அகத்தியம் பற்றி எழுதுக.
இது அகத்தியரால் எழுதப்பட்ட இலக்கண நூலாகும். இது முதல் சங்கத்தில் தோன்றி முச்சங்கத்திலும் இருந்தது; இந்நூல், முழுமம் கிடைக்கவில்லை. உரையாசிரியர்களால் மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்ட சில நூற்பாக்களே கிடைத்துள்ளன.
இந்நூற்பாக்களும் தொல்காப்பயம் போன்று திட்பமும், நுட்பமும் உடையனவாக இல்லை. தொல்காப்பியத்திற்கு அகத்தியமே மூலநூல் என்னும் கருத்தும் நிலவுகின்றது. இது 12,000 சூத்திரங்களால் ஆனது எனக் கருதப்படுகின்றது.
எழுத்து, சொல், பொருள். யாப்பொடு அரசியல், அமைச்சவியல், பார்ப்பனவியல், சோதிடவியல் முதலானவற்றுக்கும் இலக்கணம் கூறுவது
“ஆனாப் பெருமை அகத்தியம் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்’
என்று இந்நூலை பன்னிரு பாடல் பாராட்டுகின்றது. அகத்தியருக்குப் பன்னிருவர் சீடர்களாக இருந்தனர். அவர்களுள் தொல்காப்பியரே தலைமையானவர் என்றும் கருதப்படுகின்றது.