வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்

 பழுத்த பழம் எடுத்து வந்தான், 

இத்தொடரில் வந்துள்ள வினைச்சொற்களைப் பற்றிக் கற்றுக் கொள்வோம். வந்தான், பழுத்த, எடுத்து ஆகியன.

இவற்றுள் ‘வந்தான்’ என்பது ‘செயல்’ முற்றுப்பெற்றதனை உணர்த்துவதனால், இது வினைமுற்று ஆகும். 

இச்சொல், எந்தக் காலத்தைக் காட்டுகிறது?இறந்தகாலம் காட்டுகிறது, 

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்

வந்தான்’ என்னும் இச்சொல், நிகழ்காலத்திலும் எதிர் காலத்திலும் எவ்வாறு வரும் ?

வருகின்றான், வருவான் என வரும்,இவ்வாறு செயல் முடிந்ததனைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும்.

*வினைமுற்று என்றால் என்ன?

ஒரு வினைச்சொல்லானது எச்சப்பொருளில் அமையாமல் முழுமை அல்லது முற்றுப்பெற்று வருவது வினைமுற்று எனப்படும். அதாவது, ஒரு செயல் முடிந்ததை குறிக்கும் சொல் ‘வினைமுற்று’ எனப்படும்.

இது “முற்றுவினை எனவும் அழைக்கப்படும். மேலும் இது திணை, பால், எண், இடம், காலம் காட்டும் பயனிலையாகவும் அமையும்.

வினைமுற்று எடுத்துக்காட்டு:

  • அம்மா சமைத்தாள்.
  • பூனை பால் குடித்தது.
  • தங்கை ஆடினாள்.
  • அப்பா வீட்டிற்கு வந்தார்.
இவற்றில் சமைத்தாள், குடித்தது, ஆடினாள், வந்தார் ஆகிய வினைகள் முற்றுப்பெற்றதாக அதாவது, நடந்து முடிந்தவையாக காணப்படுகிறது. இவையே, வினைமுற்று எனப்படும்.

* வினைமுற்றின் வகைகள்

வினைமுற்றானது ஆறு வகைப்படும். அவையாவன,
  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்று
  • உடன்பாட்டு வினைமுற்று
  • எதிர்மறை வினைமுற்று
  • ஏவல் வினைமுற்று
  • வியங்கோள் வினைமுற்று

1. தெரிநிலை வினைமுற்று :

ஆறு பொருட்களான செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்பவைகளை வெளிப்படையாக காட்டு தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
தெரிநிலை வினைமுற்று எடுத்துக்காட்டு
* உழவன் நிலத்தை உழுகிறான். (இத்தொடரில் உழுகிறான் என்பது வினைமுற்று ஆகும்).
இதில் ஆறு பொருட்கள் பின்வருமாறு வெளிப்படுத்தப்படுகின்றது.
செய்பவன் – உழவன் கருவி – ஏர், மாடுகள் காலம் – உழுகிறான்
செயல் – உழுதல்
செய்பொருள் – வயல் புழுதியால்
2. குறிப்பு வினைமுற்று :
செய்பவனையும், திணை, பால்களையும் வெளிப்படையாக காட்டி காலத்தை வெளிப்படையாக கூறாமல் குறிப்பால் உணர்த்தும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.
குறிப்பு வினைமுற்று எடுத்துக்காட்டு 
பொருள்: அவன் பொன்னன். அதாவது பொன் உடையவன் என்பதனால் அவன் பொன்னன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இடம்: அவன் இந்தியன். அதாவது அவன் இந்தியாவில் வாழ்வதனால் அவன் இந்தியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* காலம்: அவள் மார்கழியாள். அதாவது அவள் மார்கழியில் பிறந்ததனால் அவள் மார்கழியாள் என்று கூறப்படுகிறது.
* சினை: அவன் கண்ணன். அதாவது அவன் அழகிய கண்களை உடையதனால், அவன் கண்ணன் எனப்படுகின்றான்.
குணம்: அவன் நல்லவன். அதாவது அவன் நல்ல இயல்புகளை உடையதனால் அவன் நல்லவன் என கூறப்படுகிறது.
தொழில்: அவன் குயவன். அதாவது இகில் அவன் குயவுத் தொழிலை செய்வதனால் அவன் குயவன் என கூறப்படுகிறது.

3. உடன்பாட்டு வினைமுற்று :

ஒரு வினையை செய்வதையோ அல்லது செய்யப் போவதையோ அறிவிக்கும் விதமாக அமைவது உடன்பாட்டு வினைமுற்று எனப்படும்.
உடன்பாட்டு வினைமுற்று எடுத்துக்காட்டு
  • வாரேன்.
  • செய்யேன்.
  • செய்யார்.
  • பெற்றான்.

4. எதிர்மறை வினைமுற்று :

ஒரு செயல் நிகழாமையை குறிப்பிடுவது எதிர்மறை வினைமுற்று.
எதிர்மறை வினைமுற்று எடுத்துக்காட்டு
  • ‘தொடுத்திலன்
  • செல்லாதீர்
  • சொல்லற்க
  • செய்யார்
  • பறித்திலன்

5. ஏவல் வினைமுற்று :

முன்னிலை இடத்தில் கட்டளை பொருளில் எதிர்காலம் காட்டி வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும். அதாவது கட்டளையிட்டு ஒரு செயலை செய் என்று கூறுவது ஏவல் வினைமுற்று ஆகும். இது ஒருமை, பன்மை உணர்த்துவதாகவும் அமைகின்றது.
I. ஏவல் ஒருமை வினைமுற்றுகள் இ, ஆ, என்னும் விகுதிகளை பெறும்.
ஏவல் வினைமுற்று எடுத்துக்காட்டு
  1. வருதி
  2. செவ்வாய்
II. ஏவல் பன்மை வினைமுற்றுகள் இன், ஈர், மின், உம் என்னும் விகுதிகளை பெற்று வருகிறது.
எடுத்துக்காட்டு
  • வருவீர்
  • வம்மீன்
  • வாரும் 

6. வியங்கோள் வினைமுற்று :

வேண்டல், விதித்தல், வாழ்த்துதல், வைதல் முதலிய பொருள்களில் மூவிடங்களிலும் ஐம்பால்களிலும் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும். இது ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாக வரும்.
வியங்கோள் வினைமுற்று எடுத்துக்காட்டு
  • வாழ்க – வாழ்த்துதல்
  • ஒழிக- ஒழித்தல்
  • செல்க-விதித்தல்
  • ஈக-வேண்டல்
  • வாழிய-வாழ்வர்,வாழ்த்துதல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top