* நீதிமன்றத்தில் கொடுக்கும் வழக்கு வேறு ; இலக்கண வழக்கு என்பது வேறு. நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச்சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர். இஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்.
1) இயல்புவழக்கு என்றால் என்ன ? .
ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ,
அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இதனை
இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகையாகக்
கூறுவர்.
இலக்கணமுடையது என்றால் என்ன?
இலக்கணப்பிழை இல்லாமல் வழங்கி வருவதனை
இலக்கணமுடையது என்பர்.
சான்றாக,
யாழினி பாடம் படித்தாள்
இத்தொடர் இலக்கணப்பிழையின்றி அமைந்தது அல்லவா !
இலக்கணப்போலி என்றால் என்ன?
* நகர்ப்புறம், கால்வாய், கொம்பு நுனி போன்ற இலக்கணமுடைய
சொற்களைப் புறநகர், வாய்க்கால், நுனிக்கொம்பு என மாற்றி, நம்
முன்னோர் இலக்கணமுடையதுபோல வழங்கி வருவதனை
‘இலக்கணப்போலி’ என்கிறோம்.
மரூஉ என்றால் என்ன?
தஞ்சாவூர், கோயமுத்தூர் இவ்வூர்களை எவ்வாறு சுருக்கி அழைக்கிறோம் ?
தஞ்சை, கோவை என்று தானே ! தஞ்சாவூர், கோயமுத்தூர் இவை தஞ்சை,
கோவை எனச் சிதைந்து வந்துள்ளதால், இவற்றை மரூஉ என
அழைக்கிறோம்.
2) தகுதி வழக்குஎன்றால் என்ன ?
தகுதியான சொற்களைப் பேசுவது தருதி வழக்கு என்பர்.
இஃது இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படும்.
இடக்கரடக்கல் என்றால் என்ன ?
பலர் முன்னே கூறுவதற்கு இடர்ப்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கித்
தகுந்த சொற்களால், அப்பொருளைத் தெரிவிப்பது இடக்கரடக்கல்
என்பர். சான்றாக, ‘வாய் கழுவி வந்தேன்” என்னும் இத்தொடரை நீக்கி,
*வாய்பூசி வந்தேன்” எனக் கூறுவர்.
‘மங்கலம்’ என்றால் என்ன ?
அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை
வழங்குவது ‘மங்கலம்‘ என்பர். சான்றாக, இறந்தாரை இறைவனடி
சேர்ந்தார் எனக் கூறுவர்.
‘குழூஉக்குறி’ என்றால் என்ன ?
ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும்வகையில், ஒரு பொருளுக்குக்
குறிப்பாக வழங்கும் பெயரைக் குமூஉக்குறி என்பர்.
சான்றாகப் பொற்கொல்லர் பொன்னைப் ‘ பறி! என்பர்.