மேடைப்பேச்சு முக்கூறுகள்

 பேசும் பொருளை ஒழுங்கு முறைக்கு கட்டுப்படுத்தி பேச்சின் தொடக்கம் இடைப்பகுதி முடிவு என பகுத்து பேசுவதையே சிறந்த பேச்சு முறை என்கிறோம். இதனை எடுத்தல், கொடுத்தல், முடித்தல் என கூறலாம்.

எடுத்தல் :

பேச்சைத் தொடங்குவது எடுப்பு. பேச்சின் தொடக்கம் நன்றாக இல்லாவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினைக் நல்லெண்ணம் தோன்றாது தட்டுத் தடங்கலின்றிப் பேசுவதற்குத் குறித்த தொடக்கமே அடித்தளமாகும். 

இதையும் படிக்க :

கேட்போரைத் தன்வயப்படுத்தும் முறையில் பேச்சைத் தொடங்குதல் வேண்டும். அவையோர் தம் உள்ளங்களைக் கேட்பதற்குரிய பக்குவத்தில் வைத்திருக்க வேண்டும்.

மேடைப்பேச்சு முக்கூறுகள்

அவையில் இருப்போரை விளித்துச் சுருக்கமான முன்துரையுடன் பேசத் தொடங்குவதே சிறப்புடையது. பேசத் தொடங்கிய ஓரிரு மணித்துளிகளில் பேசப்போகும் பொருளில் புகுந்து விடுவது பாராட்டுக்குரியது. இடத்திற்கும் குழறுக்கும் ஏற்பத் தொடக்க உரை அமைதல் வேண்டும்.

 தொடுத்தல்

தொடக்க உரைக்குப் பிறகு பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல் எனப்படும். மலர்களின் நறுமண வேறுபாடும் நிற வேறுபாடும் உணர்ந்து அவற்றை இடையிடையே அமைத்து மாலைகள் தொடுக்கப்படுதல் இயல்பு. அதுபோலவே, இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்கக் கருத்துகளும் பிணைத்துப் பேசுவதே தொகுத்தல் எனப்படும். 

முடித்தல்:

பேச்சைத் தொடங்குவதிலும், பொருளை விரிப்பதிலும் செலுத்தும் கவனத்தை, அழகுறப் பேச்சை முடிப்பதிலும் செலுத்துதல் வேண்டும். பேச்சை முடிக்கும்போதுதான் பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனத்தில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும். பேச்சாளர் கருத்துக்கு அவையோர் இணங்குவதும் மாறுபடுவதும் அவர் தம் பேச்சின் முடிவுரையைப் பொறுத்தே அமையும்.

பேச்சின் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்?

மேடைப் பேச்சினைத் தொடங்கும் போதே எடுப்புடன் தொடங்க வேண்டும். பேச்சின் தொடக்கம் நன்றாக இல்லாவிட்டால் கேட்பவர் களுக்குப் பேச்சினைக் குறிந்த நல்லெண்ணம் தோன்றாது. தட்டுத் தடங்கலின்றிப் பேசுவதற்குந் தொடக்கமே அடித்தளமாகும். 

இதையும் படிக்க : பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரியார் ஆற்றிய பணிகள்

கேட்போரைத் தன் வயப்படுத்தும் முறையில் பேச்சைத் தொடங்குதல் வேண்டும். அவையில் இருப்போரை விளித்துச் சுருக்கமான முன்னுரையுடன் பேசத் தொடங்குவதே சிறப்புடையது. அவையோர் தம் உள்ளங்களைக் கேட்பதற்குரிய பக்குவத்தில் வைத்திருக்க வேண்டும்.

மண்ணில் ஈரப்பதம் இருந்தால் தாள் விதைக்க முடியும். அதைப்போல கேட்போரைத் தன்வயப்படுத்தி வைத்திருப்போராஸ்தான் தம் கருத்துகைைளக் கேட்போர் நெஞ்சில் பதிக்க முடியும்.

அவையில் இருப்போரை விளித்துச் சுருக்கமான முன்னுரையுடன் பேசத் தொடங்குவதே சிறப்புடையது. பேசத் தொடங்கிய ஓரிரு மணித்துளிகளில் பேசப் போகும் பொருளில் புகுந்து விடுவது நல்லது. இடத்திற்கும் குழலுக்கும் ஏற்பத் தொடக்கவுரை அமைதல் நன்று.

 பேச்சினை முடிக்கும் முறைகள் :

பேச்சைத் தொடங்குவதிலும், பொருளை விரிப்பதிலும் செலுத்தும் கவனத்தை, அழகுறப் பேச்சை முடிப்பதிலும் செலுத்துதல் வேண்டும். பேச்சை முடிக்கும் போதுதான், பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனத்தில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும். 

இதையும் படிக்க :  காந்தியடிகளின் அறவழி விடுதலைப் போர்

பேச்சாளர் கருத்துக்கு அவையோர் இணங்குவதும் மாறுபடுவதும், அவர்தம் பேச்சின் முடிவுரையைப் பொறுத்தே அமையும். நாடகக் கலை, திரைப்படக்கலை போன்றே பேச்சுக்கலையிலும் முடிவு

தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக்கூடியது எனலாம். பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top