திருஞானசம்பந்தர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முழுவதும் பன்னிரு திருமுறைகளுள் 1,2,3 திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.

 திருஞான சம்பந்தர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 16,000 பதிகங்கள் என்று கூறுவார்கள். (பதிகம்’ என்பது 10 அல்லது 11 பாடல்கள் கொண்ட தொகுதி ஆகும்.) ஆனால், இன்று நமக்குக் 

கிடைத்திருக்கும் ஞானசம்பந்தரின் மொத்தப் பதிகங்கள் 384 மட்டுமே திருஞான சம்பந்தர் பாடிய 4.213 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன. ‘தாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஜாளசம்பந்தன்‘ என்று இவர் புகழப்படுவார்.

இவருடைய காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. இவரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். ஆயினும் திருநாவுக்கரசர் சைவ நெறிக்கு வருவதற்கு முன்னரே சைவத் தலங்களைத் தரிசித்துத் தேவாரம் பாடியதில் திருஞானசம்பந்தரே முதல்வர் ஆவார்.

 சிறுவயதில் ஞானம் பெற்றுக் கவிபாடும் திறம் பெற்ற இவர். தம்மைவிட அசுவையில் மூத்த திருநாவுக்கரசரோடு இணைந்து சிவத் தொண்டாற்றி, அவருக்கு முன்னரேயே இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்தார் என்பர்.

திருஞானசம்பந்தர் சோழ நாட்டில் சீர்காழியில் அந்தனர் குலத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவபாத இருநயர், பசுவதி அம்மையார் ஆவர். திகுஞான சம்பந்தரின் இயற்பெயர் ஆளுடைப்பிள்ளை என்பதாகும்.

 இவர் மூன்று வயதாக இருக்கும்போது, இவரைக் குளக்கரையில் விட்டுவிட்டு இவரது தந்தையார் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். 

அப்போது குழந்தையான ஆளுடைப்பிள்ளை பசியால் துடித்து அழுதார். அப்போது அம்மையும் அப்பனுமான இறைவன் காட்சியளித்து, அவருக்குப் பாலோடு ஞானத்தையும் கலந்து ஊட்டி மறைந்தனர்.

 நீராடிவிட்டுக் கரையேறிவந்த தந்தை சிவபாத இருதயர், குழந்தையின் கையில் பால் கிண்ணமும், வாயில் பால் வடிவதையும் கண்டு. ‘யார் கொடுக்கப் பால் உண்டனை?’ என்று அதட்டினார். அதற்கு ஆளுடைப்பிள்ளை புன்முறுவலோடு பின்வரும் பாடலைப் பாடி அம்மையப்பரைச் சுட்டிக்காட்டினார்.

தோடுடைய செவியன் விடையேறிஓர் தூவெண் மதிசூடிக்-காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங் கவர்கள்வன் -ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த -பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

பாடலின் விளக்கம்

பீடும் பெருமையும் மிக்க பிரமாபுரம் என்ற ஊரில் எழுந்தருளிய எம் பெருமானாகிய சிவன் தோடு அணிந்த காதினை உடையவன்; காளை மாட்டில் ஏறி வருபவன் தூய்மை வாய்ந்த வெண்மதியாகிய இளம் பிறையைத் தன் சடைமுடியில் சூடியவன்; சுடுகாட்டின் சாம்பலை உடல் முழுதும் பூசியவன்; அவள்தான் என் உள்ளத்தைக் 

கொள்ளை கொண்ட கள்வன்; தெழ்கள் பலவுடைய மலர்களால் முன்னர் ஒருநாள் நாள் அவனைப் பணிந்து எத்திப் புகழ்ந்துதொழ அருள்செய்த பெரியவள் அவன். அத்தகைய பெம்மாள் இவனல்லவா?

அருஞ்சொற்பொருள் விளக்கம் :

தோடு – காதணி; விடை – கானை மாடு; கடலைப் பொடி – சுடுகாட்டுச் சாம்பல் பொடி எடு – இதழ்கள்: பீடு – பெருமை; பெம்மான் – பெரியவன், இறைவன்,

என்ற பாடலைப் பாடினார். அம்மையப்பரிடம் பாலுண்டதும் ஞானம் பெற்றுப் பாடும் புலமை பெற்றதால் ‘ஜானசம்பந்தர்’ என்று அழைக்கப் பட்டார். தந்தையின் தோளில் அமர்ந்தவாறே சிவத்தலங்கள் பலவற்றிற்கும் சென்று திருப்பதிகங்கள் பல பாடிப் பணித்தார் என்று இவரைப் பற்றிய வரலாறு கூறுகிறது.

‘தம(சி)திவாய’ என்னும் ஐந்து எழுத்து மத்திரம் சைவர்களின் தாரசு மந்திரம் ஆகும். இந்த ‘நமசிவாய’ என்னும் மந்திரம் சைவ சமயத்தின் கடவுளான சிவனின் நாமத்தை உச்சரிக்கும் மந்திரம் ஆகும் ‘நமசிவாய’ என்னும் நாதனின் நாமத்தை உச்சரிக்கும்போது பக்தர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளையும் விளைவுகளையும் பற்றித் திருஞானசம்பந்தர் தமது தேவாரப் பாடல் ஒன்றில் எளிமையாக விளக்குகின்றார்.

காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி – ஓது வார்தமை நன்ளெறிக்கு உய்ப்பது- வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது- நாதன் நாமம் நமச்சி வாயவே.

பாடலின் விளக்கம்

சிவபெருமான்மீது காதலாகி, உள்ளம் கசிந்து, உணர்வுப் பெருக்கில் கண்களில் நீர் மல்கச்செய்து, உச்சரிக்கும் பக்தரை நல்ல நெறியில் வழிப்படுத்துவது எது தெரியுமா? நான்கு வேதங்களிலும் உட்பொருளாக விளங்குவது எது தெரியுமா? இறைவனின் நாமமான ‘நமச்சிவாய’ என்னும் மந்திரமேயாகும்.

அருஞ்சொற்பொருள் விளக்கம்

ஓதுவார் – படிப்பவர். உச்சரிப்பவர்; உய்ப்பது – செலுத்துவது; வேதம் நான்கு – இருக்கு, எகர். சாம, அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்கள்; மெய்ப்பொருள் உண்மையான உட்பொருள்தாமம்-பெயர்)

‘நம(ச்)சிவாய’ ன்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமைகளைத் திருஞான சம்பந்தர் எளிய சொற்களால் அழகாக விளக்குகின்றார். இந்தப் பாடலில் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்ற தொடர் நெஞ்சை ஈர்க்கின்ற தொடராக உள்ளது.

‘நல்லவர்க்கு இல்லை நாளும் கோளும்’, ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’,’ மந்திரமாவது நீறு’

முதலிய பல நல்ல கருத்துகளை நமக்கு வழங்கிய ஞானியாகத் திருஞான சம்பந்தர் விளங்குகின்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top