச்சிறப்பு அளிக்கிறது.
‘அறத்தொடு நிற்றல்’ என்பது களவொழுக்கத்தைக் கற்பொழுக்கமாக மாற்றுதற்கு ஒரு தூண்டுகோலாகும். காதலித்தவனை மணக்க விரும்பிப் பெற்றோரிடம் இசைவு பெறத் தூண்டும் முயற்சியாகும்.
இதையும் படிக்க – பத்துப்பாட்டு வினாடி-வினா போட்டி
தலைவன்-தலைவி காதல் சந்திப்புக்கு – (களவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கற்பு வாழ்க்கையைத் தொடரச் செய்ய வேண்டாமா? கற்பு வாழ்க்கை, ஆன்றோர்களால் உறுதி செய்தவண்ணம் பலரும் அறிய நடக்கும் திருமண வாழ்வைக் குறிக்கும், களவிலிருந்து கற்பு வாழ்விற்கு இவ்வாறு மாற்றும் முயச்சி தோழியினுடையது.
தலைவியின் காதல் நிகழ்ச்சியை அவள்தான் செவிலிக்கு எடுத்துரைப்பாள். இந்நூல் தோழி செவிலிக்கு ‘அறத்தொடு நிற்பதாகவே’ இயற்றப்பட்டுள்ளது.
நூலாசிரியர் :
குறிஞ்சிப்பாட்டைப் பாடிய கபிலர் சக்க காலப் புலவர்களுள் ஒருவர். சங்கப் பாடல்களில் அதிகம் பாடியவர் இவரே! இவர் பறம்பு மலையைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்த பாரியின் நண்பர் பறம்பு மலையையும், பாரியையும் புகழ்ந்து பாடிய இவரது பாடல்கள் புறநானூற்றின்கண் இடம்பெற்றுள்ளன.
அடித்தினைப் பாடல்களில் குறிஞ்சித் திணைப் பாடல்களை அதிகம் பாடியுள்ளார். அகம், புறம் பற்றிய பாடல்களில் குறிஞ்சி நிலமான மலை நிலத்தைச் சிறந்த முறையில் பாடிய காரணத்தால் இவர். ‘குறிஞ்சிக்குக் ‘கபிலர்’ என்றுப் போற்றப் பெறுகிறார்.
பலவகையான வருணனைகளையும் உவமைகளையும் குறிஞ்சிப்பாட்டில் அழகுற அமைத்து நூற்பெயரையும், தன் பெயரையும் இலக்கிய உலகில் என்றும் நிலைக்கச் செய்துள்ளார் கபிலர்.
நிகழ்ச்சிச் சுருக்கம் :
தலைவியும் தோழியும் ஒருநாள் தினைப்புனம் காத்துவரச் சென்றனர். தினைக்கதீர் உண்ண வந்த கிளிகளை விரட்டிய பின்னர், மலையருவியிலும், சுனைநீரிலும் பாடி மகிழ்ந்தபடியே கண்கள் சிவக்க நீராடினர்.
பலவகையான வண்ண மலர்களைப் பாறையில் குவித்தனர், பின்னர் அசோகமர நிழலில் தங்கியிருந்தனர்.
வேட்டை நாய்கள் துரத்த, மதயானை ஒன்று பிளிறியபடியே ஓஷ் வந்தது. அவ்விருவரின் அருகே நெருங்கி வரத் தலைவன் அந்த யானையை அம்பு எய்து விரட்டினான்.
தலைவனால் தலைவி காப்பாற்றப்பட்ட இந்நிகழ்ச்சி, தலைவன் தலைவியினிடையே காதல் வளரக் காரணமாயிற்று. அவளையே மணமுடிப்பதாய் உறுதிமொழி கூறினான். இருவரின் சந்திப்பும் தொடர்ந்தது.
அச்சம் விளைவிக்கும் இரவுப் பொழுதில் தலைவியைச் சந்திக்க வந்தான் தலைவன். அவன் வரும் வழி, கொடுமையும் துன்பமும் தரும் வழியென்பதைத் தலைவி அறிந்தாள்.
அதனை எண்ணிக் கலங்கினாள். தலைவனுக்கு எண்ண நேருமோவென வலையிகைப்பட்ட மயிலாகத் தலைவி வருந்தினாள்.
இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தோழி செவிலித்தாயிடம் ஒரு நாடகம் பார்ப்பது போலவே விவரிக்கிறாள்.