மாணிக்கவாசகர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு

பண்டைய மதுரையை அடுத்த திருவாதவூர் என்னும் ஊரில் சைவ அந்தணர் குலத்தில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவர் தந்தையார் சம்பு பாதசாரியார், நாயர் சிவஞான வாத்தியார்.

 பிறந்த ஊரை வைத்து இவரை ‘வாதவூரார், திருவாதவூரார் வாதவூரடிகள்’ என்று அழைப்பார்களே தவிர இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு என்பர்

இவரது கல்வியறிவைக் கண்ட அரிமர்த்த பாண்டியன் இவருக்குத் ‘தென்னவன் பிரம்மராயன்” என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் அவையில் முதலமைச்சராக அமர்த்திக் கொண்டான் குதிரைப் படையைப் பெருக்க நினைத்த பாண்டியன இவரைக் குதிரைகள் வாங்கிவர அனுப்பிளான்.

 வாதவூரர் வழியில், திருப்பெருந் துறை என்னும் ஊரில் குருந்த மரத்தடியில் வீற்றிருந்த ஒரு முனிவரிடம் மனத்தைப் பறிகொடுத்து அவரது அறிவுரையில் ஆழ்ந்து போளார் சிவபெருமானே இவரை ஆட்கொள்வதற்காக முளிவர் உருவில் அங்கிருந்தார். 

குதிரை வாங்கத் கொண்டுவந்த அரகப பணத்தைச் சிவப்பணிக்கே செலவிட்டு வெறுங்கையுடன் அரண்மனைக்குத் திரும்பினார்.

இதனால் பாண்டியன் இவரைச் சிறையில் அடைத்தான். இறைவன் நரிகளை எல்லாம் பரிகளாக்கி (குதிரைகளாக்கி) அரசனிடம் விட்டுச் செல்ல. பரிகள் எல்லாம் தள்ளிரவில் நரிகளாகிக் காளகம் சென்றன.

 இதனால் வெகுண்ட பாண்டியன் வாதவூரர் முதுகில் சுல்லை ஏற்றி வையை ஆற்றில் நிறுத்தினாள் இறைவள் வையையில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கினான் வையைக் கரை உடைந்தது. உடைப்புகளை அடைக்க ஊரார் திரண்டுவர அரசன் ஆணையிட்டான்.

வந்தியின் பொருட்டு ஆண்டவனே கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்தான் கூலியாளாக வந்த சிவன் வேலை செய்யாதிருப்பது கண்ட பாண்டியன் பிரம்பால் அடிக்க, இறைவன் மேல் பட்ட அடி எல்லோர் மேலும் பட்டது. 

இறைவன் திருவருள் இது என்பதை உணர்ந்த பாண்டியன் வாதவூராரை விடுவிந்து மீண்டும் அவரை அமைச்சராக்கினான் அவரோ பதவியைத் துறந்து சிவபெருமான் மீது பாமாலைகள் பாடி மகிழ்ந்தார். அதுவே திருவாசகம் எனப்பட்டது.

திருவாசகம் – அறிமுகம்

திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது, (திரு = தெய்வத்தன்மை) தெய்வத்தைப் புகழ்ந்த வாசகம் திருவாசகம் ‘திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்று கூறுவர் இக்கூற்று முற்றிலும் பொருந்துவதாகும். திருவாசகப் பாடல்களைப் பாடுவோர் யாரும், அவர் எந்தச் சமயத்தினராக இருந்தாலும் சமயம் 

கடந்து நெஞ்சு நெகிழ்வர் என்பது உண்மை கிறித்தவராள ஜி.யூபோப் திருவரசகம் பயின்று நெக்குருகி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ததது இதற்குச் சான்றாகும்.

வான்கலந்த மாணிக்க வாசகறின் வாசகத்தை நான்கலத்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினியே தேன்கலந்து பால்கலந்து செழுங்களித்திரு கவைகலந்துவான்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

என்று இராமலிங்க அடிகளார் பாடியிருப்பது இதன் பெருமையை டார்த்தும். திருவாசகத்தில் அமைந்துள்ள i8 திருவசுவல் என்னும் பகுதி தமிழ் மொழியில் அமைந்த நல்ல அருச்சளைய பாடல்களாகும்.

ஆண்டாள் பாடிய திருப்பாவை போலத் திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை சயாம், சாவகம், கடாரம் என்னும் கீழை நாடுகளில் தமிழ் மந்திரமாகப் போற்றப்பட்டு வருகிறது. 

நிருவாசகத்திலுள்ள திருச்சதகம என்ற பகுதி உணர்ச்சிமிக்க அனுபல வெளிப்பாடாக உள்ளது. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகமும் திருக்கோவையார் என்ற நூலும் எட்டாம் திருமுறையாக வைத்து மதிக்கப்படுகின்றன.

திருவாசகம் பாடல் – 1

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிச்செய்தது திருச்சதகம் என்பர். அது பத்துத் தலைப்புக்களில் நூறு பாடல்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். அதில் அறிவுறுத்தல் என்னும் தலைப்பில் அமைந்த பத்துப் பாடல்களில் ஒன்று இது.

வாளாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே! 

பாடலின் விளக்கம்

ஆகாயமாக, நிலமாக, காற்றாக, சூரிய சந்திர நெகுப்பு முதலிய ஒளியாக நிற்கின்றாய்! எல்லா உயிர்களின் உடலாகவும் இருக்கிறாய்; உயிராகவும் இருக்கிறாய்! நீ உண்டு என்பார்க்கு உண்மையாய்த் தோன்றியும், இல்லை என் பார்க்கு இன்மையாய் மறைந்தும் உலக முதல்வனாகி நிற்கின்றாய்!

 ‘நான்’, ‘எனது’ என்ற ஆணவக்காரர்களைக் கூத்தாட்டு வானாகவும் நீ விளங்குகின்றாய்! உன்னை என்ன சொல்லி நான் வாழ்த்துவேனோ? எனக்கொள்றும் தோன்றவில்லையே! 

அருஞ்சொற்பொருள் விளக்கம்

வான் – வானம், மண்-நிலம், வளி – காற்று, ஊள் – உடம்பு. கோள் – முதல்வன்; கூத்தாட்டுவாள்- ஆட்டிவைப்பவன், நின்றாயை – விளங்குகின்றவனே; என்சொல்லி “என்னவென்று சொல்லி, எதைக் குறிப்பிட்டுச் சொல்லி, வாழ்த்துவளே துதிப்பேனோ தெரிய வில்லையே!.

குறிப்புரை:

இறைவன் அனைத்துமாகி இருப்பவள்; உடலாகவும் இருப்பவன். உயிராகவும் இருப்பவன், கடவுள் உண்டு என்று நம்புவார்க்கு அவன் உண்டு. இல்வை என்பவர்க்கு அவன் இல்லை என்று கூறுவது நாத்திகர் கூற்றிலும் இறைவன் இருக்கிறான் என நயமாக உரைத்துமுறை எண்ணி மகிழத் தக்கதாகும்.

நான், எனது என்று செல்வம், பதவி முதலிய வசதிகளால் செருக்குற்ற ஆட்சி யானரையும் ஆட்டி வைப்பவள் இறைவன். எல்லாமாக இருக்கும் அவளை எந்தப் பெருமை ஒன்றை பட்டும் சொல்லி வாழ்த்துவது என்று மாணிக்கவாசகர் திகைப்பது: இலக்கிய நயம் பயப்பதாக உள்ளது.

 திருவாசகம் பாடல் – 2

இறைவனை அடைந்து முக்திபெற்றதைப் பாடுவதே ‘பிடித்த பத்து’ ஆகும். பத்துப் பாடல்களில் இறைவனைத் தப்பவிடாமல் ‘சிக்கௌப் பிடித்தேன்’ என்று ஆனந்தக் கூத்தாடிப் பாடுகிறார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் உள்ள ‘பிடித்த பத்து’ திருத்தோணிபுரத்தில் மாணிக்கவாசகர் அருளியது என்பர். இறைவனோடு முக்தி பெற்றுக் கலக்கின்ற பக்தியுணர்வை இப்பகுதி உரைக்கிறது. அதிலிருந்து ஒரு பாடலைக் காண்போம். 

பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிஉலப்பிலா ஆனந்த மாயதேனினைச் சொரித்து புறம்புறம் திரிந்தசெல்வமே! சிவபெரு மானே!யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்! எங்கெழுந்து அருள்வது இனியே!

பாடலின் விளக்கம்

தன் குழந்தைக்குப் பாலூட்டும் நேரத்தை நினைத்துச் சரியாக ஊட்டிப் பசியைப் போக்கும் தாயைக் காட்டிலும் பரிவு காட்டினாய்! பாலியாகிய என் உடலை உருக்கி, உள்ளத்தின் உள்ளே ஒளியைப் பெருக்கி, அழிவற்ற ஆனந்தம் என்னும் தேனைச் சொரிந்தாய். 

என் புறம் புறமான அழுக்குகளை மாற்றினாய் என் செல்வமே! சிவபெருமானே! நான் உன்னைத் தொடர்ந்து வந்து சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். இனி நீ என்னை விட்டு எங்கும் எழுந்து செல்ல முடியாது! அருஞ்சொற்பொருள் விளக்கம்

சால – மிகுதியாக, பரிந்து – பாசம் காட்டி; பாவியேனுடைய – பாவம் செய்தவனாகிய என்னுடைய; ஊன்-உடல்; உள்ளொளி – மனத்தின் வெளிச்சம்; உலப்பிலா – அழிவற்ற, சிக்கென – இறுக்கமாக.

குறிப்புரை:

இந்தப் பாடலில் இறைவனைப் பால் நினைந்தூட்டும் தாயுடன் ஒப்பிடுவது மிக நயமாக உள்ளது. மாணிக்கவாசகர் இறைவனை ‘அம்மையே அப்பா’ என்று தாயும் தகப்பனுமாகப் பார்ப்பவர். 

அது இப்பாடலிலும் வெளிப்பட்டுள்ளது. தன்னை நாயேன், பேயேன் என்று பழித்துக் கூறுவது மாணிக்கவாசகர் வழக்கம். இப்பாடலில் ‘பாவியேன்’ என்று தன்னைப் பழித்துக் கூறுகிறார்.

 இறைவனைச் சிக்கெனப் பிடித்துவிட்டதாக மகிழ்கிறார். இறைவன் தன்னைத் தடுத்தாட் கொண்ட உண்மையை மாற்றித் தானே இறைவனைப் பிடித்துவிட்டதாகக் கூறுவது இலக்கிய நயம் தரும் உத்தியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top