பழந்தமிழர் வாழ்வியல் முறைகளை சங்க இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். அவர்களிடம் வேறுபாடு இல்லை.
மனிதநேயம் மிகுந்து இருந்தது. வீரத்தில் சிறந்து விளங்கினாலும் கொடையில் அதைவிடச் சிறந்து விளங்கினார்கள். அரசர் முதல் அனைவரும் வேறுபாடின்றி பழகினார். ஆதலால் சங்க காலம் பொற்காலம் என்னும் தகுதியைப் பெறுகின்றது.
அனைவரும் சமம்
மக்கள் அனைவரும் பிறப்பால் ஒரே தன்மையினர் ஆவர். தொழிலால் அவர்கள் வேறுபடுகின்றனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது. திருக்குறளாகும். அரசர், மக்களுக்கு உயிர்போன்று விளங்கினான். நெல்லும் நீரும் உயிரன்று.
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்றது புறநானூறு. ஆனால் கல்வியாளனை அனைவரும் மதிக்கும் பாங்கு அன்று இருந்தது.
செய்யும் தொழிலால் தொழில்படி அமைந்த சாதிப்பாகுபாடுகளும் கல்வியால் தகர்ந்தது. அறிவுடையவனை அரசனும் விரும்பினான். பிச்சை ஏற்றும் கற்கும் முறையை குறுந்தொகையில் அறியலாம்.
பெண்மையைப் போற்றல்
சங்ககாலத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கவிதை பாடினர். ஒளவையார், காவற்பெண்டு, ஒக்கூர் மாசாத்தியார். வெண்ணிக்குயத்தியார் முதலான பெண்பாற் புலவர்கள் அன்றிருந்தனர்.
தாய், தந்தை, கொல்லன், வேந்தன் ஆகியோரின் கடமையைப் பாடியவர் பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவரே. மேலும் பெண்கள் அரசியல் அலுவல்களிலும் தொடர்பு கொண்டிருந்தனர்.
அதியமானுக்காக ஒளவை தொண்டைமானிடம் தூது சென்றமையை புறநானூற்றுவழி அறியலாம். இப்பெண்கள் பல வகுப்பினார். பல இடத்தினர். ஆனால் அவர்கள் ஒரு சேர தமிழால் பெருமை பெற்றனர். அரசியரும் கவிதை இயற்றியுள்ளார்.
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு பாடிய பாடல் புறநானூற்றில் காணப்படுகிறது. கரிகால் பெருவளத்தான் மகள் ஆதிமந்தியாரின் பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. பாரிமகளிர் பாடிய கையறுநிலைப் பாடலை புறநானூற்றில் காணலாம்.
சமயப் பொதுமை
அக்காலத்தில் குறிப்பிட்ட சமயம் வழக்கில் இல்லை. ஆனாலும் சமய நம்பிக்கையும், அவை குறித்த பழக்கவழக்கங்களையும் நாம் சங்க இலக்கியத்தில் காணலாம். கார்த்திகை மாதம் விளக்கேற்றும் பழக்கத்தை நாம் இன்றும் தமிழரிடையே காணலாம்.
திருஞான சம்பந்தர் இவ்வழக்கத்தை தொல் கார்த்திகை விளக்கிடு என மைலாப்பூர் பதிகத்தில் குறித்துள்ளார். இவ்வாறு விளக்கு வைக்கும் வழக்கத்தை அகநானூற்றுப் பாடல் ஒன்று உவமை வழி விளக்குகிறது.
தொல்காப்பியர் நிலத்துக்குரிய தெய்வத்தைக் குறிப்பிட்டுள்ளார். திருமுருகாற்றுப்படை பக்தி இலக்கியமாகத் தோன்றியது. பரிபாடலில் முருகனைப் பற்றியும், திருமாலைப் பற்றியும் காணலாம்.
இவ்வாறு சமண சமயமும். பௌத்த சமயமும் அன்று வழக்கில் இருந்தன. உலோச்சனன் சமண சமயப் புலவராவார். இளம்போதியார் என்னும் புத்த சமயக் கவிஞரை சங்க இலக்கியத்தில் காணலாம்,
அரசர்க்கு அறிவுரை
அரசளே நாட்டின் முதல் குடிமகன் ஆவான். அரசாட்சி மரபு வழி இருந்தது. அரசனே நீதிபதியாகவும் இருந்தான். எனினும் அவன் தன் விருப்பப்படி அரசாளவில்லை. அறம் கூறும் அவையத்தாரின் ஆலோசனை பெற்றே அவன் அரசாட்சி செய்தான்.
மன்னன் அரசியலில் தவறும்பொழுது புலவர்கள்: அவனைத் திருத்தினர். சோழன் கிள்ளிவளவன் மலையம்மான் மக்களை
யானைக்காவில் கிடத்திக் கொல்ல முயன்றபோது கோவூர்கிழார் அவனது செயலைத் தடுத்தார். அரசன் நெறிதவறி வரிவசூலித்த காலத்தில் வெள்ளைக்குடி நாகளார் என்னும் புலவர் அவனுக்கு அறிவுரை கூறினார். உணவின் தேவையை அரசனுக்கு உணர்ததி. நீர்நிலைகளை ஏற்படுத்துமாறு அவனுக்கு அறிவுரை கூறியவனும் ஒரு புலவரே.
பேகன் மயிலுக்கு போர்வை அளித்த வள்ளல் ஆவான். அவளது இக்கொடையைப் புலவர்கள் போற்றி வியந்தனர். அதே சமயத்தில் அவன்தன் மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்ந்தபொழுது புலவர்களால் அறிவுறுத்தப்பட்டான்.
அவனது கொடையைத் தனித்தனியாகப் புலவர்கள் பாடினர். ஆனால் அவன் தவறிழைத்தபொழுது அவனை அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார். கபிலர், பரணர் என நான்கு புலவர்கள் திருத்தினர்.
இலக்கிய வளம்
சங்ககாலத்தில் அமைதியான ஆட்சி நடந்தது. அரசர்கள் குடிமக்களை காத்தோம்பினர், அமைதியான ஆட்சியில் பலவகையான இலக்கியங்கள் தோன்றின. அவை பல்வேறு காலச்சூழலில் பலரால் பல நிலைகளில் ஏற்பட்டனட. அவை பாட்டென்றும், தொகை என்றும் பெயரிடப்பட்டு தொகுக்கப்பட்டன.
நற்றிணை முதல் சுலித்தொகை இறுதியாக எட்டு நூல்கள் தொகுப்பு நூல்களாக உருவாயின. இவற்றில் அகம் சார்ந்த நூல்கள் 5. புறம்சார்ந்த நூல்கள் 2 அகமும், புறமும் சார்ந்த நூல் 1 .
தனிமனிதனை பாடுபொருளாகக் கொண்டு நெடும்பாடல் இயற்றப்பட்டது. இவை எண்ணிக்கையில் பத்தாக அமைந்தன. தொகுப்பு முறையில் இவை பத்துப்பாட்டு என்னும் பெயரைப் பெற்றது. ஆற்றுப்படை எனும் புதிய இலக்கிய மரபு எழுந்தது.
குறிஞ்சித்திணை, முல்லைத்திணையின் உரிப்பொருள்கள்தனி இலக்கியங்களாக உருவெடுத்தன. பாலையின் உரிப்பொருள் பட்டினப்பாலையாக உருவானது. தொல்காப்பியர் கூறிய காஞ்சித்திணை மாங்குடி மருதனாரால் மதுரைக்காஞ்சி என இலக்கிய வடிவம் பெற்றது.
பொதுமை அறம்
பிறப்புவழிச் சாதிவேறுபாடு அக்காலத்தில் இல்லை. தீண்டாமை அறவே. இல்லை. தொழில் காரணமாக பிரிவுகள் இருந்தன. ஆனாலும் எல்லா இனத்தவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர் காதல், சாதிக்கு அப்பாற்பட்டு இருந்தது.
பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அதனால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படவில்லை. செல்வந்தர் வறியார்க்கு ஈதலைக் கடமையாகக் கருதினர். ஈகை மறுப்போர் பழிக்கு ஆளாயினர். அரச தண்டனை அறத்தின் அடிப்படையில் அமைந்தது.
மன்னன் கரிகாலன் நரைமுடித்து நீதி வழங்கியதை பழமொழி நானூறு மூலம் அறியலாம். கருவுற்ற பெண் மாங்காய் தின்றதைக் குற்றமாகக் கருதி மரண தண்டனை விதித்த நன்னன் என்னும் மன்னனின் ஆட்சி இகழப்பட்டது. அவன் பெண் கொலை புரிந்த நன்னன் என்று தூற்றப்பட்டான்.
உழவும் தொழிலும்
சங்ககாலத்தில் உழவும் நெசவும் அடிப்படைத் தொழில்களாக இருந்தன. கரிகாலன் காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணை இன்றும் நம்மை வியக்க வைக்கின்றது. இது பழந்தமிழரின் கட்டிடக் கலைக்கு ஒரு சான்றாகும். பட்டாலும், மயிராலும், பருத்திபாறும் ஆடைகள் நெய்யப்பட்டன.
பழந்தமிழரின் கடல்கடந்த வணிகத் தொடர்பை கடல் கடந்த வழி அறியலாம். அணிகலன்கள், படைக்கருவிகள் போன்றவற்றை வடிவமைக்கும் தொழிலே சிறந்து விளாங்கின. சங்க அக இலக்கியங்களில் காணப்படும் அணிகலன்கள் வாயிலாக அக்காலத் தொழில் திறமையை அறியலாம்.
தமிழ்நாட்டு நறுமணப் பொருள்கள் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. தாலமி, பிளைனி போன்ற வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் இதை உறுதிசெய்கின்றன. யவனர்கள் நம் நாட்டு அரண்மனையில் காவலர்களாக அமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு பல கூறுகளால் சங்ககாலம் அமைதியான ஒரு பொற்காலம் என்பது புலப்படுகிறது.