உவம உருபு என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
தமிழ்ச்செல்வி குயில்போலப் பாடினாள். இத்தொடர் குரலினிமையை உணர்த்துகிறது. குரலினிமைக்குக் குயிலின் குரல் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருபொருளைச் சிறப்பித்துக்கூற, அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே உவமித்துக் கூறுதல் எனப்படும். இவ்வாறு, உவமித்துக் கூறுவதனால் புரியாதன எளிதில் புரியும்; கேட்டார்க்கு இன்பம் பயக்கும். சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும். அதற்கு ஒப்பாகக் காட்டப்படும் பொருள் உவமை எனப்படும். இதனை உவமானம் எனவும் கூறுவர். உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் வரும் உருபு, உவம உருபு எனப்படும். […]
உவம உருபு என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »