புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் 

  1. சாப விமோசனம்
  2. பால் வண்ணம்பிள்ளை
  3. கயிற்றரவு
  4. ஞானக்குகை 
  5. உபதேசம்
  6. அன்றிரவு
  7. வாடா மல்லிகை
  8. கருச்சிதைவு
  9. ஒருநாள் கழிந்தது 
  10. பொள்ளகரம்
  11. நினைவுப்பாதை
  12. நியாயம்
  13. சிற்பியின் நரகம்
  14. காஞ்சனை
  15. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் 
  16.  சாமியாரும் குழந்தையும் சீமையும்

அறிமுகம்

‘சிறுகதை’ என்னும் இலக்கிய வடிவத்தைப் பலர் கையாண்டிருந்த போதும் மிகுந்த நுட்பந்துடனும் சிறந்த வடிவத்துடனும் அதனைக் கையாண்டவர் புதுமைப் பித்தளாவார். அவரது சிறுகதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

 அவற்றுள் சிறந்தவையாகத் தாம் கருதுவனவற்றை மீ.ப. சோமு அவர்கள் தேர்ந்து சிறுகதைத் தொகுப்பை உருவாக்கியுள்ளார் இதில் 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி இங்கு விளக்கப்படுகிறது

புதுமைப்பித்தன் சிறுகதைகள்-சுருக்கம் :

‘இந்தத் தொகுப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஆசிரியருடைய உள்ளத்தின் முழு வடிவமும், முழுமையான கோணங்களும் அவற்றின் வன்மையும், திண்மையும், மென்மையுங்கூடப் பல வண்ணங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே’ என்கிறார் நேஷனல் புக்டிரஸ்ட் வெளியீடாக வந்துள்ள புதுமைப்பித்தன் சிறுகதைகள் நூலின் தொகுப்பாசிரியர் மீ.ப. சோமசுந்தரம். 

ஆகவே இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் புரிந்துகொள்ள நல்ல முன்னுதாரணமான தொகுப்பாக அமைந்துள்ள எனலாம். இக்கதைகளைச் சுருங்கிய அளவில் நாம் அறிமுகம் செய்து கொள்வது அவசியம்.

 சிறுகதை தொகுதியினை மாணவர்கள் வாசிக்கின்றபோது தான் அக்கதையின் முழுப் பரிமாணங்களையும், சிறப்புகளையும் அறிய முடியும். மூலச் கதைக்கரு, தேர்விளைப் சிறுகதை நூலிளை மாணவர்கள் வாசித்தல் நன்று.

 சாப விமோசனம் :

அகலிகை உயிர்பெற்று விட்டாள் அகலிகையின் அருகில் கோதமன் தவத்தில் ஆழ்ந்திருக்கிறான். இராமன் வந்துவிட்டான். ஆனால் அவர்கள் மளம் மிரளுகிறது. எப்படி வாழ்வதென இருவருக்கும் விளங்கவில்லை.

தசீசியும், பரீசியும் வந்து காணுகிறார்கள். அகலிகை ஒளிந்து கொள்கிறான் இராமன் சீதை இருவரிடம் மட்டுமே அவளால் பழக முடிகிறது. பிற முனிவர்களின் மனைவியர் அவளை வெறுத்துப் பார்க்கின்றனர்.

பதினான்கு ஆண்டுகள் தீர்த்த யாத்திரையை அகலிகையும் கோதமனும் மேற்கொள்கின்றனர். மன அமைதியின்றி இராமன் வருகைக்குக் காத்திருக்கின்றனர் அயோத்தியில் இராமன் வருகிறான்.

 அக்கினிப் பிரவேசம் பற்றிக் கூறுகிறாள் சீதை. அகலிகை மனத்தில் தாண்ட வமாடியது கண்ணகி வெறி போலியை நம்பிப் புண்ணான அவள் மனம் இன்று 

உண்மையுடன் ஒன்ற மறுக்கிறது அகலிகை மீண்டும் கல்லாகிறாள். மனச்சுமை மடிகிறது. கோதமன் துறவியாகிறான்.

பால்வண்ணம்பிள்ளை

மாவட்டக் கலெக்டர் அலுவலசு குமாஸ்தா பாவ்வண்ணம் பிள்ளை. பாற்பக ஒன்று வாங்கினால் பயன்படும் என்று தெரிவிக்கிறார். அவர் துணைவி அலுவலக நண்பர் ஒருவரிடம் மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவில் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

 உண்மை உணர்ந்த நேரத்தில் வெளியான அந்தக் கருந்து, அவரது உடன்பாட்டைப் துணைவியோ குழந்தைகளின் நலன் கருதிப் பசுவை வாங்கிவிடுகிறாள் பால் வண்ணம் பிள்ளை அன்றிலிருந்து காப்பி, மோர் அருந்துவதை நிறுத்திவிடுகிறார். அரை விலைக்கு அந்தப் பசுவை விற்று விடுகிறார். தம்பிள்ளைகள் நீராகரம் குடித்து வளரும் என்று அறிவிக்கிறார்.

கயிற்றரவு

ஒரு சிக்கலை எடுத்துக்கொண்டு படிப்படியாக வளர்ச்சி பெற்று முடியும் நிகழ்ச்சியாக இல்லாத இக்கதை, காலம் பற்றியும் வாழ்வும் பற்றியும் பரமசிவம் பிள்ளையின் சுழன்று செல்லும் சிந்தனையோடா மாக அமைகிறது.

ஞானக்குகை

அறிவு வளர்ச்சி பெறாத சிறுவன் ஒருவன் பிறர் அணுக அஞ்சுகின்ற குகைக்குள் சென்று அறிவின் ஒளியைக் காணுகிறான். தவ உருவம் பூண்ட ஒருவர் அவளை அழைத்துச் செல்கிறார் ஒரு பாறையில் அமர்த்தி மந்திரத்தை உச்சரிக்கிறார். தேவி தரிசனம் கிட்டுகிறது. பேரிடி இடிக்கிறது குழந்தை கரிக்கட்டையாகிச் சுனையில் மிதக்கிறான்.

உபதேசம் :

டாக்டர் விசுவநாதனும் டாக்டர் வில்க்கின்ஸனும் நண்பர்கள். திறமைசாலிகள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள். ஒருநாள் சித்தாந்த சாமி எனும் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்கிறார் விசுவநாதன்.

 அதன்பின் அடுத்தநாள் அவர் துறவியாகிறார். பின் ஐந்து ஆண்டுகள் கழித்து இமயமலை யாத்திரையின் போது விசுவநாதனைக் காணுகிறார் வில்க்கின்ஸன். 

பனிக்கட்டிக்குள் உறைந்த நிலையில் இருக்கிறார் விசுவநாதன். ‘நமது உயிர் நூல் சாத்திரங்களைக் கிழித்தெறிந்துவிட்டு வேறுமாதிரி எழுத வேண்டும் என்று அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கூறுகிறது.

அன்றிரவு :

வைகையில் வெள்ளம் வர வைத்து, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட அருள் விளையாடல் நடந்த அந்த இரவினைக் கற்பனை செய்துள்ளார்.

 அரசனது அடியினைப் பெற்ற ஈசள் வெள்ளத்துள் மறைய அவனைக் காக்கச் சென்ற அரசனும் மடிந்து போகின்றான்

வாடா மல்லிகை:

சரசு என்கின்ற பிராமணப் பெண் பதினேழாவது வயதிலேயே களாலான இழக்கிறாள். தம்பிக்குத் திருமணம் நிகழ்கிறது. தன் தம்பி குறித்து மகிழ்கின்ற அவள் தன்னிலை எண்ணி அழுகிறான்.

 அவளைக் கவனிக்கும் ஒருவன். நான் அவளை மணப்பதாகக் கூறுகிறாள். ‘திருமணம் வேண்டாம் பாசம் போதும்’ என்கிறாள். அவன் தூற்றுகிறாள். ‘எள்ளை மணந்து நீ நியாகியாவதை நான் ஒப்பமாட்டேன்’ என்று மறுத்து விடுகிறாள் மறுநாள் அவன் உடல் கிளாற்றில் மிதக்கிறது.

கருச்சிதைவு

மின்சாரத் துறையில் பணியாற்றுகின்ற ஒருவரை மையமாகக் கொண்ட கதை, அவர் பம்பாய் சர்க்கார் மின்சாரத் திட்ட அறிக்கையை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் இதற்கு நடுவே வெற்றிலை போடுவது தண்பகுடன் உரையாடுவதென அனைத்தும் நடக்கிறது. இடையே பத்திரிகையிலிருந்து தொலைபேசி வருகிறது. 

சிறுகதை வேண்டுமென்று. தருவதாக வாக்களித்துவிட்டு அலுவயில் மூழ்குகிறார். மீண்டும் வேண்டுகோள் விடுத்ததும் அவசர் அவசரமாக எழுதத் தொடங்குகிறார் அவருக்கே விளங்காமல் போகிறது. பாத்திரங்களைச் சாகடித்து ஒரு வழியாய்க் கதையை முடித்து அச்சிற்குக் கொடுக்கிறார்.

ஒரு நாள் கழிந்தது

முருகதாசர் என்ற எழுத்தாளரின் ஒரு நாள் வாழ்வைச் சொல்வதன் மூலம் வறுமையின் துயரம் உணர்த்தப்படுகிறது. முகுகதாசர் எழுத்தின் மூலம் ஊதியம் பெறுபவர். 

அது அவரது எந்தத் தேவைக்கும் போதவில்லை படுக்கச் சரியான பாய் கூட இல்லை. மளிகைக் கடைக்காரர் மேலும் கடன் தர மறுக்கிறார் நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது. ஆனால் தான் வாங்கப் பணமில்லை. 

தம்மைக் காண வந்த நண்பர் சுப்பிரமணியப் பிள்ளையிடம் மூன்று ரூபாய் கேட்கிறார். அவர் எட்டணா தான் உள்ளதெளக் கொடுக்கிறார் அதனையும் வாங்கிக் கொள்ளும் முருகதாசரிடம் அவரது மனையி அற்குக் காப்பிப்பொடி வாங்கி வரச் சொல்கிறான். மளிகைக் கடைக்காரனுக்குக் கொடுப்பதைத் ‘திங்கடகிழமை பார்த்துக் கொள்ளலாம்” என்கிறாள்.

பொன்னகரம்

பொன்னகரத்தில் வசிக்கும் அம்மாளு ஒரு மில் கூலி அவள் கணவன். குதிரை வண்டியோட்டி, அவர்கள் உழைப்பில் குதிரை உட்பட ஐந்து பேர் பசியாற வேண்டும். முருகேசன் விபத்தொன்றில் ஊமையடிப்பட்டுப் படுத்து விடுகிறான்.

அவனுக்குப் பால்கஞ்சி வேண்டும் கூலிபோட இன்னும் இரண்டு நாள் போக வேண்டும். அன்றைக்கே காசு வேண்டும் முக்கால் ரூபாய்க்குத் தன் கற்பினை விற்கிறாள், கணவனுக்குப் பால் கஞ்சி வாங்க.

நினைவுப் பாதை :

வைரவன் பிள்ளையின் மனைவி வள்ளியம்மை இறந்து போகிறார். அவளோடு வாழ்ந்த வாழ்வு குறித்த வைரவன் பின்னையின் நினைவுகளே நினைவுப் பாதை எதையெண்ணினாலும் இறுதியில் மனைவியின் சடலத்தின் மீது வந்தே மனம் குவிகிறது. 

நினைக்கவும் ஏதுமில்லை. மனைவி என்பது தூதன வஸ்துவாக இருந்து பழகிய பொருனாலி உடலோடு ஒட்டின உறுப்பாகி விட்டது.

கிரியையின் இரண்டாம் நாள் கோசைப் பாயில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தபோதும், அவள் மணக்கோலத்தில் நின்ற அந்த நாளே நினைவுக்கு வருகிறது. 

வள்ளியம்மை ஏனையோர் மனத்தில் நின்றதாகத் தெரியவில்லை. அதனால் என்ன, யாருடைய மனத்தில் எப்படி நிற்க வேண்டுமோ அப்படி நிலைத்து விட்டாளே ஆச்சி கொடுத்து வைத்தவள்,

நியாயம் :

தேவ இரக்கம் நாடார் பெஞ்சு மாஜிஸ்திரேட் சிறந்த பக்திமாள். ஒருநாள் தம் வண்டியில் பூட்டியிருந்த குதிரையைக் கொடுமைப்படுத்தியதாக ஒருவனை இழுத்து வருகிறார்கள்.

 விசாரித்து 5 ரூபாய் அபராதம் விதிக்கிறார். வண்டிக்காரன் அவர் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறான். இந்த ஒருமுறை மன்னிக்குமாறு அவனைச் “சாத்தானே” என்று திட்டி விடுகிறார். தேவ இரக்கம். அவனுக்கு நல்ல பாடம் கற்பித்த மகிழ்ச்சியோடு இரவு ஜெபம் செய்கிறார்.

 பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே…. எங்கள் பாவங்களை மன்னியும் நாங்களும் எங்களிடம் கடன்பட்டவர்களுக்கு மன்னிக்கிறோம். “ஆமென்”, 

சிற்பியின் நகரம் :

பூம்புகார் நகரத்தின் சிற்பி சாத்தன். அவனுக்கு இரு நண்பர்கள் ஒருவள் பைலார்க்ஸ், மற்றொருவர் பரதேசி. முன்னவர் யவளன், பின்னவர் இந்தியர், பரதேசி இந்து சமயத்தவர், தீவிர ஆத்திகர். சாத்தன் செய்த சிற்பத்தில் இறைவனைக் காண்கிறார் பரதேசி. 

சிலையை மட்டும் காண்கிறான் பைலார்க்கஸ். சிலையை நிறுவிய நாளில் சாத்தன் மளம் களிக்கிறாள். ஆனால் வந்து தொழும் அனைவரும் தத்தம் மோட்சத்திற்காகத் தொழுவது அவளை வெறிப் பிடிக்கச் செய்கிறது. 

உயிரற்ற மோட்ச சிலையே உன்னை உடைக்கிறேன் என்கிறான், கனவு கலைகிறது. அவன் வடித்ததாக எண்ணிய அழகை மக்கள் சிலையில் பார்க்கவில்லை அவர்கள் அதில் கண்டதெல்லாம் தங்கள் போட்சவாவிலைத்தான் இத்தோல்வியே சிற்ப நாகம்,

காஞ்சனை :

கணவனும் மனைவியும் வாழும் வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரி வருகிறாள். அவளுக்கு வேலை தருவதாகக் கூறுகிறாள் குடும்பத் தலைவி. அவனுடைய கால்கள் ஆனால் பூமிமேல் இருப்பதைப் பார்த்துவிட்ட குடும்பத் தலைவருக்கு அவ பேயாக இருக்குமேச என்ற ஐயம் எழுகிறது.

 அவளது பேச்சும்,சிரிப்பும், நடத்தைகளும் ஐயத்தை உறுதி செய்கின்றன. இரவெல்லாம். அஞ்சுகிறார். யாரிடமும் சொல்லவும் துணிவில்லை பின்னர் ஒருநாள் வாரோ தன் கழுத்தைக் கடித்து இரத்தத்தை உறிஞ்ச முயற்சிப்பதாக “உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து மனைவி கூறுகிறாள். 

இரவு நடுத்தெருவிலிருந்து ஒருவன் அழைக்கிறான். விபூதி கொடுக்கிறான். ‘காஞ்சனை’ இனிமேல் வரமாட்டான் என்கிறாள். பின்னர் அனைத்தும் சரியாகின்றன,

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

கந்தசாமிப் பிள்ளையைப் பார்ப்பதற்காகக் கடவுன் சென்னைக்கு வருகிறார். காப்பிக்கடை முதலாளி கடவுளிடம் கள்ளநோட்டைக் கொடுத்து ஏமாற்றுகிறார்.

 தம்மிடம் கடவுள் போல நடந்து கொள்ளாமல் மனிதன் போல் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறார் கந்தசாமி. ஆனால் கடவுளால் அது முடியவில்லை, அரிசி மூட்டையை வரவழைக்கிறார். இரவில் என்னையுமா தூங்கச் சொல்கிறீர் என்கிறார்.

கையிலிருந்த பணம் தீர்ந்ததும் பிழைப்பதற்கு வழி தேடுகிறார் கடவுள், பலவற்றையும் சிந்தித்துப் பின்னர் கைலாயத்திலிருந்து பார்வதி தேவியையும் அழைத்து வந்து கூத்துத் தொழில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்படுகிறது. 

சென்னை நிருத்திய கலாமண்டலிக்குச் செல்கின்றனர். அங்கு அம்பலக்கூத்தனும் அம்மையும் தங்கள் உண்மையான உருவில் ஆடுகின்றனர். ஆனால் அது தகுதியற்ற நடனம் என்று ஒதுக்கப்படுகிறது. 

நாட்டிய சாத்திர முறைப்படி இது இல்லை எனக் குறை கூறப்படுகிறது. கடவுளால் பூவுலகில் வாழ முடியவில்லை. *உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உடன் இருந்து வாழ முடியாது” என்று சொல்லிவிட்டு மறைந்து விடுகிறார். இக்கதை முழுதும் அங்கதம் நிறைந்தது. என்னற் சுவைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வது.

சாமியாரும் குழந்தையும் சீமையும் :

துறவியொருவர் ஆற்றங்கரையில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் உள்ளார். சிந்தனை, சிலந்திப் பின்னல் போல நீண்டுகொண்டே செல்கிறது. தொடக்கமும் முடிவும் தெரியாமல் சுற்றிச் சுற்றி வருகிறது.

உலகத்தின் இயற்கை என்ன என்பது தெரிந்துவிட்டதால் உள்ளத்தில் விரக்தியே ஏற்படுகிறது. படைப்புத் தத்துவம் பற்றி எவ்வளவு சிந்தித்தும் அவரால் ஒரு முடிவுக்கும் வரவியலவில்லை.

அருகில் குழந்தையொன்று விளையாடுகிறது. இதே உலகத்தைச் சேர்ந்ததெனினும் சீடையைத் தின்றுகொண்டு ஆற்றில் கால்களை அனைத்து ஆடிய வண்ணம் அமர்ந்திருக்கிறது. இதற்கு எந்தக் கவலையும் இல்லை. ஏளெனில் அது சிந்திக்கவில்லை. அதனால் அது வாழுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top