தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன?

தொகைநிலைத் தொடர்கள் :


 சொற்கள்‌ இரண்டுமுதலாகத்‌ தொடர்ந்து வந்து பொருள்‌ தருவது – தொடர்‌ எனப்படும்.


கார்குழலி பாடம்‌ படித்தாள்‌.


 இத்தொடரில்‌ உள்ள மூன்று சொற்களும்‌ தொடர்ந்து வந்து பொருளைத்‌ தருகின்றன. சொற்கள்‌ தொடராகும்போது இரு சொற்களுக்கிடையே வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்று மறைந்து வரும்‌. இங்ஙனம்‌ உருபுகள்‌ மறைந்து வரும்‌ தொடர்களைத்‌ ‘தொகைநிலைத்‌தொடர்கள்‌” என்பர்‌.




‌ கயல்‌, விழி என இரண்டு சொற்கள்‌ உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும்‌ உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை எனக்கூறுவர்‌. தொகை நிலைத்தொடர்‌ அறுவகைப்படும்‌.


அவை: 


1. வேற்றுமைத்தொகை, 
2. வினைத்தொகை,
3. பண்புத்தொகை, 
4. உவமைத்தொகை,
 5. உம்மைத்தொகை,
6. அன்மொழித்தொகை         என்பன.


கண்ணனை இராமன்‌ பார்த்தான்‌ – என்னும்‌ இத்தொடரில்‌ என்னும்‌ உருபு யார்‌, யாரைப்‌ பார்த்தான்‌ எனப்‌ பெயரை வேறுபடுத்திக்‌ காட்டுவதனால்‌, வேற்றுமை என்கிறோம்‌. பெயரின்‌ பொருளை வேறுபடுத்திக்‌ காட்டும்‌ உருபுக்கு வேற்றுமை உருபு என்பது பெயர்‌. இவ்வேற்றுமைகள்‌ எண்வகைப்படும்‌. 


இவற்றுள்‌ முதல்‌ வேற்றுமைக்கும்‌ எட்டாம்‌ வேற்றுமைக்கும்‌ உருபு இல்லை. மற்ற
வேற்றுமைகளுக்கு உருபுகள்‌ உண்டு. அவை ஐ, ஆல்‌, கு, இன்‌; அது, கண்‌ என்பன. இரண்டாம்‌ வேற்றுமை உருபு முதல்‌ ஏழாம்‌ வேற்றுமை உருபுவரை உள்ளனவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்று வேற்றுமை உருபாய்‌ வரும்‌. இருசொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதனை வேற்றுமைத்தொகை என்கிறோம்‌.


1. பால்‌ பருகினான்‌ – இரண்டாம்‌ வேற்றுமைத்தொகை
(பால்‌ -ஐஃ-பருகினான்‌- இங்கு ஐ என்னும்‌ உருபு மறைந்துள்ளது)


2. தலை வணங்கினான்‌ – மூன்றாம்‌ வேற்றுமைத்தொகை
(குலை – ஆல்‌ – வணங்கினான்‌)


3. வேலன்‌ மகன்‌ – நான்காம்‌ வேற்றுமைத்தொகை
(வேலன்‌ கு – மகன்‌)


4. ஊர்‌ நீங்கினான்‌ – ஐந்தாம்‌ வேற்றுமைத்தொகை
(ஊர்‌ 4 இன்‌ + நீங்கினான்‌)


5. செங்குட்டுவன்‌ சட்டை – ஆறாம்‌ வேற்றுமைத்தொகை
(செங்குட்டுவன்‌ – அது – சட்டை)


6. குகைப்புலி – ஏழாம்‌ வேற்றுமைத்தொகை
(குகை – கண்‌ * புலி)


 வினைத்தொகை என்றால்‌ என்ன?
 உண்கலம்‌ இத்தொடரைப்‌ படித்துப்‌ பாருங்கள்‌. இதனை உண்டகலம்‌,
உண்கின்ற கலம்‌, உண்ணும்‌ கலம்‌ என முக்காலத்திற்கும்‌ ஏற்பப்‌
பொருள்‌ கொள்ளலாம்‌. ஆடுகொடி, பாய்புலி, அலைகடல்‌ ஆகிய
தொடர்கள்‌ வினைத்தொகை பயின்று வந்த தொடர்கள்‌. 


இவ்வாறு காலங்காட்டும்‌ இடைநிலையும்‌ பெயரேச்ச விகுதியும்‌ மறைந்து வரும்‌
பெயரெச்சம்‌, வினைத்தொகை எனப்படும்‌.


காலங்கரந்த பெயரெச்சம்‌ வினைத்தொகை – நன்னூல்‌, 364


 பண்புத்தொகை என்றால் என்ன? 


வெண்ணிலவு, சதுரக்கல்‌, இன்சுவை இச்சொற்றொடர்களைப்‌ படித்துப்‌ பாருங்கள்‌. வெண்மை, சதுரம்‌, இனிமை ஆகிய பண்புப்‌பெயர்கள்‌ நிலவு, கல்‌, சுவை ஆகிய பெயர்ச்சொற்களோடு சேர்ந்து வரும்போது இரண்டிற்கும்‌ இடையில்‌ ‘ஆகிய ஆன’ என்னும்‌ பண்பு உருபுகளும்‌ ‘மை’ விகுதியும்‌ தொக்கி (மறைந்து) வந்துள்ளன. எனவே, இவை பண்புத்தொகை பயின்று வந்த தொடர்கள்‌. 


(௭.கா) வெண்மை – நிலவு – வெண்ணிலவு.


இருபெயரொட்டுப்‌  பண்புத்தொகை என்றால் என்ன? 


எடுத்துக்‌காட்டாக,   மல்லிகைப்பூ என்னும்‌ சொல்லைப்‌ பார்ப்போம்‌.
மல்லிகை என்பது சிறப்புப்பெயர்‌ பூ என்பது பொதுப்பெயர்‌.
இரண்டுக்கும்‌ இடையில்‌ ஆகிய என்னும்‌ பண்பு உருபு மறைந்து
வந்துள்ளது. எனவே, இஃது இருபெயரொட்டுப்‌ பண்புத்தொகை
எனப்படும்‌.


உம்மைத்தொகை என்றால் என்ன?


கபிலபரணர்‌, உற்றார்‌ உறவினர்‌. இத்தொடர்கள்‌ கபிலரும்‌ பரணரும்‌, உற்றாரும்‌ உறவினரும்‌ என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும்‌ இறுதியிலும்‌ உம்‌ என்னும்‌ இடைச்சொல்‌ மறைந்து வந்து பொருள்தருவதனால்‌, உம்மைத்‌தொகை எனப்பட்டது.


அன்மொழித்தொகை என்றால் என்ன? 


 ‘கயல்விழி வந்தாள்‌”. இத்தொடரில்‌ முதலில்‌ உள்ள
கயல்விழி” என்பது, “கயல்‌ போன்ற விழி” என்னும்‌ பொருளைத்‌
தரும்‌ உவமைத்தொகை ஆகும்‌. இதனை முன்னரே கற்றோம்‌.
வந்தாள்‌ என்னும்‌ வினைச்சொல்லைத்‌ தழுவி நின்றதனால்‌,
*கயல்போன்ற விழியை உடைய பெண்‌ வந்தாள்‌” எனப்‌ பொருள்‌
தருகிறது.


இதில்‌ ‘உடைய’, ‘பெண்‌’ என்னும்‌ சொற்கள்‌ தொடரில்‌ இல்லாதவை. இவ்வாறு உவமைத்தொகையை அடுத்து அல்லாதமொழி தொக்கி வருவதனால்‌ இத்தொடரை உவமைத்‌ தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த அன்மொழித்தொகை என்கிறோம்‌. இதனைப்போன்று வேற்றுமை, வினை, பண்பு, உம்மை ஆகிய
தொகைநிலைத்‌ தொடர்களுக்குப்‌ புறத்தே அல்லாத சில மொழிகள்‌ தொக்கி நின்று பொருள்‌ தருவது அன்மொழித்தொகை ஆகும்‌.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top