Ilakkana Tamilan

கண்ணன் நிலையில் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்? மதிப்புக் கல்வி

 கண்ணன் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரன்.  கோடைவிடுமுறையில் கால்பந்து விளையாட்டுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்பினான்; பெற்றோரிடமும் ஒப்புதல் பெற்றுவிட்டான்.  எதிர்பாராதவிதமாக ஊரிலிருந்து வந்த அவனுடைய அத்தையும் மாமாவும் கோடைவிடுமுறையைத்  தங்களோடுதான் கழிக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.  கண்ணனுக்குக் கால்பந்து விளையாட்டுப்பயிற்சியை விடுவதற்கு மனமில்லை; பெரியவர்களின் பேச்சுக்கும் மதிப்புக் கொடுக்க விரும்புகிறான். இந்த நிலையில் கண்ணன் என்ன முடிவு எடுத்திருப்பான் ? கண்ணன் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பானா? பெரியவர்களை மதிப்பானா ? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ? […]

கண்ணன் நிலையில் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்? மதிப்புக் கல்வி Read More »

இயல்பு புணர்ச்சி, விகார புணர்ச்சி-தமிழ் இலக்கணம்

புணர்ச்சி என்றால் என்ன? வாழைமரம், வாழைப்பழம். இவ்விரு சொற்களையும் நோக்குங்கள். முதல் சொல்லில் வாழை + மரம் = வாழைமரம் என இருசொற்கள் இணைந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே சேர்ந்துள்ளன. இரண்டாவது சொல்லில் வாழை + பழம் = வாழைப்பழம் என இருசொற்கள் இணையும்போது வல்லின மெய் (ப்) சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு இருசொற்கள் இணைவதற்குப் புணர்ச்சி என்பது பெயர். 1) இயல்பு புணர்ச்சி என்றால் என்ன? முதல் தொடரில் இயல்புப்புணர்ச்சியும் இரண்டாவது தொடரில் விகாரப்புணர்ச்சியும்

இயல்பு புணர்ச்சி, விகார புணர்ச்சி-தமிழ் இலக்கணம் Read More »

மரபு வழா நிலை என்றால் என்ன? இலக்கணத் தமிழன்

மரபு வழா நிலை : எந்தப பொருளை, எந்தச் சொல்லால், எவ்வழியால் அறிவுடையோர் கூறினாக்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வழியால் கூறுதல் மரபு எனப்படும்.  மரபு – (எடுத்துக்காட்டு) {குதிரை குட்டி யானை குட்டி, யானை கன்று , பசுவின் கன்று , யானை பாகன், ஆட்டிடையன் } மரபு வழு – (எடுத்துக்காட்டு) {குதிரைக் குஞ்சு, யானையிடையன்  , பசுவின் குட்டி , ஆட்டுப் பாகன் } “எப்பொருள் எச்சொலின் எவ்வா துயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல்

மரபு வழா நிலை என்றால் என்ன? இலக்கணத் தமிழன் Read More »

தாய்மொழி வழிக் கல்வி – தமிழ் கட்டுரை

முன்னுரை : கல்வி என்பது நம் அறியாமையைப் போக்கும் கருவி ஆகும். இதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்கு நம் தமிழ்ச் சான்றோர்கள் ‘இளமையில் கல்’ என்றும் ‘கற்க கசடற’ என்றும் கூறியுள்ளனர். அப்படிப்பட்ட கல்வியைநாம் நம் தாய்மொழியில் கற்பது சிறந்தது என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.   தாய்மொழிக் கல்வியின் தேவை :   உள்ளங்கை நெல்லிக்கனிபோல:  (தெளிவாக அறிதல்) தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் மாணவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக விளங்கியது. ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

தாய்மொழி வழிக் கல்வி – தமிழ் கட்டுரை Read More »

தமிழ் கும்மி பாடல்-பெருஞ்சித்திரனார்

 அறிமுகம் : கூட்டமாகக்கூடிக்‌ கும்மியடித்துப்‌ பாடி ஆடூவது மகிழ்ச்சியான அனுபவம்‌. கும்மியில்‌ தமிழைப்‌ போற்றிப்பாடி ஆடூவது பெரும்‌ மகிழ்ச்சி தருவதாகும்‌. வாருங்கள்‌! தமிழின்‌ பெருமையை வாயாரப்‌ பேசலாம்‌. காதாரக்‌ கேட்கலாம்‌. இசையோடு பாடலாம்‌. கும்மி கொட்டி ஆடலாம்‌. கும்மி பாடல் : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்‌          கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்‌ எட்டுத்‌ திசையிலும்‌ செந்தமிழின்‌ புகழ்‌                எட்டிடவே

தமிழ் கும்மி பாடல்-பெருஞ்சித்திரனார் Read More »

ஆறு வகை வினா , எட்டு வகை விடை-தமிழ் இலக்கணம்

 ஆறுவகை வினா வகைகள் : அறிதல், அறியாமை, ஐயுறல், கொளல், கொடுத்தல், ஏவுதல் ஆகிய ஆறுவகைப் பொருளையும் தருமாறு வரும் ஆறுவகை வினாக்களையும் புலவோர் தவறாமல் கொள்வர்.  1. அறிவினா : தான் ஒரு பொருளை அறிந்திருந்து, அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதை அறிதற் பொருட்டு, அதனைக் குறித்துப் பிறரிடம் கேட்பது.  எ-டு : ஆசிரியன் மாணவனிடம் ‘இத் நூற்பாவிற்குப் பொருள் யாது?” எனக் கேட்பது 2.அறியா வினா : தான் அறியாத ஒரு பொருளை அறிந்து

ஆறு வகை வினா , எட்டு வகை விடை-தமிழ் இலக்கணம் Read More »

தமிழ் செழித்து வளர்ந்த விதம் குறித்து தமிழ்விடு தூது கூறும் தகவல்கள்

தமிழ் செழித்து வளர்ந்த விதம் தமிழே! உமக்குத் தலைமைப் பேறு அளித்தால், உமக்கு ஒப்பாவர் ஒருவருமிலர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் வயலின் வரப்புகளாகவும், துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும் விளங்கின. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேர் உழவர் உழவு செய்ய, வைதருப்பம், கொடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுன் நன்னெறிகளே விதைகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன விளைபொருள்களாயின. 

தமிழ் செழித்து வளர்ந்த விதம் குறித்து தமிழ்விடு தூது கூறும் தகவல்கள் Read More »

சீறாப்புராணம் புலி வசனித்த படலம்

சீறாப்புராணம் – புலி வசனித்த படலம் நபிமுகம்மதுவை, வணங்கி ஒருவன் கூறியசெய்தி: * அடர்ந்த காட்டில் வாழும் புலியொன்று அங்கு வாழும் சிங்கம் தவிர்த்த மற்ற விலங்குகளுக்கும், அவ்வழியே வரும் மக்களுக்கும் பெருந்தொல்லை கொடுக்கிறது. அப்புலியைக் கண்டு மக்களும் அஞ்சுகின்றனர்; விலங்குகளும் அஞ்சுகின்றன”. என்று முகம்மது நபியை வணங்கிய ஒருவன் கூறினான்.  புலி இருக்குமிடம் தெரிவித்தல்: முகம்மது நபியும் மனிதன் ஒருவனும் நடக்கின்ற பாதையினிடத்து ஒரு காதவழித் தொலைவில் நெடிய அகழி போன்ற நீரோடை உண்டு. அதனருகே

சீறாப்புராணம் புலி வசனித்த படலம் Read More »

மேடைப்பேச்சு முக்கூறுகள்

 பேசும் பொருளை ஒழுங்கு முறைக்கு கட்டுப்படுத்தி பேச்சின் தொடக்கம் இடைப்பகுதி முடிவு என பகுத்து பேசுவதையே சிறந்த பேச்சு முறை என்கிறோம். இதனை எடுத்தல், கொடுத்தல், முடித்தல் என கூறலாம். எடுத்தல் : பேச்சைத் தொடங்குவது எடுப்பு. பேச்சின் தொடக்கம் நன்றாக இல்லாவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினைக் நல்லெண்ணம் தோன்றாது தட்டுத் தடங்கலின்றிப் பேசுவதற்குத் குறித்த தொடக்கமே அடித்தளமாகும்.  இதையும் படிக்க : கேட்போரைத் தன்வயப்படுத்தும் முறையில் பேச்சைத் தொடங்குதல் வேண்டும். அவையோர் தம் உள்ளங்களைக் கேட்பதற்குரிய பக்குவத்தில்

மேடைப்பேச்சு முக்கூறுகள் Read More »

மேடைப்பேச்சு சிறப்புற அமைவதற்கான வழிமுறைகள்

 பேச்சும் மேடைப் பேச்சும் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக் கலையும் ஒன்று. பேச்சு வேறு. மேடைப் பேச்சு வேறு. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.  பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததை உணர்த்தும் வகையில் தெரிவிக்க வேண்டும். பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப் பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதிக்க வேண்டும். பிறருக்கு எழுதி உணர்த்துவதைக் காட்டிலும் இனிய முறையில் பேசி உணர்த்தும் மேடைப்

மேடைப்பேச்சு சிறப்புற அமைவதற்கான வழிமுறைகள் Read More »

Scroll to Top