கண்ணன் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரன். கோடைவிடுமுறையில் கால்பந்து விளையாட்டுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்பினான்; பெற்றோரிடமும் ஒப்புதல் பெற்றுவிட்டான்.
எதிர்பாராதவிதமாக ஊரிலிருந்து வந்த அவனுடைய அத்தையும் மாமாவும் கோடைவிடுமுறையைத் தங்களோடுதான் கழிக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
கண்ணனுக்குக் கால்பந்து விளையாட்டுப்பயிற்சியை விடுவதற்கு மனமில்லை; பெரியவர்களின் பேச்சுக்கும் மதிப்புக் கொடுக்க விரும்புகிறான்.
இந்த நிலையில் கண்ணன் என்ன முடிவு எடுத்திருப்பான் ?
கண்ணன் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பானா? பெரியவர்களை மதிப்பானா ?
நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?
உங்களது தனிப்பட்ட கருத்துகளை Comment ல பதிவிடவும்.