டாக்டர் எழுதி தரும் மருந்துச் சீட்டில் கிறுக்கி கண்டபடி எழுதக்கூடாது; அதை படிக்க முடியாமல் சில மருந்து கடைக்காரர்கள் தவறான மருந்துகளை கொடுத்து மக்களுக்கு பல விளைவுகள் ஏற்படுவதாக சமீபத்தில் பல்வேறு வழக்குகள் வந்தது.
“இனிமேல் டாக்டர்கள் அனைவரும் நோயாளிக்கு எழுதித் தரும் மருந்துச் சீட்டில் (Capital Letters ) பெரிய எழுத்துகளில் தான் எழுத வேண்டும்; கண்டபடி கிறுக்கி வைக்க கூடாது” என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் அனைத்திற்கும் இந்த அறிக்கை பொருந்தும்.