தொல்பொருள் சான்றுகள்-பண்டைய தமிழர் வரலாறு-வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்த விதம்.

 பண்டைய தொல்பொருள் சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எப்படி சேகரித்தார்கள்?

வழி வழியாகத் தொடர்த்து நிகழ்ந்து வரும் உண்மைச் செய்திகளைத் தொகுத்துப் பதிவு செய்வதே வரலாறு ஆகும். 

கடந்து சென்ற தொல் பழங்காலத்துச் செய்திகளை எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது? 

இது சிக்கலான பணியாகும். பொதுவாக நாட்டு நடப்பை ஏடுகள். கல்லெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்று பதிவு செய்து வைப்பர் சிலர் அவ்விதம் பதிவு செய்யாமல் விட்டுவிடுவர். அந்நாட்டின் வரலாற்றினை எழுதுவது பெரும் பிரச்சிளை ஆகி விடும்

மேலும் தீ, வெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கைச் சீற்றங்களால் பதிவு செய்து வைத்த செய்திகளே கூட அழிந்து விடுவதுண்டு. அப்போது வரலாற்று ஆசிரியர்கள் உண்மைச் செய்திகளைத் தேடிக்காண அரும்பாடுபட வேண்டியுள்ளது. 

பண்டைய தமிழர் வரலாறு

ஒரு நாட்டின் வரலாற்றை வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைப்பர். மேலும் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட உள்நாட்டினரே எழுதும் போது சில உண்மைச் செய்திகள் புறக்கணிக்கப் பெறுவதும் உண்டு. 

சில செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, திரித்து எழுதப்படுவதும் நேரிடும். தமிழக வரலாற்றுக்கு இப்படிப் பல இடையூறுகள் உள்ளன.

இந்திய நாட்டின் வரலாற்றை எழுதிய சில ஆசிரியர்கள் தமிழக வரலாற்றைக் குறித்து, ஆய்வுகளை முன்வைத்துச் சரியான பதிவுகளைச் செய்யவில்லை. 

வடஇந்திய மாநிலங்களின் செய்திகளை விரிவாகப் பதிவு செய்த அளவு தமிழ்நாட்டின் செய்திகளைத் தொகுத்து எழுதவில்லை.

முப்புறமும் கடலால் சூழப்பட்ட தமிழகத்தின் இயற்கைச் சூழல் ஏற்படுத்திய வெள்ளப பெருக்கம் காரணமாகப் பல சான்றுகளைக் கடல் கொண்டு சென்று விட்டது. 

மேலும் தமிழர்கள் தமது வரலாற்றை ஒரு முறையான அக்கறையோடு தொகுத்து வைக்கும் வழக்கமின்றி வாழ்ந்தனர். 

அதனால் போதிய அடிப்படைச் சான்றுகள் கிடைக்க வழியில்லை. எனவே தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு அயல்நாட்டு வரலாற்றாசிரியர்களின் கண்களில் படாமல் போயிருக்கலாம். எனினும் தமிழக வரலாற்றைத் தமிழ் அறிஞர்கள் அரிய உழைப்பின் விளைவாக எழுதியுள்ளனர். 

அவர்களுள் வி. களதசபைப் பிள்ளை, பி.டி சீனிவாச ஐயங்கார், கேஏ நீலகண்ட சாஸ்திரி. தி.வி சதாசிவப் பண்டாரத்தார், கே.கே. பிள்ளை, மா. இராசமாணிக்கனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர்.

தமிழக வரலாற்றுக்கான சான்றுகம் கிடைத்த அளவில் அவை ஐந்து காலப் பிரிவுகளுக்கு உரியவை ஆகின்றன. அவை வகுமாறு:

  1.  வரலாற்றுக்கு முந்திய காலமும் சங்க காலமும்
  2. பல்லவர் காலம்
  3.  சோழ பாண்டியர் காலம்
  4.  இடைக் காலம்
  5.  பிற்காலம்

தமிழக வரலாற்றினைத் தொருக்க உதவிய அடிப்படைச் சான்றுகள் பல்வகைப் பட்டன. அவை புதைபொருள் ஆய்வில் கிடைத்த கற்கருவிகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நாணயங்கள், கலைச் சின்னங்கள், மண்மூடிய கோயில்கள். 

முதுமக்கள் தாழிகள், பிணம் புதைக்கத் தோண்டப்படட கற் குழிகள் கல்லறைத் தோட்டங்கள் ஆகிய தொல்பொருள் சான்றுகள் ஒருவகை,)

சங்க இலக்கியங்கள், இந்திய மொழி இலக்கியங்கள், அயல் நாட்டினர் எழுதி வைத்தக் குறிப்புகள், சமய இலக்கியங்கள், புராண இதிகாசங்கள், ஐரோப்பிய மற்றும் இந்தியச் சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற நாட்டுக் குறிப்புகள், கடிதங்கள். இந்தியாவை ஆண்ட பிறநாட்டு ஆட்சியாளர்களின் கடிதங்கள் ஆவணங்கள், அறிக்கைகள் முதலிய எழுத்து வடிவச் சான்றுகள் மறுவகை

புதை பொருள் சான்றுகள்

கால ஓட்டத்தினாலும் இயற்கை நிகழ்வுகளாலும் புவியின் மீதுள்ள கட்டிடங்களும் பொருள்களும் புதைந்து போவது உண்டு. 

பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்து போன நம் முன்னோரை குழிகளில் இட்டு புதைத்து வைப்பர். பிணத்துடன் கூடவே இரும்புக் கருவிகள் மட்பாண்டங்கள் இறந்தவர் பயன்படுத்திய வேறு சில பொருட்கள் ஆகியவற்றை உடன் சேர்த்து புதைத்து விடுவர்.

தொல்பொருள் ஆய்வுகளில் அப்புதைகுழி தோண்டும் போது ஒவ்வொரு கால்கட்டத்தையும் சேர்த்த சான்றுகள் கிட்டுவதுண்டு.

இவை ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு சிறப்பான சான்றுகளை வெளிப்படுத்தின. எடுத்துக்காட்டாக பையம்பள்ளி ஆய்வில் பளப்பளப்பான கைக்கோடாரிகள்.

கையினால் செய்த மண்பாண்ட ஓடுகள், காதனிகள் ஆகியவை உலோகக் கலப்பற்ற புதிய கற்கால சான்றுகளைப் பலப்படுத்தும்.

தொல்பொருள் சான்றுகள்

பழங்காலத் தமிழகம் பற்றி அறிய அத்திரம்பாக்கம் அகழாய்வு உதவியது. பழந்தமிழகத்தில் குடியிருப்புகள் எப்படி அமைந்திருந்தன என்பது பற்றிய சான்றுகள் சானூர், அரிக்கமேடு, செங்கமேடு, நிக்காம்புலியூர், அலகரை, உறையூர், காவிரிப்பூம்பட்டிளம், கொற்கை, காஞ்சிபுரம், வசவசமுத்திரம் ஆகிய இடங்களில் கிடைத்தன அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கைக்கோடாரி பழங் சுற்காலத் தமிழகத்தை மேலும் அறிய உதவியது.

சானூர், குன்றத்தூர் அமிர்தமங்கலம் முதலான இடங்களில் காணப்பட்ட இடுகாடுகள் பண்பாட்டைப் பற்றிய சான்றுகள் ஆயின. 

தமிழகத்தில் ரோமானியர் வாழ்ந்த விவரம் அரிக்கமேட்டில் அவர்கள் வாழ்ந்த வீடுகள் பயன்படுத்திய காசுகள் மற்றும் பானைகள் மூலம் புலப்பட்டது.

 வண்ணம் தீட்டப்படாத பளப்பளப்பான பானைகள். ஆண் பெண் உருவங்கள், உருவங்கள் வரையப்பட்ட பிராமி எழுத்துக்கள் தாங்கிய பானை ஓடுகள். வண்ணக் கற்களால் செய்யப்பட்ட மணிகள் முதலியனவும் காலத்தை வரையறுக்க உதவுகின்றன.

மேலும், வெளிநாடுகளில் கிடைத்த சான்றுகளும் பழந்தமிழர் வாழ்க்கை முறை, குடிபெயர்ந்த விவரம், வணிகம் செய்த தகவல் ஆகியவற்றை அறிய உதவின சைப்பஸ் தீவிலுள்ள எண்கொமியிலும், பாலஸ்தீனத்தின் ‘காசா ஜேரார் பகுதியிலும் கிடைத்த சில புதைப்பொருட்கள் ஆதிச்சநல்லூரிலும் புதுச்சேரியிலும் கிடைத்தவற்றோடு ஒத்துள்ளன

தமிழகத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மற்றும் சங்ககாலம் குறித்த செய்திகள் மேற்குறிப்பிட்ட புதைபொருள் ஆய்வின் மூலம் கிட்டியுள்ளன. 

அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆதிச்சநல்லூர், புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு. சேலம் மாவட்டம் மோகனூர், சென்னையை அடுத்த அத்திரம்பாக்கம் ஆகிய இடங்களில் நிகழ்த்த ஆய்வுகள் ஆகும்.

 மேலும் சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் சான்று கள், பையம்பள்ளி, சாலூர், குன்றத்தூர். அமிர்தமங்கலம், சங்கமேடு நிக்காம்புலியூர், அலகரை, உறையூர், கரூர். காவிரிப்பூம்பட்டினம், கொற்கை வசவ சமுத்திரம், காஞ்சிபுரம்  , வசவ சமுத்திரம், காஞ்சிபுரம் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. 

சாசனங்கள் :

சாசனங்களைக் கல்வெட்டு, செப்பேடு என்று இரு வடிவங்களில் காணலாம், சில செய்நிகள் காலத்தால் அழியக் கூடாது என்ற உணர்வோடு கல்லில் வெட்டிக் குறித்தவை.

 அவற்றைக் கல்வெட்டுகள் என்கிறோம். செம்புத் தாட்டில் பொறித்ததைச் செப்பேடுகள் என்றும் அழைக்கின்றோம்.

கல்வெட்டுகளில் காலத்தால் பழமையானவை பிராமி எழுத்து வடிவில் கிடைக்கின்றன. (திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, சித்தன்ன வாசல், புகலூர், சிங்கவரம் முதலிய இடங்களில் அவ்வெழுத்தில் அமைந்த தமிழக வரலாற்றுக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன)

பல்லவர்கள் கிரந்த எழுத்து முறையில் வெட்டிவைத்த கல்வெட்டுகளை மாமல்லபுரம், மகேந்திரவாடி, பல்லாவரம், மேலச்சேரி, மண்டகப்பட்டு, வளவனூர், திருச்சி, வல்லம் முதலிய இடங்களில் காணலாம்.

வெளிநாடுகளிலும், தமிழகத்திற்கு வடக்கிலும் கிடைத்த கல்வெட்டுகளும் தமிழக வரலாற்றை அறிய உதவி புரிகின்றன.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் கல்வெட்டு, அவரது பேரரசின் தெற்கு எல்லைக்கு அப்பால் சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர், கேரள புத்திரர் ஆகிய மன்னர்கள் ஆண்டு வந்ததைக் குறிப்பிடுகிறது. இவை சோழ, பாண்டியர் தன்னுரிமையோடு விளங்கிய செய்தியையே நமக்கு உணர்த்துகின்றன.

நம் காலத்தில் ஆலயங்களுக்கோ, பிற அறச் செயல்களுக்கோ நாம் பத்திரம் எழுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கிறோம். பொதுவாக நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அத்தகைய கொடை விவரப் பதிவுகளாகவே இருக்கின்றன.

அவை ஓர் அரசனோ அல்லது செல்வன் ஒருவளோ ஆலயத்திற்கோ அல்லது ஒரு பொதுநல காரியத்திற்கோ அல்லது தொண்டு செய்வோருக்கோ தந்த கொடை விவரத்தைக் கூறுகின்றன.

 நிலம், பொருள். அணிகலன் அல்லது பணமாக அந்த நன்கொடை அமைத்துள்ளது. இது ஒரு காலகட்டத்தில் அந்தச் சமுதாயம் இருந்த அரசியல் நிலை, பொருளாதார மற்றும் சமய நிலை ஆகியவற்றைப் புலப்படுத்துகிறது

வேறு சில சாசனங்கள் அரசின் ஆணை முறை, இன வகைப்பாடு, இடத்தைச் சுட்டுதல் முதலிய வேறு சில செய்திகளுக்கும் சான்றாகின்றன. எடுத்துக்காட்டாக தேவதாசி முறையோ அல்லது அடிமை முறையோ நிலவிய விவரத்திற்குச் சில சாசனங்கள் சான்று காட்டுகின்றன.

கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காரவேலனின் சாசனம் ஒன்று உண்டு. அது கலிங்க நாட்டின் பாதுகாப்பிற்கு தமிழக அரசுகள் அச்சுறுத்தலாக விளங்குவதை வெளியிடுகின்றன. இவை தவிர சிங்களம், ஜாவா, சுமத்திரா பர்மா நாட்டுக் கல்வெட்டுக்கள் சோழர் வரலாற்றை நாம் அறியத் துணைபுரிகின்றன.

கல்வெட்டுகள் ஒரு மதம் ஒரு காலகட்டத்தில் பெற்றிருந்த செல்வாக்கையும் குறிக்கும்.. சான்றுகளாகின்றன திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, சித்தள்ள வாசல் ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளும் சமனா பௌத்தத் துறவிகளின் பாறைப் படுக்கைகளில் காணப்படும். கல்வெட்டுக்களும் அத்தகையன இவற்றில் பிராமி எழுத்து வடிலில் தமிழ்மொழி வரையப் பட்டுள்ளது

அதேசமயம் மாமல்லபுரம், ‘மகேந்திரவாடி, பல்லாவாம், மேலச்சேரி, மண்டகப்பட்டு, தளவானூர், திருச்சிராப்பள்ளி. வல்லம் முதலான இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளில் பல்லவர்களின் சிறந்த எழுத்து முறையும், பாண்டியர்களின் வட்டெழுத்து முறையும் காணப்படுகின்றன. எழுத்து வடிவம் வேறாயினும் மொழி தமிழே என்பது உணரத்தக்கது

இராசராச சோழன் காலம் முதல் ஒரு கல்வெட்டு எந்த மன்னன் காலத்தது என்று கணிப்பது எனிதாயிற்று. காரணம் அரசனது புகழ்பாடும் மெயங்கீர்த்திகள் அவற்றில் இடம் பெறலாயின மெய்க்கீர்த்தி தனியாக இருந்ததால் கால மயக்கம் ஏற்படவில்லை.

 இத்தகைய கல்வெட்டுக்கள் தஞ்சை பெரிய கோவில், திருமுக்கூடல், உத்திரமேரூர். திருவொற்றியூர் காணப்படுகின்றன. ஆகிய இடங்களில்

கல்வெட்டுகள் பெரும்பாலும் ஆலயங்களில் தான் கிடைத்துள்ளன. ஆலயச் சுவர். தூண் கல்தளம், பாறைகள், படுக்கைகள் ஆகியவற்றில் இவை. காணப்படுகின்றன. சமண முனிவர்களும், பௌந்த முனிவர்களும் வாழ்ந்த குகைகளில் கல்வெட்டுகள் சில கண்டறியப்பட்டுள்ளன)

முதல் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் மிகவும் குறைவு. கி.பி 500க்குப் பிறகே தமிழகமெங்கும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

 ஒன்பதாம் நூற்றாண்டு கால அளவில் மிகுதியான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டாலும் 10 12ஆம் நூற்றாண்டுக் காலமே கல்வெட்டுகளின் பொற்காலம் எனலாம்.

 கிட்டத்தட்ட 30000 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன எனினும், அவற்றில் பெரும்பாலானவை பதிப்பிக்கப்படவில்லை. இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் தமிழகத்தைச் சார்ந்தவையே மிகுதியாகும்.

செப்பேடுகள் பிற்காலப் பாண்டியர், சோழர் வரலாற்றை அறியவும் பல்லவன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரை விவாம் அறியவும் துணை புரிகின்றன.

 செப்பேடுகளில் குறிப்பிடத் தக்கவை வேள்விக் குடிச் செப்பேடு. சின்னமனூர்ச்  செப்பேடு, வீடன் பட்டயச் பள்ளங்கோவில்” செப்பேடு. திருவாலங்காட்டுச் செப்பேடு மற்றும் கூரம்புல்லூர், காரைக்குடி, பர்கூர், வேலூர்ப்பாளையம், சுரந்தை முதலிய ஊர்களில் கிடைத்துள்ள செப்பேடுகளும் ஆகும்)

செப்பேடுகளில் பல தமிழ், வடமொழி என இருமொழிகளிலும் அமைந்துள்ளன. செப்பேடு எழுதக் காரணமாள நோக்கமும், உள்ளுறைச் செய்திகள் தமிழிலும், தெய்வம் அல்லது மன்னர் வாழ்த்து வடமொழியிலும் இடம்பெற்றுள்ளன.

 நாணயங்கள்

மக்களிடையே புழங்கி வந்த நாணயங்கள், வரலாற்றுக் காலத்தை வரையறுக்க உதவும் சான்றுகள் ஆகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் கண்டறியப் படவில்லை. சங்க காலம் தொடங்கிக் கிடைத்துள்ள நாணயங்களில் சில, பழம் பாண்டிய மன்னர்களுடையவை அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைத்துள்ளன.

 அவற்றில் ஒருபுறம் மீன் சின்னமும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையன. மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவலன் பொட்டலில் சங்க கால நாணயங்கள் கிடைத்துள்ளன.

தமிழர் நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு நாங்களே நாணயங்களைத் தயாரித்துப் புழக்கத்தில் விட்டனர் சங்க காலம் முதல் சோழர், பாண்டியர்கள் சாலங்கள் வரையிலுமான பழைய நாணயங்கள் பல கிடைத்துள்ளன. 

பொதுவாக உலோசுங்களைப் பயன்படுத்தியே நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் வகை, தரம், முதலியன மக்களின் உற்பத்தித் திறந்தையும் அவர்களது பொருளாதார நிலையையும் எடுத்துக்காட்டும். மேலும் நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னனின் நாட்டு எல்லை மற்றும் வணிகத் தொடர்புகள் ஆகியவற்றைக் கணிக்கலாம்.

 தலை, பூ என்று இன்றைய தாணயங்கள் போன்றே இரு பகுதிகள் உள்ள இவற்றில் மன்னர்களின் பெயரோ பட்டப் பெயரோ மட்டும் பொறிக்கப்பட்டுள்ளன காலம் பொறிக்கப் படவில்லை. 

கி.மு.முதல் நூற்றாண்டைச் சார்ந்த சின்னம் பொறித்த நாணயங்கள் கோவை மாவட்டத்துப் பள்ளலூரில் சவக்குழிகளில் கிடைத்துள்ளன. இதன் தலைப் பகுதியில் யானையின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பொள், காணம், காசு ஆகிய நாணயங்களின் வடிவ அமைப்பு, எடை ஆகியவை குறித்து அறிய முடியவில்லை.

அயல்நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்துவந்த வணிகத் தொடர்புகளை அரிக்கமேட்டில் கிடைத்துள்ள உரோமப் பேரரசன் அகஸ்டஸ் மற்றும் அவரையடுத்த மன்னர் காலத்து நாணயங்கள் ஆகியன சங்க இலக்கியம் கூறும் வணிகத் தொடர்பினை நிலைநாட்டுகின்றன கர்நாடக மாநிலத்தில் 

சந்திரவல்லியில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குரிய(சீன நாணயம் ஒன்று சீனரோடு தமிழகத்திற்கு இருந்த தொடர்பினை விளககுகின்றது.

காஞ்சிபுரத்தில் கிடைத்த பல்லவர் கால நாணயங்களின் ஒரு பகுதியில் இரண்டாம் இராசசிம்மனின் பட்டப் பெயரான ஸ்ரீநிதி அல்லது ஸ்ரீபர என்பதும் பல்லவர் முத்திரையான காளைச் சின்னமும் காணப்படுகின்றன. நாணயங்களில் ஒன்று அல்லது இரு மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன மறு பகுதியில் சக்காம், பிறைமதி, சைத்திய கோபுரம், குடை ஆமை முதலியவற்றுன் ஒரு சின்னம் இடம்பெறுகின்றது.

சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிக்கும் காசு. பழங்காசு, பாடை முதலிய தங்க நாணயங்களில் 127 நாணயங்கள் தவனேஸ்வரத்தில் கிடைத்துள்ளன இவை தவிர பிற இடங்களில் கிடைத்துள்ள நாணயங்கள் நல்ல தங்கத்தால் ஆனவை அல்ல பிற உலோகக் கலிப்புள்ளவை பிற்காலச் சோழர் கால நாணயங்கள் பெரும்பாலும் செம்பால் ஆனவையே. இம்மாற்றம் அக்காலத்தின் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகின்றன

 கலைச் சின்னங்கள் :

கட்டிடங்கள். ஆலயங்கள், சிற்பம், ஓவியம் முதலிய கலைச்சின்ளங்கள் வரலாற்று ஆய்வுக்கு மட்டுமின்றி பண்பாட்டு பயன்படுகின்றன வளர்ச்சியைக் கண்டறியவும்

சோழர், பாண்டியர், பல்லவர் ஆகிய மூன்று மள்ளர்களும் தமக்கே உரிய ஓவிய,கட்டட, சிற்பக் கலைகளை வளர்த்தனர் குகைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் அவற்றில் பயன்பட்ட வண்ணக் கலலைகளும், கட்டடங்களும் ஒரு குறிப்பிட்ட மன்னர் பண்டைய கலைகளின் மீது கொண்ட  வெளிப்பாட்டினை உணர்த்துகின்றன. 

பல்லவர் காலக் கோயில்களில் ஒரே ஒரு வாயில் மட்டுமே உண்டு நோழச் காலத்து ஆலயங்களின் கருவறை.. விமானம் உயரமானது பாண்டியர் காலத்திலோ வாயில் கோபுரம் உயரமானது. 

இது தவிர மாமல்லபுரத்துக் கோயில் களிலும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் உள்ள உருவங்களில், அக்கால மக்களின் ஆடை அணிகலன்களின் சிறப்பு. ஆடல் பாடல் கலைகளில் அவர்களுக் கிருந்த நேர்ச்சி ஆகியன புலப்படுகின்றன.

தமிழக வரலாற்றிற்கான கண் கண்ட சான்றுகள் எனக் கூறத்தக்க ஆலயங்கள். பற்பல, அவை, தஞ்சைப் பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், பேரூர், மதுரை, திருவரங்கம், தென்காசி, வேலூர்க் கோடடை, ஜலகண்டேசுவரர் ஆலயாம் எனப் பற்பல. அவற்றில் தமிழரின் தொன்மை முதல் பிற்காலம் வரை நாம் பல சான்றுகளைக் காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top