நிறுத்தக்குறிகள் :
மொழியை கற்கும் ஒருவர் படித்தல், எழுதுதல் ,பேசுதல் என்னும் பல்வேறு திறன்களை உள்ளடக்கியவராக விளங்க வேண்டும்.
குறிப்பாக படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தை காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல், ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும்.
இவற்றுள் எந்த செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையாகாது.
ஒரு தொடரையோ, பத்தியையோ, கட்டுரையோ படிக்கும் போது பொருள் உணர்வுக்கு ஏற்ப , நிறுத்தி படிக்க வேண்டிய இடத்தில் நிறுத்தியும், சேர்த்து படிக்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் வியப்பு, அச்சம் , வினா முதலிய உணர்வுகள் வெளிப்படும் இடங்களில் அவற்றை வெளிப்படுத்த வேண்டியது படிப்பவர்கள் கடமையாகும்.
பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி போன்றவை நிற்கும் இடத்திற்கு நிறுத்தம் என்று பெயர். அவற்றைப் போலவே மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு.
வண்டிகள் சாலை விதிகளுக்கு ஏற்ப இயக்கவும் ,நிறுத்தவும் , விலகவும் ஒதுங்காமல் பின்வரவும் என குறிகள்( விளக்குகள், ஒலிகள்) உள்ளமை போலவே சொற்றொடர்களுக்கும் “குறிகள் “எண்ணம் அடையாளங்கள் உண்டு. அவற்றுக்கு “நிறுத்தக்குறிகள் “ என்பது பெயர். எடுத்துக்காட்டாக,
“மறைமலை அடிகள் மரணத்தின் பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார்”
மறைமலை அடிகளார் எழுதிய நூல்களை அறிந்திராத ஒருவர் நிறுத்தக்குறிகள் இடம் பெறாத இத்தொடரை படிக்கும்போது, ‘மரணத்திற்குப் பின் அவர் எப்படி நூல் எழுத முடியும் ? என்று வினவுவார்.
ஆனால் மறைமலை அடிகள் என்னும் பெயருக்குப் பின் காற்புள்ளியும், மரணத்தின் பின் மனிதர்நிலை என்பவற்றில் முன்னும் பின்னும் மேற்கோள் குறிகள் இட்டு, மறைமலை அடிகள் ‘ மரணத்தின் பின் மனிதர் நிலை’ என்னும் நூலை இயற்றினார்.
என்று எழுதும்போது ஒரு தெளிவாகிவிடும் அல்லவா.
நிறுத்தக்குறிகளின் பயன்கள் யாவை?
*நிறுத்தக்குறிகள் ஒரு தொடரில் உள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்தும் அதற்கு அடிப்படையாக விளங்குகிறது.
*நிறுத்தக்குறிகள் ஐ பயன்படுத்தி படிக்க முயலும் போது தெளிவாக பொருள் உணர்ந்து படிப்பவர்களும் கேட்பவர்களும் பயன்பெறுவர்.
* நிறுத்தக்குறிகள் எழுதுவதோ இடம்மாற்றி இக்குறைகளை விடுவதோ தொடரின் பொருளையோ மாற்றிவிடும்.
* சிலவேளைகளில் முற்றிலும் பிழையான பொருளை தந்துவிடும்.
*எனவே நிறுத்தக்குறிகள் மொழியை தெளிவாக பேசவும் எழுதவும் துணை புரிகின்றன.
இனி நிறுத்தக்குறிகள் சிலவற்றையும் அதை எவ்விடத்தில் பயன்படுத்த வேண்டும் ? என்பதையும் எடுத்துக்காட்டுடன் காண்போம்.
காற்புள்ளி ( , )
பொருட்களை தனித்தனியாக குறிப்பிடும் இடங்கள் ,சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைப்பு மொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும். எடுத்துக்காட்டாக ,
- அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கை பேறு நான்கு.
- நாம் எழுதும்போது, பிழையற எழுதவேண்டும்.
- இனியன் நன்கு படித்தான்; அதனால் தேர்ச்சி பெற்றான்.
- ஐயா, அம்மையீர்,
- சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை
அரைப்புள்ளி ( ; )
- வேலைக்கு சென்றான்; பொருள்களை வாங்கினான் ; வீடு திரும்பினான் .
- அளி — அன்பு; அருள் ;குளிர்ச்சி; வண்டு; இரக்கம்; எளிமை
முக்காற்புள்ளி ( : )
- சார்பெழுத்து :
- பத்துப்பாட்டு 2:246
- எட்டுதொகை என்பன வருமாறு :
முற்றுப்புள்ளி ( . )
- மரபியல்.
- உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
- தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.
- தொல். சொல்.58
- 18/02/2018.
வினாக்குறி ( ? )
- அது என்ன ? ( முற்று )
- நீ வருகிறாயா ? என்று கேட்டான். ( நேர்கூற்று தொடர் )
வியப்புக்குறி ( ! )
- எவ்வளவு உயரமானது !
- என்னே தமிழின் பெருமை ! என்றார் கவிஞர்.
- வா! வா! வா! போ! போ ! போ!
விளிக்குறி ( ! )
- அவையீர் !
- தலைவரே!
மேற்கோள் குறி ( ‘ , ” )
6. ஒற்றை மேற்கோள் குறி (..)
ஓர் எழுத்தையோ சொல்லையோ சொற்றொடரையோ தனியே குறிக்கும் இடத்திலும், ஒரு
சொற்றொடரில் நூலின் பெயர், பழமொழி முதலியன வருமிடத்திலும் ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும்.
‘எழில்’ என்றால் ‘அழகு’ என்பது பொருள்.பாரதியாரின் பாஞ்சாலி சபதம்” மிகச் சிறந்த படைப்பு. ‘சுத்தம் சோறு போடும்’ என்பது
பழமொழி. வண்ணமிடும்போதும், தடித்த எழுத்துகளில் எழுதும்போதும், அடிக்கோடு
இடும்போதும் இக்குறி இடத் தேவையில்லை.
- ‘ஏ ‘ என்று ஏளனம் செய்தான்.
- பேரறிஞர் அண்ணா’ செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
- ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூலாகும்.
- ‘செவிச் செல்வம் சிறந்த செல்வம்’ என்பர்.
7. இரட்டை மேற்கோள் குறி ( *…] :
ஒருவர் கூறியதனை நேர்கூற்றாகக் கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகக் கூறும்போதும்
இரட்டை மேற்கோள் குறியிடுதல் வேண்டும். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்றார்
ஒளவையார்.
- “நான் படிக்கிறேன்” என்றான்.
- “ஒழுக்கம் உடைமை குடிமை” என்றார்.