இராணுவம், காவல்துறைப் பணி
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் (Police) முதலிய துறைகளில் சேர்வதற்கும் லாய்ப்புண்டு. இவற்றில் சேர முதலில் உடற்கூறு தேர்வு நடைபெறும்.
*உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேளே’ என்னும் திருமூலர் வாக்குப்படி முறையாக உடற்பயிற்சி செய்தவர்கள் இத்தேர்வில் வெற்றிபெற இயலும், அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, பணியில் சேர இயலும்.
![]() |
தொழிற்கல்வி :
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் முதலியவை தொழிற்கல்வித் துறைகள். மேனிலைக் கல்வியில் உயர் மதிப்பெண் பெற்றோர் அந்தந்தப் பாடப்பிரிவின் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம்.
இவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுக் கல்லூரிகளில் சேர்ந்து உரிய காலத்தில் படித்து முடிப்பர். படித்து முடித்தவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் வாய்ப்புண்டு.
தற்போது உயிரி தொழில்நுட்பத்துறை, நுண்ணியல் தொழில் நுட்பத்துறை சார்ந்த தொழிற்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
வேதியியல், விலங்கியல் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கும், சுற்றுச் சூழல், வேளாண்மை, மருத்துவம் முதலான துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் சிறந்த வேலை வாய்ப்புத் நிறையாகத் தற்போது இது விளங்கி வருகிறது.
பட்டதாரி ஆசிரியர் பணிக்குரிய கல்வித் தகுதிகள் :
மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றோர் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பொருளியல், வரலாறு, கணக்குப்பதிவியல், கணிப்பொறியியல்’ வணிகவியல் முதலிய பிரிவுகளில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் அதன் பின்னர் முதுகலைப் பட்டமும் பெறலாம்.
பட்டம் பெறுவோர் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து இளம் கல்வியியல் பட்டம் (B.Ed.) பெற்று ஆசிரியர் பணியைப் பெறலாம்.
சிறுதொழிற்பயிற்சி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் (ITI) சேர்ந்து ஓராண்டு அல்லது ஈராண்டுப் பயிற்சி பெற்றுப் பணியில் சேரலாம்.
இத்தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கம்மியர், கடைசல் பிடிப்பவர், கட்டட வரைவாளர், நில அளவையாளர், தச்சர் படிப்புகளும் இயந்திரம், வாகனம், தொலைக்காட்சி, குளிரூட்டும் கருவி, செல்பேசி, கணினி முதலியவற்றைப் பழுது பார்க்கும் படிப்புகளும் உள்ளன. அவரவர் விருப்பத்திற்கேற்பச் சேர்ந்து படித்து வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
அரசுப் பணிக்காகக் காத்திராமல் அவரவர் சுயதொழில் தொடங்கிப் பலரும் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். அப்பொழுதுதான் வேலையில்லா நிலை மாறும். சுயதொழில் தொடங்குவதற்கு வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், கடனுதவிகளை அரசு அளிக்கிறது.
அவற்றைப் பெற்றுச் செயல்படுவதற்கான மனத் துணிவும் முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். அத்தகையோர் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை அளிக்கலாம். அவர் வேலைக்காகக் காத்திருக்கவோ, ஏங்கவோ தேவையில்லை.
தொழில் நுட்பக் கல்வி :
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தாம் பெற்ற உயர் மதிப்பெண்களுக்கேற்பப் பல்தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து பயிலலாம்.
பொறியியல் துறைகளில் உள்ளது போலப் பல்வேறு துறைகள் இதிலும் உண்டு. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கும் இக்கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்புண்டு.
மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள். இடைநிலை ஆசிரியர் கல்விப்பயிற்சி இரண்டாண்டுகள் படித்துத் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேரலாம். மேலும் செவிலியர் பயிற்சி, கூட்டுறவுப் பயிற்சி ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
கலை அறிவியல் கல்வி :
மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றோர் தமிழ். ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, கணக்குப்பதிவியல், கணிப்பொறியியல், வணிகவியல் முதலிய பிரிவுகளில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் அதன் பின்னர் முதுகலைப் பட்டமும் பெறலாம்.
பட்டம் பெறுவோர் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து ‘இளம் கல்வியியல் பட்டம்’ (B:Ed.,) பெற்று ஆசிரியர் பணியைப் பெறலாம்.
பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (TNPSC), நடுவணரசுத் தேர்வாணையம் (UPSC), வங்கித் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, தொடர்வண்டித் துறை முதலிய துறைகள் நடத்தும்.
போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
இதற்கான தகவல்களை நாளேடு, வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் மூலம் பெற்று முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.