நூல் அறிமுகம்
நல்ல குறுந்தொகை எனப் பாராட்டப்பெறும் இந்நூல் பாரதம் பாய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் நீங்கலாக 401 பாடல்களுடங் விளங்குகின்றது. ஆசிரியப்பாவால் விளங்கும் இந்நூலை 205 புலவப் பெருமக்கள் பாடியுள்ளனர். அதனை “இத்தொகை முடித்தான் பூரிக்கோ.
இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத்தொகை நான்கு அச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது” எழுதியுள்ள சுவடிகளில் காணப்பெறுவதைக் கொண்டு கூறமுடிகின்றது.
ஆனால் இத்தொகையைத் தொகுத்தார் பூரிக்கோ என்பது மட்டும் தெரியப்படுகின்றது. தொகுப்பித்தவர் யார் என அறியப்படவில்லை.
இந்நூலில் 10 செய்யுட்களைப் பாடிய ஆசிரியர்களின் பெயர் இல்லை. “நமக்கு கிடைத்த அளவில் பாரதம் பாடிய பெருந்தேவனால் முதல் அம்மூவன் இறுதியாக 206 பெயர்கள் காணப்பெறுகின்றன”. என நூல்
நூலின் சிறப்பு எட்டுத்தொகை நூல்களுள் முதற்கண் தொகுக்கப்பெற்ற நூல் குறுந்தொகையே ஆகும்.
ஐந்து நிலங்களின் இயல்புகளும் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே அறிவுசால் புலவர் பெருமக்களால் சுட்டப்பெறுகின்றன. பண்டைக் காலத்து மாந்தர்களின் வாழ்க்கை நிலை, பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறைகள் முதலியன அழகுற எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.
இயற்பெயர் தெரியாமல் சொற்றொடரால் பெயர் பெற்ற – உவமையால் பெயர் பெற்ற பதினெட்டுப் புலவர்களின் பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
1. செம்புலப் பெயர்னீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே
2. வினையே ஆடவர்குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே
3. உள்ளது சிதைப்போர் ஊரெனப் படார் என்பன போன்ற உயர்மொழிகள் பலவற்றைக் குறுந்தொகையுள் கண்டு இன்புறலாம்.
இந்நூலுள் பழமொழிகளும் உவமைகளும் எண்ண எண்ண இனிக்கும் இயல்புடையன. இயற்கை மணம் கற்புடைய மகளிர் கூந்தலுக்குண்டு என்னும் அரிய செய்தியைப் பாடிய இறையனார் பாடல் பெற்ற பெருமை வாய்ந்த நூல்.
இவ்வாறு பல்வேற பண்பாட்டுப் அரிய செய்திகளையும் தமிழகத்து நாகரிகப் பழக்கவழக்கங்களையும் அரசியல் வாழ்க்கை நெறிமுறைகளையும், அன்பு நெஞ்சங்களின் உள்ளத்து உணர்வுகளையும் தெள்ளத்தெளிய ஓவியமாய்ப் படம்பிடித்துக் காட்டும் அகத்துறைக் காவியமே குறுந்தொகையாகும்.