Tamil Ilakkanam

தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? Ilakkana Tamilan

  தொகாநிலைத்தொடர் ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். எ.கா காற்று வீசியது குயில் கூவியது முதல் தொடரில் காற்று” என்னும் எழுவாயும் “வீசியது என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது. அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது. தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்  1. எழுவாய்த்தொடர் […]

தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? Ilakkana Tamilan Read More »

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

  விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள் கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது.  (எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு ‘) அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது. இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும்

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள் Read More »

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்.(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற கவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும்) அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன.  அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம். அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம்

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள் Read More »

வழக்கு என்றால் என்ன? தமிழ் இலக்கணம்

வழக்கு : எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர். இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும். இயல்பு வழக்கு : ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். I. இலக்கணமுடையது 2. இலக்கணப்போலி 3.மரூஉ 1. இலக்கணமுடையது : நிலம், மரம்,

வழக்கு என்றால் என்ன? தமிழ் இலக்கணம் Read More »

உவமை அணி என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

 உவமை அணி : தொல்காப்பியர் உவமைஅணி குறித்துக் கூறியுள்ளார் என்பதையும் உவமை அணியே பொருளணிகளில் தலைமை சான்றது என்பதையும் முன்னர்க் கண்டோம்.  காலப்போக்கில்உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத் ‘தாய் அணி‘ என்று கூறுவர். உவமை அணியின் இலக்கணம் : 1) ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.  2) பொருள்களுக்கு

உவமை அணி என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

தன்மை அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள் யாவை?

 தன்மை அணி : தண்டியலங்கார ஆசிரியர் பொருளணியியலில் குறிப்பிடும் முதலாவது அணி இதுவே. இதற்கு மற்றொருபெயர் ‘தன்மை நவிற்சி அணி’ என்பதாகும். தன்மை என்பதற்கு இயல்பு அல்லது இயற்கை என்று பொருள். தன்மை அணியின் இலக்கணம் எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டுபாடுவது தன்மை அணி ஆகும். இதனை, எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்                  

தன்மை அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள் யாவை? Read More »

குற்றியலுகரம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

குற்றியலுகரம் குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள் மூன்று சொற்களிலும் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம்.  அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. கு.சு.டு.து.மு.று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுகியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.  இவ்வாது தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

இயல்பு புணர்ச்சி, விகார புணர்ச்சி-தமிழ் இலக்கணம்

புணர்ச்சி என்றால் என்ன? வாழைமரம், வாழைப்பழம். இவ்விரு சொற்களையும் நோக்குங்கள். முதல் சொல்லில் வாழை + மரம் = வாழைமரம் என இருசொற்கள் இணைந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே சேர்ந்துள்ளன. இரண்டாவது சொல்லில் வாழை + பழம் = வாழைப்பழம் என இருசொற்கள் இணையும்போது வல்லின மெய் (ப்) சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு இருசொற்கள் இணைவதற்குப் புணர்ச்சி என்பது பெயர். 1) இயல்பு புணர்ச்சி என்றால் என்ன? முதல் தொடரில் இயல்புப்புணர்ச்சியும் இரண்டாவது தொடரில் விகாரப்புணர்ச்சியும்

இயல்பு புணர்ச்சி, விகார புணர்ச்சி-தமிழ் இலக்கணம் Read More »

மரபு வழா நிலை என்றால் என்ன? இலக்கணத் தமிழன்

மரபு வழா நிலை : எந்தப பொருளை, எந்தச் சொல்லால், எவ்வழியால் அறிவுடையோர் கூறினாக்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வழியால் கூறுதல் மரபு எனப்படும்.  மரபு – (எடுத்துக்காட்டு) {குதிரை குட்டி யானை குட்டி, யானை கன்று , பசுவின் கன்று , யானை பாகன், ஆட்டிடையன் } மரபு வழு – (எடுத்துக்காட்டு) {குதிரைக் குஞ்சு, யானையிடையன்  , பசுவின் குட்டி , ஆட்டுப் பாகன் } “எப்பொருள் எச்சொலின் எவ்வா துயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல்

மரபு வழா நிலை என்றால் என்ன? இலக்கணத் தமிழன் Read More »

ஆறு வகை வினா , எட்டு வகை விடை-தமிழ் இலக்கணம்

 ஆறுவகை வினா வகைகள் : அறிதல், அறியாமை, ஐயுறல், கொளல், கொடுத்தல், ஏவுதல் ஆகிய ஆறுவகைப் பொருளையும் தருமாறு வரும் ஆறுவகை வினாக்களையும் புலவோர் தவறாமல் கொள்வர்.  1. அறிவினா : தான் ஒரு பொருளை அறிந்திருந்து, அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதை அறிதற் பொருட்டு, அதனைக் குறித்துப் பிறரிடம் கேட்பது.  எ-டு : ஆசிரியன் மாணவனிடம் ‘இத் நூற்பாவிற்குப் பொருள் யாது?” எனக் கேட்பது 2.அறியா வினா : தான் அறியாத ஒரு பொருளை அறிந்து

ஆறு வகை வினா , எட்டு வகை விடை-தமிழ் இலக்கணம் Read More »

Scroll to Top