சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரை இருபத்து ஒன்றாவது படமான SK 21 (இன்னும் பெயரிட வில்லை) படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Raj Kamal Flims International- RKFI) மூலம் சொந்த செலவில் தயாரிக்கிறார்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய தனது விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனே சொந்த செலவில் தயாரித்தார். அந்த திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இவரது தயாரிப்பு நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் 21ஆவது படமும் சிம்புவின் 48வது படமும் இவர்தான் தயாரிக்கிறார்.
ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இன்னும் பெயரிடவில்லை. தற்போது பிப்ரவரி 16 2024 மாலை ஐந்து மணிக்கு சிவகார்த்திகேயன் படத்திற்கு பெயரிட்டு டீசர் ஒன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். ஏற்கனவே ரங்கூன் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.