இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ?

 தமிழ் இலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இலக்கண குறிப்பு என்பதும் அவ்வாறு தான் தமிழுக்கு முக்கிய பங்காற்றுகிறது.

இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ?

 இலக்கண குறிப்பு  என்றால் என்ன?

* தமிழில் ஒரு சொல்லுக்கான சரியான இலக்கண வகையை கூறுவதே இலக்கணகுறிப்பு என அழைக்கப்படுகிறது.

1) பெயரெச்சம் : 
ஒரு சொல்லின் இறுதியில் பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ஞாபகம் வைத்து கொள்வது எப்படி என்றால்,
அ’ – ல் முடிந்தால் அது பெயரெச்சம் என எடுத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக,   நடந்த, வந்த,
மேலும் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் கடைசியாக முடிந்த வார்த்தையை பிரித்து பாருங்கள்.  ‘அ’  என்னும் எழுத்தில் தான் முடிவற்று இருக்கும்.
2) வினையெச்சம் 
ஒரு சொல்லின் இறுதியில் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம் என அழைக்கப்படுகிறது சுருக்கமாக ஞாபகம் வைத்துக் கொள்வது  எப்படி என்றால்,
மற்றும் என்று ஒரு சொல்லின் இறுதியில் முடிந்தால் வினையெச்சம்.
எடுத்துக்காட்டாக, ஆடி, வந்து, நடந்து, பாடி.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் ஆடி என்பதில் (ஆடு+இ) இறுதியாக ‘இ’ எனும் எழுத்தில் தான் முடிவுற்று இருக்கிறது. அதே போல நடந்து என்னும் சொல்லில் (நட+த்+த்+உ ) இறுதியாக என்னும் எழுத்தில்தான் முடிவுற்று இருக்கிறது.
3) ஈருகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது என்னும் எழுத்தானது எதிர்மறையாக வந்து பொருள் தரும்.
எடுத்துக்காட்டாக,
நாரா பூ – நாற்றம் அடிக்காது என்பதை நாறும் என்பதில் இருந்து எதிர்மறையாக கூறுகிறது
தேரா மன்னன்- தேரும் என்பதை எதிர்மறையாக கூறுகிறது.
பொய்யாமொழி, மாறா மன்னன்.
4) வியங்கோள் வினைமுற்று விகுதி : 
க , இய , இயர் ” என்று ஒரு சொல்லின்  இறுதியில் முடிவுற்று இருந்தால் அது வியங்கோள் வினைமுற்று என எடுத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, 
வாழ்க – வாழ் +க 
வாழிய – வாழ் +இய 
வாழியர் -வாழ் +இயர் 
5) பண்புத்தொகை : 

ஒரு சொல்லை பிரித்தால் இடையில் ‘ மை ‘விகுதி பெற்று வருவது பண்புத்தொகை என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 
செம்மொழி -செம்மை +மொழி 
நன்னூல் – நன்மை +நூல் 
மூநீர் -முண்மை +நீர் 
6) உரிச்சொற்றொடர் :
சால, உறு, தவ, நனி, கழி, கூர், தட, மா, கடி, மல்லல், கெழு, வை, நளி இச்சொற்கள் பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும், தொடர்ந்து வரும். அவ்வாறு வரும் தொடருக்கு உரிச்சொற்றொடர் என்று பெயர்.
எடுத்துக்காட்டாக,
 சால சிறந்தது , தவமுனிவர், மாமரம், தவவலிமை,நனிகடிது 
7) வினைத்தொகை :
ஒரு சொல்லை இரண்டாகப் பிரித்தால்  முதலாவதாக வரும் சொல்லின் இறுதியில் வினைச்சொல் கொண்டு முடிவது வினைத்தொகை என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 
ஒழுகுநீர்– ஒழுகு என்னும் சொல்லானது ஒழுகுதல் என்னும் வினைப்பொருளில் வந்துள்ளது.
 பொங்குகடல்– பொங்கு என்னும் சொல்லானது பொங்குதல் என்னும் வினை பொருளில் வந்துள்ளது.
காய்நெல் – இத்தொடரில் காய் என்னும் சொல்லானது காய்தல் என்னும் செயல் பொருளில் வந்துள்ளது.
8) வேற்றுமைத் தொகைகள் :
  1. முதலாம் வேற்றுமைத்தொகை
  2. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  3. மூன்றாம் வேற்றுமைத்தொகை
  4. நான்காம் வேற்றுமைத்தொகை
  5. ஐந்தாம் வேற்றுமைத்தொகை
  6. ஆறாம் வேற்றுமைத்தொகை
  7. ஏழாம் வேற்றுமைத்தொகை
  8. எட்டாம் வேற்றுமைத்தொகை
9) எண்ணும்மை :
எண்ணும்மை என்பதனை கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.
*  ‘ உம் ‘ என்னும் சொல்லானது வெளிப்படையாக வந்து பொருள் தரும்.
* இரண்டு சொற்களுக்கு இடையில் ஒற்றுமை இருக்கும்.
எடுத்துக்காட்டாக, 
தாயும் தந்தையும் என்னை ஆசிர்வாதம் செய்தார்கள் – இந்த சொற்றொடரில் தாயும் தந்தையும் என்று சொல்லில் உம்  என்பது வெளிப்படையாகவும், தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு இடையில் உள்ள ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது.
10) உம்மைத்தொகை :
உம்மைத்தொகை என்பதனை கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.
*  ‘ உம் ‘ என்னும் சொல்லானது மறைந்து வந்து பொருள் தரும்.
* இரண்டு சொற்களுக்கு இடையில் வேறுபட்டு இருக்கும்.
எடுத்துக்காட்டாக, 
கண்ணன் இரவு பகல் என பாராமல் வேலை பார்ப்பான் – இந்த சொற்றொடரில் இரவு பகல் என்பது இரவும் பகலும் என்பதனை மறைமுகமாக உம்  வந்துள்ளது அறியமுடியும். அதேபோல இரவு பகல் என்பது ஒன்றுக்கொன்று எதிரான வேறுபட்ட ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
11) அளபெடைகள் :

* எழுத்தின்‌ இயல்பான ஒலிமிகுந்து மாத்திரையை நீட்டீத்தலே அளபெடை எனப்படுகிறது.

* பாடல்களை இசைக்கும்‌ போதும்‌, பிறரை விளிக்கும்‌ போதும்‌, முறையீடு செய்யும்‌ போதும்‌, துன்பத்தினால்‌ புலம்பும்‌ போதும்‌, பண்டங்களை கூவி விற்பனை செய்யும்‌ போதும்‌ – அளபெடை என்பதை எளிதில்‌ புரிந்து கொள்ளலாம்‌.

அன்றாட வாழ்வில்‌ நாம்‌ காணும்‌ சில உதாரணங்களாக… என நீட்டி முழக்குவதும்‌,

* வீதியில்‌ தயிர்‌ விற்கும்‌ பெண்‌ “தயிரோஓஒஜ… தயிரு…” எனக்‌ கூவுவதும்‌,

* தூரத்தில்‌ செல்லும்‌ நபரை “அண்ணேஏஏஏ…ய்‌” என

விளித்தழைப்பதும்‌ அளபெடையே!

* அழுகையினூடே ஓலமிடுவதும்‌ அளபெடையே !

* குக்கூ ௨௨…என குயில்‌ கூவுவதும்‌ ,

கொக்கரக்கோஒஒஓ… என்‌ கோழி கூவுவதும்‌, 

காள்காள்‌ எனக்‌ கழுதை

கூச்சலிட்டுக்‌ கத்துவதும்‌ கூட அளபெடையே!

அளபெடையானது செய்யுளிசை அளபெடை , சொல்லிசை அளபெடை,

இன்னிசை அளபெடை என மூவகைப்படும்‌.


1) சொல்லிசை அளபெடை 

* ” இ ” என்னும் சொல் மட்டும் அளபெடுத்து வருவது சொல்லிசை அளபெடை 

*உயிர் எழுத்தை நீக்கிவிட்டு சொல்லை பார்த்தால் அது ஓரசைச் சீராக இருக்கும்.


எடுத்துக்காட்டு : வளைஇ, வெரீஇய,குரீஇ, உடீஇ. நிறீஇ. தழீஇ. குழீஇ, நசைஇ, வெரீஇ.

 2) செய்யுளிசை அளபெடை 

* ” இ  ” என்னும் உயிர் எழுத்து தவிர மற்ற உயிர் எழுத்துக்கள் அனைத்தும் அளபெடுத்து வருவது செய்யுளிசை அளபெடை 

* சொல் ஈரசை சீராக இருக்கும்.

 எடுத்துக்காட்டு : உழாஅது, அழுஉம், தொழாஅர், சேஎய், ஓஓதல்


3) இன்னிசை அளபெடை 

* ” உ  ”  என்னும் சொல் மட்டும் அளபெடுத்து வருவது இன்னிசை அளபெடை

* இச்சொல் மூவகைச் சீராக இருக்கும்.

 எடுத்துக்காட்டு : கெடுப்பதூஉம், துன்புறூஉம், இன்புறூஉம், எடுப்பதடம், உடுப்பதூஉம்,உண்பதூஉம்.

அளபெடை எளியவழி :

அளபெடை உள்ள சொல்லை நோக்குக,

1 ‘இ’ இல் முடிந்தால் உடனே அது சொல்லிசை அளபெடை என்க.

2 இல்லையேல் அசை பிரித்துப் பார்க்க.

இரண்டு அசையாயின் அது செய்யுளிசை, மூன்று அசையாயின் அது இன்னிசை, மிகச் சில சொற்களைத் தவிர பெரும்பாலும் இவ்வழி சரியாகவே அமையும்.


12) தொழில் பெயர்: 
 ஒரு சொல்லானது ” தல் , அல் , கை  ” என்னும் சொற்களில் முடிவது தொழில் பெயர் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 
வாழ்தல் – வாழ் +த்  + அல் 
வாழ்க்கை -வாழ் + க் +கை 
 ஆடல் – ஆடு + அல் 
பாடுதல்  – பாடு + தல் 
13) அடுக்குத்தொடர்: 
அடுக்குத்தொடர் வரையறை பின்வருமாறு,
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து வரும்.
* இரண்டு சொற்களை பிரித்தால் பொருள் தரும்.
எடுத்துக்காட்டாக, 
 பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்றது.
எறும்புகள் சாரை சாரையாக தரையில் ஊர்ந்து செல்லும்.
தேங்காய்கள் குவியல் குவியலாக குவிந்துகிடக்கும்.
ஆடுகள் மந்தை மந்தையாக மேய்ந்து செல்லும்.
14) இரட்டைக்கிளவி : 

ஒரு சொல்‌ தொடர்ந்து இரண்டுமுறை வரும்‌. ஆனால்‌ தனித்தனியே பிரித்தால்‌ பொருள்‌ தராது.அத்தகைய சொற்கள்‌ இரட்டைக்‌ கிளவி எனப்படும்‌. 

* தனித்தனியே பிரித்தால் பொருள் தராது.

* இரண்டு முறை மட்டுமே வரும்.

எடுத்துக்காட்டாக, 

மளமள என்று ஓப்பித்தாள்‌.

சடசட வென்று ஓடியது.

கிடுகிடுவென நடுங்கினேன்‌.

வழவழ என்று பேசினாள்‌.

வெலவெலத்துப்‌ போனேன்‌.

நங்குநங்கு என்று குத்தினேன்‌.

கொழுகொழு என்று இருந்தது.

    விக்கிவிக்கி அழுதான்‌.

திபுதிபு என்று நுழைந்தது.

சிலுசிலுவென்று காற்று வீசியது.

தகதகவென்று ஜொலித்தது.

லொடலொட என்று பேசுவாள்‌.

காற்று படபடவென்று வீசியது.

கண்ணீர்‌ பொலபொல என்று வழிந்தது.

கலகல என்று இரித்தாள்‌.

ஓடையில்‌ தண்ணீர்‌ சலசலவென்று ஓடியது.

15) இடைக்குறை : 
ஒரு சொல்லில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் மறைந்து வருவது இடைக்குறை என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக
 உளது– உள்ளது என்ற பொருளானது ‘ ள் ‘ என்ற எழுத்து மறைந்து  உளது என்று வந்துள்ளது.
இலாத – இச்சொற்றொடரில் இல்லாத என்பதன் பொருளில் ல் என்பது மறைந்து 
இலாத என்று வந்துள்ளது.
16) உவமை : 
இரண்டு சொற்களுக்கு இடையில் போல என்னும் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை  என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக,  
மலர் பாதம் – இந்த சொற்றொடரில் மலர் போன்ற பாதம் என்ற உவமையில் போன்ற என்பது வெளிப்படையாக வந்துள்ளது.
17) உருவகம் : 
இரண்டு சொற்களுக்கு இடையில் போல என்னும் உவம உருபு மறைந்து வருவது உருவகம் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 
பாதமலர்- பாதம் ஆனது மலர் போல இருப்பதாக மறைமுகமாக போல என்பது வந்துள்ளது.
வியர்வைவெள்ளம் – வியர்வையானது வெள்ளம் போலத் திரண்டு வந்தது என்பதனை இங்கு போல என்பது மறைந்து வந்து பொருள் தருகிறது.
18) இலக்கணப்போலி : 
19) வினையாலணையும் பெயர் :

அவர், தவர், ஓர்  என்னும் சொற்களால் முடிவுற்று வருவது வினையாலணையும் பெயர் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக
கற்றவர், செற்றவர், செய்யாதவர், உயர்ந்தோர், தாழ்ந்தோர்.
இருபெயரொட்டுப் பண்புத் தொகை:
எ.கா : கைத்தலம், தமிழ்மொழி, கடல்நீர், மாமரம்.
இரண்டு சொற்கள் கொண்ட இத்தொகையில் முதலில் வரும் சொல் (மா) ஒரு சிறப்புச்சொல், இரண்டாவதாக வரும் சொல் (மரம்) ஒரு பொதுச் சொல். 
சிறப்பும் பொதுவுமாக இணைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகை ஆகும். இரண்டும் பெயர்ச் சொற்கள் ஆதலால் இரு பெயர் ஓட்டியிருப்பது என்று கூறப்பட்டது.
இன்னும் பிற :
1. மின் வந்தால் ஏவல் விளைமுற்று
2. ‘பு’ வில் முடிந்தால் செயபு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
எ.கா: காண்குபு, ஓங்குபு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top