இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை மறுமலர்ச்சி, மகாகவி பாரதியிடம் தொடங்குகிறது என்று கொண்டால் உரைநடை, வளம் பெற்று வளர்ந்தது புதுமைப்பித்தனிடம் என்று கொள்ளலாம்.
‘சிறுகதை’ என்னும் வகைமை தமிழில் வனரத் தலைப்பட்ட காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிவிட்டார்.
ஆனால் தமக்கு முன்பிருந்த பலரும் மரபு வழியாள கதை மரபுகளைக் கைக்கொண்டிருந்த வேளையில் தமிழ் சிறுகதைக்குத் தற்காலப் பாங்கையும் இலக்கியத் தன்மையையும் நிறைவாக ஏற்படுத்தித்தந்தவர் புதுமைப்பித்தனேயாவார்.
தமக்கு முன்னோடிகளாக இருந்த வ.வே.சு ஐயர், அ. மாதவய்யா, கல்கி போன்றவர்களிடமிருந்து பல்வேறு விதங்களில் மாறுபட்ட கதைகளை அவர் இயற்றினார்.
தமது முன்னோர்களும் சமகாலப் படைப்பானிகளும் சொல்லாத வாழ்வின் இருண்ட பக்கங்களுக்குள் அவர் பயணம் செய்து அவற்றை வெளிக்கொணர்ந்தார்.
வாசகர்களுக்கு இன்பமளிப்பதை நோக்கமாகக் கொண்டு மேலோட்டமாக எழுதும் எழுத்துகளில் அவருக்கு உடன்பாடில்லை.
ஆழமான மனித உணர்வுகளையும் வாழ்வின் மெய்மையைக் காட்டும் கருக்களையும் எடுத்துக் கொண்டார்.
கதைக்கு எடுத்துக்கொண்ட செய்திகளிலும், அவற்றைக் கதைகளாக எழுதுகின்ற வடிவத்திலும், எழுத்து நடையிலும், தனித்தன்மையான வேகத்தையும் துணிவையும் புதுமைப்பித்தன் படைத்துக் கொண்டார்.
உலக இலக்கியத்தில் அவருக்குத் தேர்ச்சி இருந்தது போலவே பழந்தமிழ் இலக்கியத்திலும் பயிற்சி இருந்தது
ஆங்கில அறிவு தந்த இலக்கியப் பரிச்சயத்துடன் விருத்தாசலத்திற்குத் திருநெல்வேலிக்காரர் என்பதால் சொ. (கஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு அதுவும் முக்கியமாகப் பிராமணர்களுக்கு இல்லாத) ஒரு தமிழ் மரபு அறிவு ஏற்பட்டிருந்தது என்பது தெரிகிறது.
சொ.வி. விஷயத்தில் இது அதிகமாகச் சைவச் சார்பு பெற்றது என்பது வெளிப்படை நாள் அவரைச் சந்தித்த காலத்தில் அவர் சித்தர் பாடல்கள் முக்கியமாகச் சிவவாக்கியர் மற்றும், கம்பராமாயணம் முக்கியமாக யுத்தகாண்டம் மற்றும் கலிங்கத்துப்பரணி, திருமந்திரம் என்று பேசிக்கொண்டிருப்பார். (புதுமைப்பித்தன் இலக்கியத் தடம், ப.23) என்கிறார் க.நா.சு.
இவ்வடிப்படை, தமிழில் ஆழமும் கனமும் அழகும் கொண்ட படைப்புகளை இயற்றத் துணையாயிற்று.
மனிதனின் மேன்மைகளை, உயர் பண்புகளை, இலட்சியங்களை மட்டுமல்லாது அவனது குறைகளை, பண்புக்கேடுகளை, சிறுமைகளை, சீரழிவுகளை ,வக்கிரங்களை மற்றும் மனித சமுதாயத்தின் அவலங்களை, அக்கிரமப் போக்குகளை எல்லாம் கதைகளில் சித்திரித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வு புதுமைப்பித்தனின் கலையாக்கத்திற்கு அடிப்படை நோக்காக இலங்கியது.
புதுமையான பார்வை, கூர்மையான பார்வை, தனிச் சிறப்புமிக்க சிந்தளை நுட்பம், பாத்திரப் படைப்பு.
கதைமாந்தர்களின் மனநிலைச் சித்திரிப்பு, தனது எண்ணங்களை அழுத்தமாகவும் புதிய முறையிலும் கூறும் துணிவு, கதைகளுக்குப் பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றுக்குக் கலை வடிவம் கொடுப்பதிலும் இருந்த நேர்த்தி, ஈடு இணையற்ற எழுத்தாற்றல், கையாண்ட ஒருவிதத் துள்ளல் நடை ஆகியன அவரின் தனித்தன்மைகளாகத் திகழ்ந்தன.
*கண்கள் இருப்பது எதையும் பார்ப்பதற்குத்தான் என்ற இரும்புத் தத்துவம் பெற்றிருக்க வேண்டும்”
எனக் குறிப்பிடும் அவர் கண்கள் காணுகின்ற வாழ்வின் எல்லாக் கூறுகளுமே கதைக்குரிய கருக்கள் தாம் என்ற கொள்கையோடு இயங்கினார்.
புதுமைப்பித்தன் விதவிதமான சோதனை முயற்சிகள் செய்து வெற்றி பெற்றவர் பரந்த அளவிலும் ஆழ்ந்த நிலையிலும் வாழ்வின்மீது செலுத்திக் கதைப்பார்வையைச் பொருட்களையும் பாத்திரங்களையும் கையாண்டு இருப்பவர்.
சமூதாயத்தின் அவலங்கள் முதன் முதலில் ஒரு கலையுள்ளத்தின் வேதனை யோடும் துடிப்போடும் வெளிப்பட்டது, அவரது கதைகளிலேயே எளில் மிகையாகாது.
அதனாலேயே மனிதரின் சிறுமைகளையும் வக்கிரங்களையும் வாழ்க்கை முரண்பாடுகளையும் கண்டு பரிகசிக்கிற கிண்டல் பண்ணுகிற மனத்தின் குரல்களாக அவரது கதைகள் காணப்படுகின்றன.
புதுமைப்பித்தனால் சிறுகதைகள் தமிழ் இலக்கியச் செல்வங்களாயின.
திருத்தக்க தேவர் தொடங்கிய வடமொழிக் காவிய மரபு எவ்வாறு கம்பனிடத்தில் தமிழாகி, தமிழின் சிகரமாகி, அகில உலகையும் அளந்து நிற்கிறதோ அவ்வாறே வ.வே.சு. ஐயரால் தொடங்கப்பெற்ற சிறுகதை மரபு புதுமைப்பித்தனிடத்துத் தமிழாகி, தமிழ் உரைநடையின் சிகரமாகி, அகில உலகிற்கும் தமிழின் பெருமையை எடுத்துக்காட்டி நிற்கிறது. (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ப.52) என்கிறார் கா. சிவத்தம்பி.