Ilakkana Tamilan

தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதை விளக்கு.

விண்ணியல் அறிவு : பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. மேலை நாட்டறிஞர் இது குறித்து விரிவாக ஆய்ந்துள்ளனர்; ஆய்ந்தும் வருகின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதைப் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலைநாட்டினர் உறுதி செய்தனர்;   இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதையும். இவ்வண்டப்பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது. வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. வானூர்தியைப் பழந்தமிழர்கள் விண்ணில் செலுத்தியிருக்கலாம் என […]

தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதை விளக்கு. Read More »

அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்?

 முதல் உரிமைப் போர் : மூடநம்பிக்கைகளும் தீய பழக்கங்களும் சமுதாயத்தை அரித்துக் கொண்டிருந்த போது, சமுதாயத்தைச் சமப்படுத்துவதற்குச் சிந்தனையாளர்கள் பெரிதும் போராட வேண்டியிருந்தது.  1927 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 20ஆம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பெற்ற போராட்டம் ஆகும்.  சாதி களையப்பட வேண்டிய களை ;  இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிர் அம்பேத்கர். சாதி என்பது

அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்? Read More »

அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள் – இலக்கிய தமிழன்

கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர் : கற்பித்தல் அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்பு வெறுப்பற்ற முறையில் கற்பித்தல் நிகழ்தல் வேண்டும். மாணவனுக்குள் தகவல்களைத் திணிப்பதாகக் கல்வி இருத்தல் கூடாது:  அது அவனது ஊக்கத்தைத் தூண்டுவதுடன் தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருத்தல் வேண்டும் என்றும் சுற்றல், கற்பித்தலின் உயர்ந்த குறிக்கோள் பற்றி அண்ணல் அம்பேதகர் குறிப்பிடுவார். அம்பேத்கர் 1946-ஆம் ஆண்டு மக்கள் சுல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார். இவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு

அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள் – இலக்கிய தமிழன் Read More »

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பெரியார் கூறும் கருத்துகள்

 பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மற்றும் அன்று. அதுவே சமூக மாற்றத்திற்கும் இன்றி அமையாதது. ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும் தாராளமாக கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள பெருங்கேடு பெண்களை பகுத்தறிவாற்ற ஜீவர்களாக வைத்திருக்கும் கொடுமையே ஆகும்.  பெண்ணுரிமை பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும். அவர்கள் ஆணுக்கு இளைத்தவர்கள் அல்லர். அவர்கள் தம் கணவர்க்கு மட்டும் உழைக்கும் அடிமையாய் இருத்தல் கூடாது; மனித

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பெரியார் கூறும் கருத்துகள் Read More »

அகத்தியம் அறிமுகம்-நூல் குறிப்பு

 அகத்தியம் பற்றி எழுதுக. இது அகத்தியரால் எழுதப்பட்ட இலக்கண நூலாகும். இது முதல் சங்கத்தில் தோன்றி முச்சங்கத்திலும் இருந்தது; இந்நூல், முழுமம் கிடைக்கவில்லை. உரையாசிரியர்களால் மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்ட சில நூற்பாக்களே கிடைத்துள்ளன.  இந்நூற்பாக்களும் தொல்காப்பயம் போன்று திட்பமும், நுட்பமும் உடையனவாக இல்லை. தொல்காப்பியத்திற்கு அகத்தியமே மூலநூல் என்னும் கருத்தும் நிலவுகின்றது. இது 12,000 சூத்திரங்களால் ஆனது எனக் கருதப்படுகின்றது.  எழுத்து, சொல், பொருள். யாப்பொடு அரசியல், அமைச்சவியல், பார்ப்பனவியல், சோதிடவியல் முதலானவற்றுக்கும் இலக்கணம் கூறுவது “ஆனாப் பெருமை

அகத்தியம் அறிமுகம்-நூல் குறிப்பு Read More »

வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) அருளிய பாடல்கள் – சத்திய தர்மசாலை/சன்மார்க்க சங்கம்

  வள்ளலார் அருளிய பாடல்கள் : தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி மனமுருகிப் பாடி மகிழ்வார். இப்பாடல்களின் தொகுப்புதான் தெய்வமணிமாலை. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார். உறவு கலவாமை வேண்டும்” என்பன போன்ற அற்புதமான பாடல்கள் கற்போரை மனமுருகச் செய்யும். இராமலிங்கர்.  ‘வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும், திருவொற்றியூர்ச் சிவபெருமான் மீது ‘எழுத்தறியும் பெருமான் மாலை‘ என்னும் நூலையும் பாடினார். இவர் பொதுமை

வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) அருளிய பாடல்கள் – சத்திய தர்மசாலை/சன்மார்க்க சங்கம் Read More »

தமிழரின் மருத்துவ அறிவு

எப்போது நோய் மிகும்?  ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்‘ என்பர், திருமூலர். திருவள்ளுவர் மருந்து என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்து உள்ளார். ஆங்கில மருத்துவம் நோய்க்கிருமிகளைக் கண்டறிந்து அழிப்பதைக் கூறுகிறது. நுண்ணுயிர் பெருக்கம் இயற்கையான ஒன்றே.  அவற்றை அழிக்க முனைகின்றபோது, அம்மருத்தால் உடலுக்கும் ஊறு விளையும். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலையே காரணமாகும். அவற்றின் சமநிலை தவறும் போது நோய்மிகும்.                

தமிழரின் மருத்துவ அறிவு Read More »

காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக.

 காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது குஜராத்திப் பாடல் ஒன்றைக் கேட்டார். “தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்; உண்மைப் பொருண்மை உண்டு” என்ற அப்பாடல் இன்னாசெய்யாமை என்னும் கருத்தை அவருள் விதைத்தது. அன்பு செலுத்துதல் : காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சிரவண பிதுர்பத்தி என்ற நாடக நூலைப் படித்தார். அதில் சிரவணன் என்ற இளைஞன் பார்வையற்ற தன் தாய், தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப் படம் இருந்தது. அதைப்

காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக. Read More »

காந்தியடிகளின் அறவழிப்போர் முறை- இலக்கிய தமிழன்

நான் ஒரு தேசபக்தன் என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமாணமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன், அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும் ‘தான் ” என்று அவரே கூறுகிறார்.  அவர் இராமனைப் போற்றியதும், அவன் மனிதனாகப் பிறந்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து, மானுடரோடு மற்ற உயிரினங்களையும் உடன் பிறந்தவர்களாக ஏற்று, உலகம் உய்ய வழி நாட்டியதால்தான். மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது. மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்த்தப்படுவதைக் காட்டிலும், மனிதத் தன்மையால் பிறருக்கு

காந்தியடிகளின் அறவழிப்போர் முறை- இலக்கிய தமிழன் Read More »

சங்க காலம் ஒரு பொற்காலம் என்பதை விளக்குக.

   ” சங்க காலம் ஒரு பொற்காலம் “ பழந்தமிழர் வாழ்வியல் முறைகளை சங்க இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். அவர்களிடம் வேறுபாடு இல்லை.  மனிதநேயம் மிகுந்து இருந்தது. வீரத்தில் சிறந்து விளங்கினாலும் கொடையில் அதைவிடச் சிறந்து விளங்கினார்கள். அரசர் முதல் அனைவரும் வேறுபாடின்றி பழகினார். ஆதலால் சங்க காலம் பொற்காலம் என்னும் தகுதியைப் பெறுகின்றது. அனைவரும் சமம்  மக்கள் அனைவரும் பிறப்பால் ஒரே தன்மையினர் ஆவர். தொழிலால் அவர்கள் வேறுபடுகின்றனர். பிறப்பொக்கும் எல்லா

சங்க காலம் ஒரு பொற்காலம் என்பதை விளக்குக. Read More »

Scroll to Top