தனுஷின் ‘ராயன்’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

 நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி அவரே நடிக்கப் போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார்.

இரத்தக் கரைப்படிந்த போஸ்டரில் தனுஷ் திரும்பி நின்றவாறு இருந்த புகைப்படத்தை #D50 என்ற பெயரில் படத்தின் போஸ்டர்கள் பரவி வந்தது.

இதனிடையில் நேற்று 19-2-2024 அன்று மாலையில் நடிகர்  தனுஷ் அவர்களின் 50-வது படத்தின் பெயர் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வந்தது.

சொன்னபடியே தனுஷின் ஐம்பதாவது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் படத்தின் பெயர் ‘ராயன்‘ என்று வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் தனுஷ் மொட்டை அடித்து லேசாக முடி வளர்ந்தவாறு பெரிய மீசையுடன் கறி வெட்டுபவர்கள் அணியும் ஆடை அணிந்து படித்த கத்தியுடன் கோபமாக நின்று கொண்டிருந்தவாறு இருந்தது.

அவருக்கு பக்கத்தில் ஒரு ஐஸ் வண்டியில் நடிகர் சந்தீப் கிஷன் வெல்த் சட்டை அணிந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்படியே பக்கத்தில் இன்னொருவர் நின்றுக் கொண்டிருந்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தை Pan இந்தியன் திரைப்படம் ஆக கொண்டு வருவதற்காக பல மொழிகளில் ‘ராயன்‘ திரைப்படம் தயாராகி வருகிறது. 

இந்த 2024 வருடத்திற்குள் திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சமீப காலங்களாக தனுஷ் படம் நடிப்பதை விட படம் இயக்கிய தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

 ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் தமிழ் சினிமாவில் தனுஷ் வலம் பெறுகிறார்.

ஏற்கனவே நடிகர் தனுஷ் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்‘ என்கிற படத்தை தானே இயக்கி தயாரித்துள்ளார். அவருடைய wunderbar flims தயாரிப்பு நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை தயாரித்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top