குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் -தமிழ் இலக்கணம்

குற்றியலுகரம் என்றால் என்ன ?

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். குறுமை என்றால் குறுகிய என்பது பொருள். இயல் என்றால் ஓசை. உகரம் என்றால் உ எழுத்து. எனவே, குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம்.

ஒவ்வோர் எழுத்துக்கும் ஒலிக்கின்ற காலஅளவு உண்டு. குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை, மெய்க்கு அரை மாத்திரை என்னும் கால அளவில்தான் எழுத்துகளை ஒலித்தல் வேண்டும்.

உகரம் குறிலானதனால் ஒரு மாத்திரைக் கால அளவே ஒலித்தல் வேண்டும். ஆனால், அஃது ஒரு மாத்திரையளவு ஒலிக்காமல் சில சொற்களில் அரை மாத்திரைக் கால அளவே ஒலிக்கும். 

அவ்வாறு ஒலிப்பதனைத்தான் குற்றியலுகரம் என இலக்கண நூலார் குறிப்பிட்டுள்ளனர்.

 குற்றியலுகரம் மாத்திரை அளவு என்ன ?

சில சொற்களுக்கு இறுதியில் ஆறு வல்லினமெய் எழுத்துகளுடன் உகரம் சேர்ந்து (க் +உ = கு ; ச் + உ = சு; ட் + உ = டு; த் + உ =து ப் + உ = பு ற் + உ = று) வரும்போது, அந்த உகரம் அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

 கு, சு, டு, து, பு, று ஆகிய இந்த ஆறு எழுத்துகள் சொல்லின் இறுதியில் வருமாறு சில சொற்களைச் சொல்லுங்கள்.

எடுத்துக்காட்டாக,

  பசு, காடு, பந்து.

நான் சொன்னதுபோல் கூ, டு, து ஆகிய எழுத்துகள் சொல்லின் இறுதியில் வந்துள்ளன.

 ஆனால், பசு என்பதில் ஒலிக்கும் சு வையும், காசு என்பதில் ஒலிக்கும் சு வையும், அச்சொற்களோடு சேர்த்து ஒலித்துக்கேளுங்கள். ஏதேனும் ஒலிவேறுபாடு தெரிகிறதா?

பசு எனச் சொல்லும்பொழுது, அச்சொல்லிலுள்ள ‘சு’ ஒலியானது ஒரு மாத்திரை அளவு ஒலிக்கிறது. 

காசு என்னும் சொல்லை ஒலிக்கும்பொழுது, அச்சொல்லிலுள்ள ‘க’ ஒலி அதற்குரிய ஒரு மாத்திரையளவு ஒலிக்காமல் குறைந்து ஒலிப்பதனை உற்றுக்கேட்டால், ஒலிவேறுபாட்டை அறிவீர்கள்.

 இப்பொழுது இருசொற்களையும் ஒலித்துக்கேளுங்கள். ஒலிவேறுபாட்டை உங்களால் உணர முடிகிறதா? 

வல்லின மெய்களின்மேல் ஊர்ந்த உகரம் சொல்லின் இறுதியில் நெடில் பக்கத்திலும், பல எழுத்துகளைச் சார்ந்தும் வரும்போது, அது தனக்குரிய மாத்திரை யிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். 

குற்றியலுகரங்கள் எங்கெங்கே குறைந்து  ஒலிக்கும்?

 கு, க, டு, து, பு, று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச்சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம், குற்றியலுகரம் எனப்படும். 

சொல்லின் ஈற்று அயலெழுத்தை அடிப்படையாகக்கொண்டு அதனை அறுவகையாகப் பிரிப்பர்.

இது, தன் அயலெழுத்தை நோக்க, 

1.நெடில் தொடர்க் குற்றியலுகரம்

 2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

 3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

 4. வன்றொடர்க் குற்றியலுகரம்

5, மென்றொடர்க் குற்றியலுகரம்

 6. இடைத்தொடர்க்குற்றியலுகரம்

 என அறுவகைப்படும்.

1) நெடில் தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

நாகு, காசு, ஆடு, மாது, கோபு, ஆறு – இச்சொற்களை ஒலித்துப் பாருங்கள். வல்லின மெய்களின்மேல் ஊர்ந்த உகரம் (கு, க, டு, து, பு, று) சொல்லின் இறுதியில் வந்துள்ளது. 

இவ்வெழுத்துகளுக்குமுன் என்னென்ன எழுத்துகள் உள்ளன ? : உயிர்மெய் நெட்டெழுத்துகள் நான்கும், உயிர் நெட்டெழுத்துகள் இரண்டும் வந்துள்ளன.

இவ்வாறு உயிர்நெடில், உயிர்மெய் நெட்டெழுத்துகளை அடுத்து வரும் உகரமேறிய வல்லின எழுத்துகள் நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

நெடில்தொடர்க் குற்றியலுகரம் என்பது கு, ஈ, டு, து, பு, று ஆகிய எழுத்துகளை ஈற்றில்கொண்டு ஏடு, காசு என ஈரெழுத்துச் சொல்லாகவே வரும்.

2) ஆய்த தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன ?

    எஃகு, சுஃக, அஃது. இந்தச் சொற்களை ஒலித்துப் பாருங்கள். கு, சு து என்னும் வல்லின மெய்கள்மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தைத் (ஃ) தொடர்ந்து வந்துள்ளது. அதனால், இது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

 3) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?

கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள அழகு, அரசு, பண்பாடு, உனது, உருபு, பாலாறு-இச்சொற்களைப் படித்துப் பாருங்கள். வல்லின மெய்களை ஊர்ந்த உகர எழுத்துகள் (கு, சு, டு, து, பு, று) சொல்லின் இறுதியில் வந்துள்ளன. 

அவற்றுக்கு முன் என்னென்ன எழுத்துகள் வந்துள்ளன? உயிர்மெய் எழுத்துகள் வந்துள்ளன, சரியா.

இவ்விடத்தில் அவற்றை உயிர்மெய்யெழுத்துகள் எனச் சொல்லக் கூடாது. மு = ழ் + அர-ர்+அ பா – ப் + ஆ எனப் பிரித்துப் பார்த்தல் வேண்டும். 

 உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்பது கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளுக்குமுன் இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துகளைப்பெற்று வரும். ஈற்றயல் எழுத்து (அரசு, பாலாறு) உயிர்மெய்க் குறிலாகவோ நெடிலாகவோ இருக்கும். 

4) வல்லின தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

சுக்கு, கச்சு, பட்டு – இச்சொற்களைப் பாருங்கள். கு, சு, டு ஆகிய எழுத்துகளுக்குமுன், வல்லின மெய்யெழுத்துகள் வந்துள்ளன. அதனால் வல்லினத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

இதனைச் சுருக்கமாக வன்றொடர்க் குற்றியலுகரம் எனக் குறிப்பிடுவர். 

5) மென்றொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?

சங்கு, மஞ்சு, நண்டு, சந்து -இச்சொற்களைப் படித்துப் பாருங்கள்.ங்,ஞ்,ண்,ந் ஆகிய மெய்கள் வந்துள்ளதால் மென்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

6) இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?

கொய்து, சார்பு, மூழ் இச்சொற்கள் படித்துப் பாருங்கள். இதில் இடையிடையே  ய், ர், ழ் ஆகிய மெய்கள் வந்துள்ளன எனவே இது இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

1 கு,க,டு,து, டிறு என்பன வங்லினமெய்களின்மேல் உகரம் ஊர்ந்து வரும் எழுந்துகள்.
2. குற்றியலுகரத்துக்கு அரை பாத்திரை, ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம்,
3. இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றனைப் பெற்று வரும். நெடில்தொடர்க் குறியலுகாம் மட்டுமே இரண்டு எழுத்துகளைப்பெற்று வரும். 
(எ.கா.) ஆடு, மாடு, காது.
4. ஏனைய ஐவகைக் குற்றியலுகரச் சொற்கள் இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துகளைப் பெற்று வரும்.
(எ.கா) 
சுக்கு, பாலாறு, காட்டாறு நெடிலோடு ஆய்தம் உயிர்யமி பெலிஜிடைத் தொடர்பொழி இறுதி பன்மையூ முகரம் அக்கும் பிறமேல் தொடரவும் பெறுமே.
 (நன்னூல், 94)
குற்றியலிகரம் என்றால் என்ன?
 குற்றியலிகரம்பற்றிப் பார்ப்போம். இதனைக் குறுமை + இயல் + இகரம் =குற்றியலிகரம் எனப் பிரிக்கலாம். 
குறுமை என்றால் குறுகிய; இயல் என்றால் ஓசை; இகரம் என்றால் ‘இ’ என்னும் எழுத்து. எனவே, குறுகிய ஓசையுடைய இகரம், குற்றியலிகரம். 
குற்றியலுகரத்தின் உகரம் தன் ஒருமாத்திரையில் குறைந்து ஒலிப்பதுபோலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும், தன் ஒருமாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.
குற்றியலிகரம்  எங்குக் குறைந்து ஒலிக்கும் ?
நாகு + யாது = நாகியாது. வீடு + யாது = வீடியாது, இச்சொற்களை ஒலித்துப் பாருங்கள். நாகு, வீடு என்பன நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை நிலைமொழியாய் நிற்க, வருமொழியின் முதல் எழுத்து ‘ய’கரமாக இருப்பின், உகரம் இகரமாகும். 
இந்த ‘இகரம்’தான் குற்றியலிகரம் எனப்படும். அதாவது, நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வருமொழி யகரம் வரின், நிலைமொழி உகரம், இகரமாகத் திரிந்து தன்மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.
(எ.கா.) வண்டு+யாது = வண்டியாது; வரகு + யாது = வரகியாது; என்பது + யாது = என்பதியாது.
வேறு எங்காவது குற்றியலிகரம் வருமா?
வரும். கேண்மியா, சென்மியா ஆகியவற்றில் வரும். மியா என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரமும் ( மி = ம் + இ ) தன்மாத்திரையில் குறைந்து ஒலிக்கும். இதுவும் குற்றியலிகரம் எனப்படும்.
வகரம் வரக் குறள் உத்திரி இகரமும் அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய 
           – நன்னூல், 93 (குறள் – குறைந்த)
முற்றியலுகரம் என்றால் என்ன ?


குறைந்துவரும் ‘உகரம், இகரம்’ ஆகியவற்றின் மாத்திரை அளவு என்ன?
 அரை மாத்திரை.
அளவில் குறையாமல் இருந்தால், அதற்குப் பெயரென்ன?
அதற்குப் பெயர் முற்றியலுகரம். அதாவது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்.
பகு, பசு, படு, அது, தபு, பெறு – இவை தனிக்குறில் எழுத்தை த
2. காணு, உண்ணு, உருமு – இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (னு.மு) உகரங்கள் முற்றியலுகரங்கள்.
3. எழு, தள்ளு, கதவு – இவற்றின் ஈற்றிலுள்ள இடையின உகரங்கள்.
(ழு,ளு,எ) முற்றியலுகரங்கள். இவ்வாறு தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும்,பொதுவாகச் சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top