குறுந்தொகை :
குறிஞ்சி நிலத்தில் தலைமகனின் வருகையை தேடி தோழியிடம் தலைவி வருந்துவது பாடலாக அமைந்துள்ளது.
கூற்று:
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி. தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
– தேவகுலத்தார்
பாடல்:
நிலத்தீனும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரளவு இன்றே, சாரல் கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
பாடல் பொருள் விளக்கம் :
மலைச்சாரலில் கரிய காம்பு உடைய குறிஞ்சிச் செடியின் மலரில் இருந்து பெருமளவு தேனைச் சேகரிக்கும் நாடனுடன் எங்கள் நட்பு நிலத்தைக் காட்டிலும் பெரிது, வானத்தைக் காட்டிலும் உயர்ந்தது. நீரைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமானது.
தலைவன் தன்னோடு கொண்ட காதலின் உயர்வை தலைவி சொல்லக்கேட்ட தலைவன் காலங்கடத்தக்கூடாது என வற்புறுத்துதல் மறைபொருள்