அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்?

 முதல் உரிமைப் போர் :

மூடநம்பிக்கைகளும் தீய பழக்கங்களும் சமுதாயத்தை அரித்துக் கொண்டிருந்த போது, சமுதாயத்தைச் சமப்படுத்துவதற்குச் சிந்தனையாளர்கள் பெரிதும் போராட வேண்டியிருந்தது.

அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்?

 1927 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 20ஆம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பெற்ற போராட்டம் ஆகும். 

சாதி களையப்பட வேண்டிய களை ;

 இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிர் அம்பேத்கர். சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று.

 சில குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். “சாதி களையப்பட வேண்டிய களை” என்று அவர் கருதினார்.

சிந்தனை விதை தூவும் புரட்சியாளர்கள் சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றார் அம்பேத்கர்.

 இந்திய பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது நன்மை தராது; இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கின்றது; அது மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்து விட்டது. இதை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும்’ என்றார் அம்பேத்கர்,

வட்டமேஜை மாநாடும், உரிமைக்குரலும்:

 வட்டமேஜை மாநாடு 1930-ஆம் ஆண்டு நடைபெற்றது. அம்மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் கலந்து கொண்டார்.

அம்மாநாட்டில், “அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று, தனது கருத்தைத் தொடங்கினார். மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியையே நாங்கள் விரும்புகிறோம். வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை.

 எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தாலொழிய, எங்கள் குறைகள் நீங்காது என மொழிந்தார், ஒடுக்கப்பட்டோரின் இவ்வுரிமைக் குரல் வட்டமேஜை மாநாட்டின் வழியே உலக அரங்கில் எதிரொலித்தது.

கல்வி, செல்வம், உழைப்பு அறியாமை, வறுமை, வேலை வாய்ப்பின்மை ஆகியவை நீங்கினால் தான் இந்தியா உயர்ந்து விளங்க முடியும் என்பதை அம்பேத்கர் உணர்ந்தார். அதனால் தான் அவர். ஒவ்வொருவரும் முழு மனித நிலையை அடையக் கல்வி, செல்வம், உழைப்பு ஆகிய மூன்றும் தேவை என்றார்.

 மேலும் அவர், செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி, களர் நிலம் என்றார்; உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனமானது என்றார். ஒவ்வொருவரின் தனித்தன்மையை வெளிக்கொணர்வதாய்க் கல்வி அமைந்தால்தான் இந்தியா அனைத்துத் திறன் கொண்ட நாடாய் அமையும் என நம்பினார்.

இலட்சிய மனிதர்

அண்ணல் அம்பேத்கர் இந்திய நாட்டின் ஒளிமிகுந்த எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்ட இலட்சிய மனிதர். தாம் கண்ட இலட்சியக் கனவுகளை அறிவுத்திறத்தினால் உறுதிப்படுத்தியவர். அவர் உயரிய ஆளுமைத் திறனைக் கொண்டவர்; கூர்ந்த அறிவு வன்மை உடையவர்; மனித உரிமைக்காக உழைத்தவர். சாதிப் புழுக்களை அழித்தவர்

சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்து அவர். கல்வி அறிவின்றி நாடு முன்னேற முடியாது என்று உரைத்தவர். அவர், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top