தனது அடுத்த திரைப்படத்துக்காக உடல் எடையை குறைத்து வருகிறார் அஜித்-நெகிழ்ச்சியான பதிவு

 நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் “வலிமை.” சுமார் மூன்று வருடத்திற்கு மேலாக இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வந்தது.

சமீபத்தில் பிப்ரவரி 24 இல் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் அனைத்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

அஜித்குமாரின் வலிமை திரைப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வலிமை திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டு மகிழ்ந்தார்கள்.

ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும் வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில்  34 கோடி மேல் வசூல் சாதனை படைத்து விட்டது.

இதற்கு முன்பு நடித்த திரைப்படங்கள் ஆகிய ஆரம்பம், வீரம், வேதாளம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், விவேகம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் அஜித் குமார் அதிக உடல் எடையுடன் நடித்திருப்பது நீங்களே பார்க்கலாம்.

அதிக உடல் எடையை வைத்துக் கொண்டு அவரால் மிக சிக்கலான நடனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் செய்ய முடியாமல் சிரமப்பட்டார்.

 இருந்த போதிலும் வலிமை திரைப்படத்தில் பைக் ரேஸ் ஓட்டும் கேரக்டருக்காக மற்ற நடிகர்கள் போல் டூப் போடாமல் ஒரிஜினலாக அவரே கஷ்டப்பட்டு நடித்து இருந்தார்.

சமீபத்தில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு மாநாடு திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 

சிம்புவும் உடல் எடையை குறைக்க ரொம்ப கஷ்டப்பட்டார். இருந்தாலும் தனது உடல் எடையை குறைத்து தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

தற்போது நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்காக உடல் எடையை குறைத்து தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top