உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளனை சங்க இலக்கியங்கள். இவற்றின் மொத்த அடிகள் 26,350.
அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில வேறு எம்மொழியிலும் இல்லை என்பது உலசு இலக்கியங்களை ஆயந்த ‘கமில்சுவலபில்’ என்னும் ‘செக்’ நாட்டு மொழியியல் பேரறிஞரின் முடிவு
“மாக்சுமுல்லர்’ என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும். அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.
உலக இலக்கியங்கள் எவற்றிற்கும் இல்லாத் தனிச்சிறப்பு சங்க இலக்கியங்களுக்கு உண்டு. அவை தொன்மக் கருத்துகளின் அடிப்படையில் எழுதாமல், மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தின. ஆதலால், சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியம் என்பர்.
தமிழ் மொழியின் இலக்கணச் சிறப்பு :
தமிழ்மொழியின் இலக்கண அமைப்பு தனிச் சிறப்புடையது. துண்ணிய அறிவை உண்டாக்கவல்லது தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்பார் கெல்லட்.
நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப்பழைமையானது தொல்காப்பியம், இஃது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்காம் கூறுகின்றது. தொல்காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியுள்ளார். அந்நூலுக்கு அகத்தியம் என்பது பெயர். அறிவியல்