சட்டவகைகள் குறித்துக் கட்டுரை எழுதுக.

அரசியல் அமைப்புச் சட்டம்

நாட்டின் நாடாளுமன்றமும், மாநிலச் சட்டமன்றங்களும், அரசுத துறைகளின் அலுவலகங்களும் இதன் அடிப்படையில்தான் இயங்குகின்றன. 

நாட்டில் உள்ள அனைத்து வகைச் சட்டங்களுக்கும் அடிப்படையானது அரசியல் அமைப்புச் சட்டமே. மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளும் இச்சட்டத்தின் வாயிலாகத்தான் காக்கப் படுகின்றன.

சட்டவகைகள்

சமயச் சார்புச் சட்டங்கள் :

இந்துச் சமயத்தைச் சார்ந்தோருக்கு இந்துச் சட்டமும், இசுலாமியர்களுக்கான இசுலாமியர் சட்டமும், கிறித்துவர்களுக்கான சட்டமும் உள்ளன. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்கள் என எவையுமில்லை. இந்துச் சமயச் சட்டங்களே அவர்களுக்கும் பொருந்தும்.

மாநிலச் சட்டங்கள் :

பொதுச் சட்டங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எனத் தனிச் சட்டங்களும் உள்ளன. அவை அந்தந்த மாநிலங்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், சூழ்நிலைகளுக்கேற்ப அமைந்து உள்ளன.

 மாநிலச் சட்டமன்றங்களே அச்சட்டங்களை இயற்றுகின்றன. அவை வேளாண்மைக் கடன் நிவாரணச் சட்டம், கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், உள்ளாட்சித் துறைச் சட்டம் முதலியன மாநிலத் தனிச் சட்டங்களுக்குச் சான்றாகும்.

போக்குவரத்துச் சட்டம்

இச்சட்டம் வண்டிகள் செல்ல வேண்டிய வழி, செல்லும் வேகம், எப்போது நின்று புறப்பட வேண்டும், எம்முறைகளில் எல்லாம் வண்டிகளை ஓட்டக் கூடாது என்பன போன்ற பல விதிகளைக் கொண்டுள்ளது.

மாணாக்கர் வன்கொடுமைத் தடைச் சட்டம் :

ஏற்களவே, கல்லூரியில் பயிலும் பழைய மாணவர்கள் புதிதாகச் சேரும் மாணவர்களை ‘ராக்கிங்’ என்னும் பெயரில் பலவிதத் தொல்லைகளுக்கு ஆளாக்குகின்றனர். அவற்றைத் தடுக்கும் விதத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் :

குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பைப் பெற விரும்பும் முதலாளிகள் இவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். அந்நிலையை மாற்றவே குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டங்கள் உள்ளன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் :

சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், மாநில அல்லது மாவட்டக் குறைதீர் மன்றங்களையோ நுகர்வோர் பாதுகாப்புக் குழுவையோ அணுகித் தீர்வு காணலாம்.

கையூட்டுத் தடுப்புச் சட்டம் :

அரசத் துறையில் பணிபுரிவோருள் சிலர், மனசாட்சியைத் துறந்து, கையூட்டுப் பெறுவதும் ஆங்காங்கே நிகழ்கின்றன. அவ்வாறு. நிகழாமல் தடுக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்:

அரசு அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் பொது நல அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் மக்கள் தகவல் பெறுவதற்கான வழிவகைகளைச் இச்சட்டம் செய்கிறது.

 2) அன்றாட வாழ்வியலில் பயன்படும் சட்டங்கள் :

பொதுமக்களின் நலன் கருதியே சாலை விதிகள் செயல்படுத்தப் படுகின்றன. சில இடங்களுக்குப் போகவும் வரவும் எனத் தனித்தனிப் பாதைகள் உள்ளன. 

அவற்றை உரிய அறிவிப்புப் பலகைகள் வாயிலாக அறிந்து முறையாக நடந்து கொள்ள வேண்டும். சிவப்பு விளக்கு எரிந்தால் உடனே வண்டியை நிறுத்த வேண்டும்; பச்சை விளக்கு எரியும் போது புறப்பட வேண்டும். 

சாலைகளில் மஞ்சள் கோடுகள் போட்டு பேருந்துகள், மகிழ்வுந்துகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர ஊர்திகள் S செல்வதற்கான வழிகள் பிரித்துக் காட்டப்பட்டிருப்பதைக் காணலாம். 

குறிப்பிட்ட பாதைகளில், குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் துன்பம் எதுவும் நேரிடாது. இத்தகைய சாலை விதிகளை மீறிச் செயல்படும் போது அது குற்றமாக் கருதப்படுகிறது.

பொது இடங்களில் புகை பிடித்தல்,புகையிலை போட்டுத் துப்புதல், மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் போன்ற பல தீமைகளைத் தருகின்ற நிகழ்வுகைளத் தடுக்க இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அ) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்குப் பல்வேறு வகைகளில் சேவைகளை வழங்குகின்றன. சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் மாநில அல்லது மாவட்டக் குறைதீர் மன்றங்களையோ, நுகர்வோர் பாதுகாப்புக் குழுவையோ அணுகித் தீர்வு காணலாம்.

 இதற்கெனத் தனி நீதிமன்றங்கள் உள்ளன. நுகர்வோர் உரிமைகளைக் காக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பல உள்ளன. பொது இடங்களில் புகை பிடித்தல், புகையிலை போட்டுத் துப்புதல் முதலிய பல தீமைகளைத் தருகின்ற நிகழ்வுகளைத் தடுக்க இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டம் :

அரசியல் சாசனத்தின் 19(1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும். 

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும். தாங்கள் செலுத்திய வரிப்பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. இதை முன்னிறுத்தித் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடிமக்கள் தனியாகவோ, ஒரு அமைப்பின் மூலமாகவோ, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6-ன் படி, தகவல் பெறலாம். தகவல் பெறுவதற்கான தனி விண்ணப்பம் இல்லை. உரிய அலுவலகத்தில் பொதுத் தகவல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரே விண்ணப்பத்தில் எத்தனை தகவல்களை வேண்டு மானாலும் பெறலாம். மாநில, மைய அரசு சார்ந்த அதிகார அமைப்பிடமிருந்து தகவல் பெறுவதற்கு பத்து உரூபாயை விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பத்துடன் கட்டணத் தொகை பத்து உருபாயைப் பொதுத் தகவல் அலுவலரிடம் நேரில் செலுத்தலாம். அல்லது, உரூபா பத்துக்கான நீதிமன்றக் கட்டன வில்லையை விண்ணப்பத்தில் ஓட்டலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவராக இருந்தால் தகவல் பெறுவதற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top