தமிழ்ச்செல்வி குயில்போலப் பாடினாள்.
இத்தொடர் குரலினிமையை உணர்த்துகிறது. குரலினிமைக்குக் குயிலின் குரல் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒருபொருளைச் சிறப்பித்துக்கூற, அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே உவமித்துக் கூறுதல் எனப்படும்.
இவ்வாறு, உவமித்துக் கூறுவதனால் புரியாதன எளிதில் புரியும்; கேட்டார்க்கு இன்பம் பயக்கும். சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும். அதற்கு ஒப்பாகக் காட்டப்படும் பொருள் உவமை எனப்படும்.
இதனை உவமானம் எனவும் கூறுவர். உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் வரும் உருபு, உவம உருபு எனப்படும்.
தமிழ் தேன்போல இனிமையானது.
இத்தொடரில் போல என்பது உவம உருபு. உவம உருபுகள் பல. அவற்றையும், அவை தொடரில் அமைந்து வருவதனையும் காண்போம்.
1.போல – கிளிபோலப் பேசினாள்.
2. புரைய – வேய்புரை தோள்.
3.ஒப்ப- தாயொப்பப் பேசும் மகள்.
4. உறழ – முழவு உறழ் தடக்கை.
5. அன்ன – மலரன்ன சேவடி.
மேற்கண்டவை போன்ற உவம உருபுகள் பல உள்ளன.
போல புரைய ஒப்ப உறழ் கடுப்ப இயைய ஏய்ப்ப மான நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே.
( நன்னூல்,367
விரியுவமை என்றால் என்ன?
உவமை, உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) ஆகிய இரண்டனையும் பொருத்துகின்ற உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமை. இஃது, உவமைத் தொடர் எனப்படும்.
(எ-டு) தேன் போன்ற மொழி.
இத்தொடரில் தேன் – உவமை; மொழி – உவமேயம்; போன்ற – உவம் உருபு உவம உருபு, இத்தொடரில் வெளிப்பட வந்துள்ளதனால் இது, விரியுவமை எனப்படும்.
இஃது, உவமைத் தொடராகும்.
தொகையுவமை என்றால் என்ன?
தேன்மொழி
இதில் உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இதனைத் தொகையுவமை என்பர். இதனை, உவமத்தொகை எனவும் கூறுவர்.
பவளம் போன்ற வாய் ) – இத்தொடரில் வாய் பவளத்தோடு ஒப்பிட்டுக் பவளவாய் கூறப்பட்டுள்ளது.
உவமை – உருவக மாற்றம்
பவளம் – உவமை; வாய்- உவமேயம்
(உவமையை அதனைவிடச் சிறந்த ஏற்கும் பொருள்)ஒருபொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது.
வாய்ப்பவளம்.
இத்தொடரில் வாயே பவளம் எனப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
உவமைத்தொகையில் முதல் பகுதி ( பவளம் ) உவமானமாகவும் அதன் அடுத்த பகுதி உவமேயமாகவும் ( வாய் ) அமையும். உருவகத்தில், உவமேயம் முதல் பகுதி;
உவமை அடுத்த பகுதியாக இருக்கும். இவ்வாறு உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபடுத்தாது, இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே உவம உருபு.