நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. #SK21 என வழங்கப்படுகிறது. இந்த படத்தை இரண்டு வருடமாக எடுத்து வருகிறார்கள். ஆனாலும் இன்னும் படத்தின் பெயர் மாற்றம் பாடல்கள் வெளிவரவில்லை.
ஆனால் #SK22 சிவகார்த்திகேயனின் 22 ஆவது படமான மாவீரன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாவீரன் திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தத் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார்.
கடைசியாக ஏஆர் முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
அதன் பிறகு படம் இயக்குவதை விட்டுவிட்டு படம் தயாரிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் கௌதம் கார்த்திக் நடித்த 1947 திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது ஏ ஆர் முருகதாஸ் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.
#SK23