பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பெரியார் கூறும் கருத்துகள்

 பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மற்றும் அன்று. அதுவே சமூக மாற்றத்திற்கும் இன்றி அமையாதது.

ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும் தாராளமாக கொடுக்க வேண்டும்.

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பெரியார் கூறும் கருத்துகள்

நாட்டில் உள்ள பெருங்கேடு பெண்களை பகுத்தறிவாற்ற ஜீவர்களாக வைத்திருக்கும் கொடுமையே ஆகும். 

பெண்ணுரிமை

பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும். அவர்கள் ஆணுக்கு இளைத்தவர்கள் அல்லர். அவர்கள் தம் கணவர்க்கு மட்டும் உழைக்கும் அடிமையாய் இருத்தல் கூடாது; மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் பெண்மணிகளாய்த் திகழ வேண்டும். 

 
 
 
 
 
 

சொத்துரிமை 

 

பெண்களுக்கு வழிவழி வரும் சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு வழிகோலியது. பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்து விட்டால், அவர்களுக்கு இருக்கும் அனைத்து விதமான அடிமைத்தனங்களும் ஒழிந்துவிடும்.

 பெண்ணடிமைத் தனத்திற்குரிய காரணங்களுள் முதன்மையானது சொத்துரிமை இல்லாததே ஆகும். எனவே, பெண்கள் துணிவுடன் வந்து சொத்துரிமைக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றார், பெரியார்.

 
 
 
 
 
 

அரசுப்பணி 

 

ஆண்களைப் போல அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும்.

 
 
 
 
 
 

கல்வி பெறாமை 

 

பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை அவர்களை வீட்டில் முடக்கி வைத்ததே. அதனால், நாட்டு நடப்பை அறியவிடாமல் அவர்கள் அறிவை மறைத்தனர். பெண்கள் மனிதப் பிறவிகளாய் நடமாட முதலில் அவர்கள் அடுப்பங்கரையைவிட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்குக் கல்வி தராமல் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருப்பது பெருங்கொடுமை என்றார். பெரியார்.  

கணவனுக்கு அடிமை :

 

பெண்கள், சமுதாயத்திற்குத் தொண்டாற்ற இயலாதவாறு தத்தம் கணவர்க்கு மட்டுமே உழைக்கும் அடிமையாய் இருந்தனர். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று கருதினார், பெரியார். 

 
 
 
 
 
 

சொத்துரிமை இல்லாமை: 

 

பெண்களுக்கு வழிவழி வரும் சொத்துரிமை மறுக்கப்பட்டது. அது, அவர்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியவற்றுள் முதன்மைக் காரணமாகும் என்றார், பெரியார்.

 
 
 
 
 
 

குழந்தைத் திருமணம்:

 

பெண்களின் உடலும் அறிவும் வளர்ச்சி பெறுமுன்பே அவர்களுக்குக் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து வைப்பது பெருங்கொடுமை என்றார், பெரியார்.

 
 
 
 
 
 

மணக்கொடை :

 

இது தமிழர்களிடையே பரவியுள்ள பெருநோய் என்று கருதினார், பெரியார். இத்தீமையை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார், பெரியார்.

 
 
 
 
 
 

கைம்மை ஒழிப்பு : 

கணவன் இறந்தால் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அன்று மறுக்கப்பட்டது. அதை எதிர்த்துப் பெரியார், கணவனை இழந்தோர் மறுமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்றார்.

 
 
 
 
 
 

இருபாலர்க்கும் பொது :

 

ஒழுக்கமும் கற்பும் பெண்களுக்கு மட்டுமே என்றில்லாமல் இருபாலர்க்கும் பொதுவாகும் என்றார், பெரியார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top