பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் விளக்கம்

 தமிழ் எழுத்துக்களில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச்சொல் , வினைச்சொல் , உரிச்சொல் , இடைச்சொல் ஆகியன ஆகும். இந்த பதிவில் அதனை பற்றி விரிவாக காண்போம். நால்வகை சொற்களை எடுத்துக்காட்டுடன் காண்போம்.

பெயர்ச்சொல் :

அம்மா , அப்பாவுடன் மாநகர் மதுரைக்கு சென்றோம். கூடவே என் தம்பியும் வந்தான்.

மேலே உள்ள எடுத்துக்காட்டில் வண்ணம் இட்ட சொற்களை படியுங்கள். அம்மா அப்பா மாநகர் மதுரை தம்பி ஆகிய சொற்கள் எந்த வகைச் சொற்கள் தெரியுமா?

இவை அனைத்தும் பெயர்ச்சொற்கள் ஆகும். ஒரு பெயரை குறித்து வந்தால் அவை பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படுகிறது. பெயர்ச்சொல் எடுத்துக்காட்டுகள் பல உள்ளன.

எடுத்துக்காட்டு :

மதுரை ,திருச்சி, அத்தை, மாமா, குருவி, விலங்கு என எந்த ஒரு பொருளை குறித்து வந்தாலும் அவை பெயர்ச்சொற்கள் ஆகும்.

வினைச்சொல் :

ஒரு பொருளின் இயக்கத்தை குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள் என அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு

வந்தான் ,நடந்தான் ,சென்றான், செய்தான்,…. இதுபோல ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்து வருவது வினைச்சொல் ஆகும்.

உரிச்சொல் :

உரிச்சொல் என்பது ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்.

ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும் போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும் போதும் உரிச்சொல் நிலையினை பெறுகிறது.

இது பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவும் இருக்கும்.

இடைச்சொல் :

அம்மா , அப்பாவுடன் மாநகர் மதுரைக்கு சென்றோம். கூடவே என் தம்பியும் வந்தான்.

ஏற்கனவே பார்த்த எடுத்துக்காட்டில் இருந்து பார்ப்போம்.  “தம்பியும் ” இதில் தம்பி +உம்  என்பதை பார்ப்போம். 

உம் என்பது இணைப்புச் சொல்லாக வந்துள்ளது. இதேபோல ஒரு சொல்லுக்கு இடையில் வரும் சொற்களை இடைச் சொல் என அழைக்கப்படுகிறது .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top