குறும்புக்கார குழந்தையாகவும், அன்பு நிறந்த காதலனாகவும், சர்வ உலகையும் காத்து அருளும் இறைவனாகவும் பக்தர்கள் மனதில் நிறைந்திருக்கிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தியாவில், ஒருமுறையாவது நாம் தவறாமல் பார்த்திருக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த கிருஷ்ணர் கோயில்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
1) ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குருவாயூர்
கேரளாவின் குருவாயூரில் அமைந்துள்ள இந்த கிருஷ்ணர் கோயில் சுமார் 5000 வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. திருச்சூர் மாவட்டத்தில், அமைந்துள்ள இந்த கோயில், தென்னாட்டின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது.
2) துவாரகாதீஷ் கோயில், துவாரகா
குஜராத் மாநிலம் துவாராகவில், துவாரகாதீஷ் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் பிரதான சன்னதியில் கருங்கல்லால் செய்யப்பட்ட அழகிய கிருஷ்ணர் சிலை உள்ளது. இந்த கோயில் அதன் அழகிய கட்டிடக்கலை, சிக்கலான சிற்பங்கள் மற்றும் வளமான வரலாறு ஆகியவற்றிற்காகவும் புகழ்பெற்றது.
3) ஜெகன்நாதர் கோயில், பூரி
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள பூரியில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள நீல மாதவர் விக்ரகம் பகவான் கிருஷ்ணரின் சரீரத்தின் ஒரு பகுதி என்பது நம்பிக்கை.
4) பாங்கே பிஹாரி கோயில், விருந்தாவன்
உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயில் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்களில் ஒன்றாகும். அதன் தனித்துவமான கட்டிடக்கலை, அழகான ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களுக்காக இந்தக் கோயில் புகழ்பெற்றுள்ளது.
5) ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குருக்ஷேத்ரா
குருக்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் குப்தர் வம்ச காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயில் கிருஷ்ணரின் பக்தர்களுக்கு பிரபலமான யாத்திரை தலமாக விளங்குகிறது.
6) விடலா – ருக்மணி கோயில், பந்தர்பூர்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபாகா நதிக்கரையோரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோயிலில் மிக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது.
7) ஸ்ரீ கிருஷ்ணா கோயில், உஜ்ஜயினி
இது 18 ஆம் நூற்றாண்டில் மராட்டிய ஆட்சியாளர் ரானோஜி சிந்தியாவால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கிருஷ்ணர் தனது சகோதரர் பல்ராம் மற்றும் நண்பர் சுதாமா ஆகியோருடன் இங்குள்ள குரு சாந்திபனி ஆசிரமத்தில் படித்தார் எனவும் கூறப்படுகிறது.
8) ISKCON கோயில்
![]() |
டெல்லி, மும்பை, பெங்களூரு என பல இடங்களிலும் ISKCON கோயில்கள் அமைந்துள்ளன. International Society for Krishna Consciousness அதாவது, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் என்பதன் சுருக்கமே ISKCON ঢাকা அறியப்படுகிறது.
9) ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி கோயில், மதுரா
உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மல்லப்பூரில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த புண்ணிய பூமியாக இந்தப் பகுதி அறியப்படுவதால் மற்ற எந்த கிருஷ்ணர் கோயிலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.
10) ஸ்ரீ கிருஷ்ண மடம், உடுப்பி
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான கிருஷ்ணர் கோவில்களில் ஒன்றாகும். கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும்.