செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்‘ என்று பெயர்.
பொருள்கோள் எட்டு வகைப்படும்.
அவை
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்,
- மொழிமாற்றுப் பொருள்கோள்.
- நிரல்நிறைப் பொருள்கோள்,
- அற்பூட்டுப் பொருள்கோள்,
- தாப்பிசைப் பொருள்கோள்,
- அளையறியாப்புப் பொருள்கோள்,
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்.
- அடிமறிமாற்றுப் பொருள்கோள்
பொருள்கோள் – அறிமுகம் :
ஒரு செய்யுளிலுள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்ச்சிக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறை பொருள்கோள் என அழைக்கப்படுகிறது.
பொருள்கோள் எண்வகைப்படும். அவற்றுள், முதல் மூன்று பொருள்கோளையும்
இந்தப் பருவத்தில் விற்பூட்டுப் பொருள்கோளையும் தாப்பிசைப் பொருள்கோளையும் அறிந்துகொள்ளலாம்.
![]() |
பொருள்கோள் என்றால் என்ன? |
1. விற்பூட்டுப் பொருள்கோள்
வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது விற்பூட்டுப் பொருள்கோள். இதனைப் பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.
(எ.கா.)
இக்குறளில், உலகு என்னும் இறுதிச்சொல் முதல் சொல்லான நெருநல் என்பதோடு சேர்த்துப் பொருள் கொள்வதனால் இது விற்பூட்டுப் பொருள்கோள்.
2. தாப்பிசைப் பொருள்கோள்:
நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவதுபோலச் செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது தாப்பிசைப் பொருள்கோள்.
தாம்பு + இசை = தாப்பிசை – ஊஞ்சல் கயிறு அசைதல்போல.(தாம்பு = ஊஞ்சல்கயிறு)
(எ.கா.)
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. குறள்- 310
இப்பாடலில் ‘சினத்தை’ என்னும் நடுநின்ற சொல்லைச், சினத்தை உடையவர் (இறந்தார்) இறந்தார் அனையர் எனவும், சினத்தைத் துறந்தார் (துறந்தார்) ஞானியர் துணை எனவும் அமைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.