தளபதி விஜய் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது அவரை அனைவரும் கேலி கிண்டல் தான் செய்தார்கள்.
‘இது எல்லாம் என்னடா மூஞ்சி! .. த்தூ…. இது நடிச்சு யார் படம் பார்ப்பா.. இது சினிமாவுல என்ன தான் கிழிக்க போகுது!’ அப்படின்னு எகத்தாளமாக பேசினார்கள்.
ஆனால் அது விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முதலாவதாக உயர்ந்திருக்கிறார். இப்போது உலகம் முழுவதும் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
கோடியில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர் அதை அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு மக்களுக்கு பணி செய்வதற்காக அரசியலில் கால் எடுத்து வைத்திருக்கிறார். அரசியலில் சமீபத்தில் தனி கட்சி ஒன்றைக்கூட ஆரம்பித்து விட்டார். அரசியலில் சாதிக்க சென்றுவிட்டார்.
அதேபோலத்தான் நடிகர் சூரி-யும் ஆரம்பத்தில் பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அவருக்கு முதலில் கை கொடுத்தது சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தான்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரி அனைவரும் அறியும் நடிகராக தோன்றினார். அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் அவரது நகைச்சுவைகள் மக்களுக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை என்றாலும் அவரது மதுரை வட்டார பேச்சுவழக்கு நிறைய படங்களில் வெளிப்பட்டு அவரையும் ஒரு நடிகராக நகைச்சுவை நடிகராக வெளிக்கொண்டு வந்தது.
அதன் பிறகு பல திரைப்படங்களில் மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். தற்போது சினிமாவில் அவரது உயரம் எங்கேயோ போய்விட்டது.
இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து எடுத்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘கருடன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் மற்றும் சூரி யாராக இருந்தாலும் கடின உழைப்பின்றி யாரும் முன்னேற்றம் அடைய முடியாது!