நடிகர் விஜய் வெளியிட்ட கட்சி கொடியில் இருந்த வாகை மலர் உண்மையில் வாகை மலர் இல்லை என்றும் அது தூங்கு மூஞ்சி பூ என வதந்திகள் பரவி வருகிறது.
இந்த வதந்திகள் அனைத்தும் உண்மையா என்று விவாதித்தோம் என்றால் இது அனைத்துமே ஓரளவு உண்மை மற்றவை கட்டுக் கதைகள் தான்.
![]() |
Thalapathy vijay party flag |
தமிழக வெற்றி கழகம் கொடி வெளியிட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சை கிளம்பி உள்ளது.
முதலாவதாக இந்த கொடி ஸ்பெயின் நாட்டு தேசியக் கொடி என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
அதேபோல இந்த கொடி வெள்ளாளர் முன்னேற்ற கழகம் என்ற ஒரு சமூக அமைப்பை சார்ந்த கொடி என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் மறைந்த ஆமஸ்ட்ராங் அவர்களின் கட்சி சின்னமான யானை சின்னம் கொடியில் இருப்பதால் அதை நீக்க கோரி சிலர் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் கொடியில் இருப்பது இரண்டு யானை இங்கே யானை இருந்தால் மட்டும் பிரச்சினை வந்திருக்காது அதற்கு பதிலாக பூனை இருந்தார் கூட பிரச்சினை வந்திருக்கும். ஏனென்றால் ஏதாவது ஒரு பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்கே விஜய்யின் எதிர்பாளர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
![]() |
Surrogate flower |
தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் உண்மையில் இந்த கொடியில் இருந்த பூ வாகை பூ தான். பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பழங்காலத்தை வெற்றிக்குரிய பூதான் வாகை பூ.
வாகைத் திணை என்பது வெற்றி பெற்ற மன்னன் வாகை பூவை தலையில் சூடி நாட்டுக்கு திரும்பி வருவது ஆகும். அதைக் குறிக்கும் வகையில் வாகை பூவை தமிழக வெற்றி கழக கொடி சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.
வாகை பூவில் இரண்டு வகை உள்ளது ஒன்று வெள்ளை நிற வாகை பூ மற்றும் ரோஸ் நிற வாகை பூ.. இதில் தளபதி வைத்துள்ளது ரோஸ் நிற வாகை பூதான்!