திருநாவுக்கரசர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு 

திருநாவுக்கரசர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 49,000/4,900 பதிகங்கள்) என்று கூறுவார்கள். ஆனால், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மொத்தப் பதிகங்கள் 313 மட்டுமே.

பதிகம்’ என்பது 10 பாடல்களைக் கொண்ட தொகுதி; சில பதிகங்களில் 9 அல்லது 11 பாடல்களும் இடம் பெறுவது உண்டு.) திருநாவுக்கரசர் பாடிய 3,066 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன.

 திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் பள்ளிரு திருமுறைகளுன் 4,5,6 திருமுறைகளாக வைத்துப் போற்றப்படுகின்றன. 

திருநாவுக்கரசர் – அறிமுகம் :

தமிழ்நாட்டிலுள்ள திருமுளைப்பாடியைச் சார்ந்த திருவாமூச் என்னும் ஊரில் வேளாளர் குடியில் பிறந்தவர் திருநாவுக்கரசர், திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார் என்பதாகும். 

இவர் தந்தையார் பெயர் புகழனார்; தாயார் பெயர் மாதிளியார். இவர் தமக்கையார் திலகவதியார் தீவிரச் சைவப் பற்றாளராக இருந்தார்.

திருநாவுக்கரசர் இளம் அகவையில் கவியாற்றலும் அறிவு நுட்பமும் நெஞ்சு உரமும் மிக்கவராகத் திகழ்ந்தார் இவரது திறனை அறிந்த சமணர்கள் இவரைத் தம் சமண சமயத்தில் முதன்மைப் பொறுப்பில் வைத்துப் போற்றினர். 

தருமசேனர் என்ற பெயரில் இவர் சமண முனிவர்களின் தலைவராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவர் தமக்கையார் திலகவதியார் சைவ நெறியில் பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். அறிவும் திறமையும் மிக்க தம் தம்பி சைவ சமயத்திற்குப் பணி செய்தால் நலமாகுமே என ஆசைப்பட்டார். 

தம் விருப்பத்தைச் சிவபெருமாளிடம் முறையிட, சிவன் அருளால் தருமசேனருக்குச் குலை நோய் எனப்படும் வெப்பு நோய் உண்டானது. சமண சமய மருத்துவர்களால் எவ்வளவு முயன்றும் குலை நோயிலிருந்து அவரை 

மீட்க முடியவில்லை திலகவதியாரின் முயற்சியால் அவர் சிவளின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதித் திருநீற்றினை உடல் முழுதும் பூச, ருலை நோய் நீங்கியது இதனால் சிவன்மீது நம்பிக்கை கொண்டு, அவர் சமண சமயத்தைத் துறத்து சைவ சமயத்திற்கு மாறினார் இது கண்டு பொறுக்காத சமணர்கள், தம் செல்வாக்கி அரசனைத் தூண்டிக் தருமசேனரைச் சிறைப்பிடித்துவரச் செய்தனர். 

அவரோ, ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்!” என்று பாடினார் (நூற்றறையில் போட்டும். மதயானையை எவியும், கல்லைக்கட்டிக் கடலில் எறித்தும் ரித்திரவதைக்கு உள்ளாக்கினர்] அவற்றிற்கு அஞ்சாத மருள்நீக்கியார் ‘கவ்துணைப் பூட்டிக் கடலுள் பாய்ச்சினும், நற்றுணையாவது. நமச்சிவா யவே’ என்று பாடினார். சிவனின் அருளால் எல்லா வகைத் துன்பங்களிலிருந்தும் மீண்டார்.

மருள்நீக்கியார் என்ற பிள்ளைப்பெயர் கொண்டு வளர்ந்து, தருமசேனர் என்ற பெயரில் சமணராக இருந்து, சிவனருளால் சைவராக மாறிய அ இறைவன் அருளிய பெயர் ‘திருநாவுக்கரசர்’ என்பது. ‘வாசீசர்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. திருஞானசம்பந்தர் இவரை ‘அப்பர்’ என்று அழைத்தார் வாகீசர், அப்பர் என்பன திருநாவுக்கரசரின் வேறு பெயர்களாகும்.

திருநாவுக்கரசர் பாடல் -1

திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்கள் இனிமையும் எளிமையுமாக அமைந்து இன்பம் பயப்பன சமண சமயத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறிய திருநாவுக் கரசரைத் தண்டிக்கக் கருதினர் சமணர்கள். அன்று மன்னனாயிருந்தவன் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் ஆவான். அவனும் சமண சமயத்தினனாக இருந்தான். 

அவளிடம் சமண முனிவர்கள் முறையிட, அரசள் திருநாவுக்கரசரைச் சிறைப்பிடித்து, சுண்ணாம்பு நீற்றறையில் இட்டுச் சித்திரவதை செய்யக் கட்டளை இட்டான். அவ்வாறே அரசனின் வீரர்கள் அவரை நீற்றறையில் இட்டுப் பூட்டினர். 

வெந்து உருகும் நீற்றறையிலும் திருநாவுக்கரசர் சிவனின் திருவடி நிழலை நிளைக்க, கொதிக்கும் நீற்றறை (சுண்ணாம்புக் காளவாசல்) அவருக்குத் தென்றலாக. இளவேளிலாக, குளிர்ந்த பொய்கையாக இருந்ததாம். இதனைப் பின்வரும் பாடலில் அவர் உணர்ச்சி பொங்கப் பாடியுள்ளார்.

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே- சுசன் எந்தை இணையடி நீழலே.

பாடலின் விளக்கம் :

குற்றமற்ற வீணையின் குளிர்ந்த இசை போலவும், மாலை தேரத்தில் வாலில் உலர் வகும் குளிர்ந்த நிலாவைப் போலவும், வீக்கின்ற தென்றல் போலவும் கிதன்றல் சிறக்கும் இளவேனில் காலம் போலவும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் மலர்ந்த குளிர்த்த குளம் போயியும் இருப்பது எம் இறைவனும் எம் தந்தையுமான சிவபெருமானின் திருவடி நிழலாகும் சிவனின் திருவடிகளை அடைந்தோரை எந்த வெம்மைவும் தாக்காது, சிவனின் அடிகள் குளிர்ச்சி மிக்கவை என்பது பாடலின் அடிக்கருத்தாகும்.

அருஞ்சொற்பொருள் விளக்கம்

மாசுஇல் – குற்றம் இல்லாத, மதியம் – சந்திரன், மூசுவண்டு – ரீங்காரிக்கின்ற வண்டுகள்; பொய்கை · குளம், எத்தை என் தந்தை; இணையடி – இரண்டாக இணைந்த பாதங்கள்; நிழல் – நிழல்

இறைவனடி சேர்ந்த அடியவர்களை இறைவன் எல்லா வகைத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுவான் என்பதனை இப்பாடல் உணர்த்துகின்றது. மேலும், இறைவளின் இணையடி நிழல் வீணையின் இசை போல, குளிர்ந்த நிலவு போல வீசுகின்ற தென்றல் போல, இளவேனில் காயம் போல, பொய்கை போலக் குளிர்ந்தது என்று வருணிப்பது இறை நம்பிக்கையை வலியுறுத்துகின்றது.

ஈசளான இறைவனை ‘எந்தை’ (என் தந்தை} என்று வோற்றிப்பாடும் திருநாவுக்கரசரின் திறம் பாராட்டத்தக்கது. இறைவளைத் தந்தையாகப் பாவிக்கும் இந்த உறவுமுறை மரபு பின்னச் வகும் சுந்தரர், இறைவனை அத்தா’ என்றும், மாணிக் சுவாசகர். அம்மையே அப்பா’ என்றும் அழைத்துப்பாட வழிவகுத்தது ஏளலாம்.

திருநாவுக்கரசர் பாடல் – 2 :

அப்பர் என்று திருஞானசம்பந்தரால் பாராட்டப் பெற்ற பெரியவர் திருநாவுக்கரசர் இறைவனுக்கு உரிய கடமை எது, நமக்குரிய கடமை எது என்பதை ஒரு பாடலில் அழகுற விளக்குகின்றார் தன்னைப் போன்ற அடியவர்களைத் தாங்குதல் இறைவன் 

கடளாகும் அடியவர்களின் கடன் இறைவனுக்கும் பணிசெய்து என்று பின்வரும் பாடலில் வலியுறுத்திக் கூறுகிறார்.

நம்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்சு டம்பைத் திருக்கரக் கோயிலாள் தன்கடன் அடியேளையும் நாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே.

பாடலின் விளக்கம்

நம் கடம்பன் என்று அழைக்கப்படும் முருகனைப் பெற்றவள் உமையம்மை அந்த அம்மையைத் தன் (இடப்பாகமாகக் கொண்ட பெரியவன் சிவபெருமான் (தெள் கடம்பை என்னும் ஊரில் திருக்கரக் கோயிலில் எழுந்தருளியுள்ளவன்.

 அவள் அந்த இறைவனின் கடன் பிற அடியவர்களைத் தாங்கியது போலவே அடியவனான என்னையும் ஒரு குறையும் நேராமல் தாங்குவது ஆகும் அதற்குக் கைம்மாறாக, என் கடன் எது தெரியுமா? அந்த இறைவனுக்குத் திருப்பணி செய்து கிடப்பதே ஆகும்!

 அருஞ்சொற்பொருள் விளக்கம்

கடம்பன் – கந்தன், முருகன், பங்கினன்-ஆண் ஒருபாதி பெண் ஒருபாதி என (உமை யொடு பாகன்ஆக அர்த்தநாரீசுவர மூர்த்தியாக விளங்கும் சிவன்; தென்கடம்பை தெற்குத் திசையிலுள்ள ஓர் ஊர்; தன்கடன் இறைவனின் கடமை, அடியேன் சிவனின் அடியாருள் ஒருவனான என்னையும், தாங்குதல் – பாதுகாத்தல்: பணி செய்து கிடப்பது – ஓயாது இறைப்பணி செய்வது

இப்பாடலில், திருநாவுக்கரசர் சுடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பதால் சிவ பெருமான் பெண்ணுக்குச் சம பங்கு உரிமை வழங்கிய சான்றோன் என்பதை நயமாக உணர்த்துகிறார். அடியவர்களைத் தாங்கிப் பாதுகாப்பதே அவனது கடமை என்று இறைவனின் உயரிய பண்பினை எடுத்துரைக்கிறார். ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற தொடர் நெஞ்சில் வைத்துப் போற்றத்தக்க வாசகமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top