எப்போது நோய் மிகும்? |
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்‘ என்பர், திருமூலர்.
திருவள்ளுவர் மருந்து என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்து உள்ளார். ஆங்கில மருத்துவம் நோய்க்கிருமிகளைக் கண்டறிந்து அழிப்பதைக் கூறுகிறது. நுண்ணுயிர் பெருக்கம் இயற்கையான ஒன்றே.
![]() |
அவற்றை அழிக்க முனைகின்றபோது, அம்மருத்தால் உடலுக்கும் ஊறு விளையும். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலையே காரணமாகும். அவற்றின் சமநிலை தவறும் போது நோய்மிகும்.
இயற்கையிலிருந்தே மருந்து ! |
அவற்றைச் சமப்படுத்த இயற்கை தரும் காய்கனிகளிலிருந்து மருந்து கண்டுண்டனர். ‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால்’ என்னும் திருக்குறள் வரி, தமிழ் மருத்துவத்தின் தொன்மையை எடுத்தியம்பும்.
பின்விளைவுகளற்ற மருத்துவம் :
தேரையர், அகத்தியர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் தமிழர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன. உலகில் பின்விளைவுகள் அற்ற ஒரே மருத்துவம் சித்த மருத்துவமே ஆகும்.
இன்று பரவலாகப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்து உள்ளனர்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்”
என்னும் திருக்குறள் இக்கருத்திற்கு அரண் சேர்க்கிறது.
மணிமேகலையில் தோழி சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால் அவரது குடல் சரிந்தது. சரிந்த குடலை புத்தத் துறவியர் சரி. செய்த செய்தியை மணிமேலை எடுத்துரைக்கிறது.
கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறும், கம்பன் கூறும் மருத்துவக் கூற்றும் அறுவை மருத்துவத்தை எடுத்து இயம்புகின்றன.