நூல் அறிமுகம் :
எட்டுத்தொகை நூல்களை எடுத்துச் சொல்லும் பாடலில் முதற்கண் வைத்துக் குறிப்பிடப்பெறும். எண்ணத் தகும் சிறப்பு நற்றிணைக்கே உண்டு.
இந்நூல் குறுந்தொகைக்கும் நெடுந்தொகைக்கும் (அகநானூறு இடைப்பெற்ற அடிவரையறையாகிய ஒன்பது அடி சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடிப் பேரெல்லையாகவும் கொண்ட அகத்துறைப் பாடல்களின் அரிய தொகுப்பாக விளங்குகின்றது.
பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துச் செய்யுன் நீங்கலாக இதன்கண் 400 பாடல்கள் உள்ளன. பாடிய புலவர்களின் எண்ணிக்கை இருநூற்றெழுபத்தைந்து பேர்களென்பர்.
இதையும் படிக்க : 11 th Standard Chemistry one mark answers
ஆனால் 192 புலவர் பெயர்களே தெரிய வருகின்றன. இதற்கு நற்றிணை நானூறு வன ஒரு பெயரும் உண்டு. நற்றொகை என முதலில் பெயர் பெற்றிருக்க வேண்டும். (குறுந்தொகை. நெடுந்தொகை என்பன போல்) எனக் கருதுவார் டாக்டர்.
உ.வே. சாமிநாதையர் அவர்கள் இந்நூலைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி ஆவார் ஆனால் தொகுத்தார் யாரென அறியப்படவில்லை.
நூலின் சிறப்பு :
இந்நூலின் கண் ஐவகைத்திணைப் பாகுபாடுகள் அழகுற அமைந்து கிடக்கின்றன. பெண்பாற்புலவர்கள் ஒன்பதின்மர் பாடியுள்ளனர். அவருள்ளுள் அஞ்சில் அஞ்சியார், குறமகள் குறியெனினி என்போர் இந்நூலுள் மட்டுமே ஆளுக்கொரு பாடல் பாடியுள்ளனர்.
தமிழர்களின் தனிப்பெரும் பண்பாட்டையும், நாகரிகத்தையும், பழக்க வழக்கங்களையும் தெள்ளிதின் எழிற்சுவை, பொருட்சுவையோடு மற்றும் கருத்துச் செறிவோடு பைந்தமிழ்ப் புலவர்களால் பாடி வைத்த பீடு நூலே நற்றிணை ஆகும்.
மேலும் இதில் பண்டையமக்களின் வழக்கங்கள் பல புலனாகின்றன. காதலி சுவர்லே கோடிட்டுப் பிரிந்த தலைமகன் வரும்நாள் எண்ணுவதும் (நற்-324) காதலன் வரவைப் பற்றி கூறுவதாகக் கருதுவதும் (நற்-333) இரும்பு காய்ச்சிய உலையிலே கொல்லன் பனை மடலிலுள்ள நெருப்பை நீர் தெளித்து அணைப்பதும் (நற்-123) எருமை மேய்ப்போன் அதன் முதுகிலேறிச் செல்வதும் (நற்-80) பிறவும் அழகாகக் கூறப் பெற்றுள்ளன.
இயற்கை வருணனை என்று எடுத்துக் கொண்டால் நற்றிணைகண் மிக அழகிய முறையில் இயற்கை வருணனைகள் சொல்லப்பெறுகின்றன.
இளவேனிற் காலத்தில் ஆற்றில் தண்ணீர் குறைந்து ஓடுங்கிச் செல்வது பாம்பு ஓடும்போது அதன் முதுகு நெளிவது போன்று இருப்பதும் (நற்-187) பேயின் கைவிரல் முள் முருங்கின் உணர்ந்த துவரைப் போன்றிருப்பதும், மந்தி கடுவனோடு விளையாடுவது (நற்-334) பெண் யானை தன் கன்றைப் புலியினின்று பாதுகாத்தலும் (நற்-85) பிறவும் இயற்கையோடு இனிக்குந் தன்மையைக் காணலாம்.
இதன்கண் வரலாற்றுச் செய்திகள் சிலவே காணப்பெறினும் அகப்பொருள் செய்திகள் மிகத் தெளிவாகவும் அழகுபடவும் எடுத்துரைக்கப்பெறுகின்றன.