இன்றைய காலத்தில் பெண்கள் அனைத்து விஷயத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. முக்கியமாக தங்கள் உடலை பாதுகாக்க வேண்டியது.
ஏனென்றால் இன்றைய சூழலில் சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் தான் அதிகளவு பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் குழந்தைகளின் பெற்றோர் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.
அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு :
1. தங்களது பெண் குழந்தைகளை பெற்றோர்கள் தான் 5 வயது வரை உடனிருந்து வழிகாட்டி பாதுகாக்க வேண்டும்.
2. அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் பெண் குழந்தைகள் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக விடப்படுகிறார்கள். அந்த ஆசிரியர்கள் நல்லவர்களா அவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை குழந்தைகளை விட பெற்றோர்கள் தான் அதிக கவனம் செலுத்தி உற்று நோக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்களை கூட நம்ப முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். எனவே பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளின் மீது தவறான கண்ணோட்டத்தில் செயல்பட்டாலும் அல்லது தவறான தகவல்களை கற்பித்தாலும் உடனடியாக அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
3. பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளிடம் பெற்றோர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது அல்லது பள்ளிக்கு செல்லும்போது வழியில் சாக்லேட், தின்பண்டம், பொம்மைகள் மற்றும் இதர பொருள்கள் என்னவாக இருந்தாலும் யார் என்ன கொடுத்தாலும் அதை வாங்க வேண்டாம் என்றும் தெரியாத நபர்கள் தனியாக அழைத்தாலும் செல்ல வேண்டாம் என்றும் எப்போதும் கூட்டத்துடன் இருக்க வேண்டும் என்பதை சொல்லி புரிய வைத்து அனுப்ப வேண்டும். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிக அளவில தெரியாத நபர்களால் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
4. வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பக்கத்து வீட்டில் உள்ள ஆண்கள் எதிர் வீட்டில் உள்ள ஆண்கள் அவர்களின் பார்வை தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறதா என்பதை அவள் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
5. பெண் குழந்தைகளிடம் பெற்றோர்கள் உதடு மார்பகம் மற்றும் பெண்ணுறுப்பு இடுப்பு மற்றும் இதர மறைமுக பாகங்களை தெரியாத நபர்கள் தவறான கண்ணோட்டத்திற்கு தொட்டால் உடனடியாக அருகில் உள்ள பெரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அறிவுரை வழங்க வேண்டும்.